மரபு வழி மருத்துவம்

by:முரளி கிருஷ்ணன்
Synopsis

இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மருந்துகளோ பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. மரபு வழி மருத்துவம் பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை. இதனால், சமீபகாலமாக மரபு வழி மருத்துவமே மாற்று வழியாக உலகில் வலம் வருகிறது. மனித சமுதாயத்தை வாட்டும் பல நோய்களுக்கு அருமருந்தை அள்ளித் தருகிறது இந்த மருத்துவ முறை என்றால் அது மிகையாகாது. உதாரணமாக குடி நோய் என்பது மனித சமுதாயத்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாக உள்ளது. இதைத் தீர்க்க எந்த மருத்துவ முறையிலும் சரியான தீர்வு இல்லை. ஆனால், மரபு வழி மருத்துவத்தின் மூலம் குடி நோயைக் குணப்படுத்த முடியும் என்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். குடிக்க வேண்டும என்கிற எண்ணம் வரும்போதெல்லாம் லவங்கப்பூ, கிராம்பு இவற்றைச் சம அளவு சேர்த்து வாயில் போட்டு மென்று சுவைக்க வேண்டும். வில்வ இலைக் கொழுந்தை தினமும் காலை, மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இளம் தென்னம் மட்டையை இடித்து சாறு பிழிந்து தினமும் காலை, மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் நூறு மில்லி அளவு குடிக்க வேண்டும். வெந்தயத்தை தூள் செய்து தினமும் காலை மாலை இரண்டு வேளை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்... இதுபோன்ற எண்ணற்ற சிகிச்சை முறைகளை சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். பெண் மலடு நீங்க, நெஞ்சு வலி சரியாக, மஞ்சள் காமாலை நோயை விரட்ட, தொண்டை வலி, தூக்கமின்மை, நகச்சுற்றி, நினைவாற்றல் பெருக, நீர்க் கடுப்பு, படை, பல் வலி, படுக்கைப் புண், மாதவிடாய் கோளாறு, மாரடைப்பு... பல நோய்களுக்கு மரபு வழி மருத்துவத்தை இந்த நூல் சொல்லித்தருகிறது. கேள்விப்படக்கூடிய, நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தினாலே தீராத நோய்களும் தீரும் என்கிறது இந்த நூல். இது நம் மருத்துவத்தைப் பற்றிய பயனுள்ள நூல் என்பதைப் படித்தால் உணர்வீர்கள்.

Buy the eBook
List Price RS .105
Your price
RS .74
You save Rs. 31(29%)

You can read this item using Vikatan Mobile App: