மனோதத்துவம்

by:டாக்டர் அபிலாஷா
Synopsis

மனதிடம் மண்டியிடுவதும் அதையே மண்டியிடச் செய்வதும் அவரவரின் செயல்முறைகளைப் பொறுத்ததே. வாழ்க்கை ஓட்டத்தில் அவ்வப்போது வரும் தோல்வியைத் துடைத்து எடுத்து சிகரத்தில் ஏற முயற்சிப்பதுதான் மனித மனத்தின் மங்காத இயல்பு. ஆனால், ‘பை நிறைய பணம்; மனிதம் இல்லா குணம்’ என நகர்ந்துகொண்டு இருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில், மற்றவரின் மனம் புண்படுவதைப் பற்றி சற்றும் சிந்திக்காத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். தினம் தினம் சூடுபட்டு, மனதுக்கு அமைதியையும், உடலுக்கும் ஆரோக்கியத்தையும் நாடுவோர் அநேகர். இவர்களின் மனதில் எழும் உணர்வுகளால் உயிரையும் இழந்துள்ளோர் பலர். உணர்வின் அடிப்படையிலான வாழ்க்கைச் சிக்கல்களைப் பக்குவமாக அவிழ்த்து, மனிதனுக்கே உரிய மாண்புகளை மருத்துவரீதியில் நமக்குத் தெளிவுபடுத்துவதே ‘மனோதத்துவம்.’ மனோதத்துவம் என்றால் என்ன, அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும், மனரீதியில் பாதிப்படைந்தவர்களின் செயல்முறைகள் என்ன, அவர்களை நாம் எப்படிக் கையாள வேண்டும், அவர்களுக்கான அபாய நிலை எது, மனநலத்துக்கும் மனோதத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன, மனநலம் பாதிப்படைந்தோருக்கான சிகிச்சை முறையில் மனோதத்துவத்தின் பங்கு என்ன என்பது போன்ற மனோதத்துவ மருத்துவ வழிமுறைகளை எளிதாக எழுதியுள்ளார் டாக்டர் அபிலாஷா. மேலும், அன்றாட வாழ்வின் அனல் பறக்கும் சூழலில் மனஅமைதியை விற்று, மனநோயைப் பெற்று அல்லாடும் நபர்களுக்கு, தான் அளித்த மனோதத்துவ சிகிச்சை முறை அனுபவங்களையும் இந்த நூலில் சேர்த்திருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. பலதரப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக வாழ்க்கை கசந்துபோனதாக எண்ணி, விரக்தியின் விளிம்பில் இருந்து விடுபடத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பை நல்கும் நன்னூல் இது.

Buy the eBook
List Price RS .100
Your price
RS .70
You save Rs. 30(30%)

You can read this item using Vikatan Mobile App: