நேர்வழியில் 100

by:பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
Synopsis

சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. வாழ்வின் முதல் சவால் எது? தேர்வை வெற்றிகொள்ளல் என்று சொல்கிறீர்களா?... அதேதான். தேர்வை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் மிக்கவர்களுக்கு, தேர்வு என்பது சர்வ சாதாரணம்தான். ஆம். தேர்வை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினருக்கு அற்புதமான செய்திகளை இந்த நூலில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். தன்னம்பிக்கை ஊட்டும், வெற்றி டானிக்கை நாளைய வெற்றியாளர்களாகிய உங்களுக்கு இந்த நூலில் தாராளமாக வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நாள்தோறும் படியுங்கள். தவறாமல் பள்ளிக்குச் சென்று, எல்லா வகுப்புகளையும் நன்கு கவனித்து வந்தாலே போதும், கல்வியில் உயர்ந்த இடத்தை அடைந்துவிடலாம். அதிலும், வகுப்புகளில் குறிப்பு எடுத்துக்கொள்கிற பழக்கமும் இருந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். தேர்வில் மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கலாம் என நட்சத்திர ஐடியாக்களை தருகிறது இந்தப் புத்தகம். தேர்வுக் காலம் முடிந்த பின்னும், தொடர்ந்து அதே உத்வேகத்துடன் படிப்பதற்கு என்று நாள்தோறும், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியே தீருவோம். உணவும் உறக்கமும் போலவே, வாசிப்பும் இன்றியமையாத தேவையாக மாறட்டும். நல்ல நல்ல நூல்களாகத் தேடித் தேடிப் படிக்கிற பழக்கம் தானாகவே வரவேண்டும் என்று வாசிப்பின் அவசியத்தையும் இந்த நூல் உணர்த்துகிறது. அறிவு வளர்ச்சிக்காக வாசியுங்கள். வெற்றி எனும் தேவதை வீடு தேடி வர, நூறு வெற்றிகளை நீங்கள் ருசிக்க இப்போதே பக்கத்தைப் புரட்டுங்கள். நீங்களே அந்த வெற்றியாளர்!

Buy the eBook
List Price RS .65
Your price
RS .50
You save Rs. 15(23%)

You can read this item using Vikatan Mobile App: