வலி தீர வழிகள்

by:டாக்டர் எம்.செந்தில்குமார்
Synopsis

ஆ... ஊ.. அச்... இந்த கதறல்களை நாம் கேட்பது சர்வசாதாரணமாகி விட்டது. மனித குலத்தின் முன் நிற்கும் தலையாய பிரச்சனை எது என்று கேட்டால் வலி என்றுதான் பெரும்பாலோர் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உடல் வலி, கைவலி, கால்வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகுத்தண்டு வலி என உயிரை எடுக்கக்கூடிய வலியின் வேதனையை சொல்லி மாளாது என்றுச் சொல்பவர்களுக்காகத் தான் இந்த புத்தகம். வலி என்றால் என்ன? வலி தரும் வேதனைகள் அல்லது விளைவுகள் எத்தகையது? வலியை வரும்முன் தடுப்பது எப்படி? மொத்தத்தில் வலி இல்லாமல் வாழ்வது எப்படி? என வலிதீர்க்கும் வழிகளை அடுக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர். வலியை தீர்ப்பது என்பது சுலபமான காரியமா? நடைபயிற்சியே பெரும்பாலான வலிகளுக்கு சிறந்த நிவாரணி என்கிறார் நூலாசிரியர். நெஞ்சை நிமிர்த்தி தரையைப் பார்க்காமல் இருபது அடி முன்னோக்கிப் பார்த்து நடக்க வேண்டும், கைகளை ஆட்டி பக்கவாட்டில் உயர்த்தாமல் அதேவேளை நெஞ்சுப்பகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்ல வேண்டும் , தினமும் 30 நிமிடம் நடப்பதே வலியை விரட்டும் என்று சொல்கிறார் நூலாசிரியர். என்ன செய்தாலும் வலி போகவில்லை. உயிரை எடுக்கிறதே வலி என்று வருத்தப்படுபவர்களின் துக்கத்தைப் போக்க, எந்த மாத்திரையும், வேதிப்பொருள் கலந்த வலி நிவாரணியும் இல்லாமல், பச்சைக்கலர், சிவப்புக்கலர் பெயின் பாம்கள் தடவாமல் வலியை குணமாக்க வழிகள் இந்நூலில் ஏராளமாக உள்ளன. படியுங்கள்... வலி உங்களை விட்டு விலகும்.

Buy the eBook
List Price RS .130
Your price
RS .91
You save Rs. 39(30%)

You can read this item using Vikatan Mobile App: