ஸ்ரீ ராமாநுஜர்

by:இராஜா ஆதிபரஞ்ஜோதி
Synopsis

தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ஸ்ரீராமாநுஜர். வேதாந்தத்தின் விளக்கமாக விசிஷ்டாத்வைதத்தை முன்வைத்தவர். இந்திய தேசத்தின் இணையற்ற குருமார்கள் மூவர். ஒருவர் ஆதிசங்கரர். மற்றவர் மத்வர். மூன்றாமாவர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய தத்துவவாதி ஸ்ரீராமாநுஜர். தமிழ்நெறியை வளர்த்து போற்றிய ஸ்ரீராமாநுஜர் ஒரு சீர்திருத்தவாதி. திருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று சீர்திருத்தினார். பள்ளிகொண்ட நாதனுக்கு அன்றாடம் நடக்க வேண்டிய பூஜைகளை ஒழுங்குபடுத்தினார். அப்போது அவருக்கு எதிர்ப்பு உண்டானது. ஆண்டாண்டு காலமாக செய்யப்பட்டு வரும் முறையில் மாற்றம் கொண்டுவந்தால், பழைமைவாதிகள் உடனே ஏற்பார்களா என்ன? ஸ்ரீராமாநுஜரை கொல்லும் முயற்சிகள் நடந்தன. அனைத்தையும் வென்று புதிய நெறிமுறைகளை உருவாக்கி வைணவத்தை காத்தவர் ஸ்ரீராமாநுஜர். அரங்கன் கோயில் மட்டுமின்றி திருமலை திருவேங்கடவன் கோயிலுக்குச் சென்று அங்கும் திருக்கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி இன்றளவும் அவரது ஏற்பாட்டின்படியே அனைத்து பூஜைகளும் ஏழுமலையானுக்கு நடைபெற்று வருகிறது. கோயில் நிர்வாகத்தையும், வைணவ மட நிர்வாகத்தையும் ஒருங்கே கவனித்து, திருவரங்கனின் அருளைப் பெற்று திருவரங்கனால்் ‘நம் உடையவர்’ என அழைக்கப்பட்டார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதியாகக ஸ்ரீராமாநுஜர் ஆனது எப்படி? சாதி மதங்களை எதிர்த்த ஸ்ரீராமாநுஜர் வாழ்வு எப்படிப்பட்டது? நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது என்ன? அத்தனையையும் இந்த நூலில் அழகுறச் சொல்லியுள்ளார் நூலாசிரியர் இராஜா ஆதிபரஞ்ஜோதி. ஆயிரமாவது ஆண்டை நெருங்கும் இந்தத் தருணத்தில் அந்த மகானின் வாழ்க்கையை அறிவதே ஆனந்தம்தானே. அற்புதத்தை உணர பக்கத்தைப் புரட்டுங்கள்.

Buy the eBook
List Price RS .135
Your price
RS .95
You save Rs. 40(29%)

You can read this item using Vikatan Mobile App: