ஆங்கிலம் A to Z

by:எஸ்.லாரன்ஸ் ஜெயக்குமார்
Synopsis

1800-களில் நடந்த தொழிற்புரட்சிக்குப் பிறகு, இங்கிலாந்து பேரரசு உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாற்றியது. ஆம், ஆங்கிலம் உலக மொழியானது. பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின. ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது. ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலம் இல்லாத இடமே இல்லை. தொடர்புமொழியில் ஆங்கிலமே முதலிடம் வகிக்கிறது. ஆக, ஆங்கிலம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதொன்று என்ற நிலையில் அதை எளிமையாக கற்க இந்த நூலில் வழிகாட்டுகிறார் பேராசிரியர் எஸ்.லாரன்ஸ் ஜெயக்குமார். முக்கிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணத்தோடு ஆங்கிலம் பேசும் முறை என ஆங்கிலப்பயிற்சி முறைகள் அற்புதமாக இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப்படிக்கும் வாசகர் நிச்சயம் ஆங்கில மேதாவியாக தன்னை மாற்றிக்கொள்வார் என்பது உறுதி. தமிழ் மூலம் ஆங்கிலத்தைக் கற்று, தகவல் தொடர்பில் அசத்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

Buy the eBook
List Price RS .460
Your price
RS .322
You save Rs. 138(30%)

You can read this item using Vikatan Mobile App: