திருப்பட்டூர் அற்புதங்கள்

by:வி.ராம்ஜி
Synopsis

கோயில்கள் நம் மனக் குழப்பங்களைப் பறந்தோடச் செய்யும் திருத்தலங்கள். பொதுவாக வாழ்க்கைச் சிக்கலில் மக்கள் உழன்று தவிக்கும்போதும் துன்புறும்போதும் அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தெரியாமல் வருந்துவார்கள். விதியை நினைத்து நொந்துபோவார்கள். திருப்பங்கள் ஏற்படாதா? தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மாட்டானா? எனப் புலம்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் திருப்பட்டூர் வந்து இறைவனைத் தரிசித்து எல்லா வளமும் பெறலாம். இங்கு அமைந்திருக்கும் பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா, காசி விஸ்வநாதர் ஆலயங்கள் குறித்தும், திருப்பட்டூர் அற்புதங்கள் குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். ‘திருப்பட்டூர் அற்புதங்கள்’ எனும் தலைப்பில் சக்தி விகடனில் தொடராக வந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். படிக்கப் படிக்க மெய்சிலிர்க்கும் அற்புதங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. வியாக்ரபாதர் பூஜித்த காசி விஸ்வநாதர் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், புலிக்காலால் அவர் உண்டாக்கிய தீர்த்தக்குளம், விதி கூட்டி அருளிய பிரம்மா, சுந்தரர், மாசாத்தனார் என எல்லோரையும் படிக்கப் படிக்க, நாமும் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது. திருப்பட்டூர் என்று சொல்லப்படும் திருப்பிடவூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தலபுராண தெய்வீகத் தகவல்களை அற்புதமாகத் தொகுத்து, ஆன்மிக அன்பர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வி.ராம்ஜி. இங்கு வந்து தரிசித்ததால் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு நலம் பல பெற்ற பலரின் அனுபவங்களை நெகிழ்வோடு விவரித்துள்ளார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சரண் புகுந்தோரின் வாழ்வில், எல்லா வளங்களும் அருளி ஆட்கொள்ளும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசிக்க இந்த நூல் உங்களையும் அழைத்துச் செல்லும்!

Buy the eBook
List Price RS .125
Your price
RS .88
You save Rs. 37(29%)

You can read this item using Vikatan Mobile App: