உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

by:டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
Synopsis

‘ஓர் இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதார வளமிக்க, வளர்ச்சிப் பாதையை நோக்கி பீடுநடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். இந்த மாற்றம் இளைஞர்களால் மட்டுமே முடியும்' என்பது கலாமின் கனவு. இந்த நூலில் பதிவு செய்யப்பட்ட கலாமின் வரிகள் அளிக்கும் ஆக்கமும் ஊக்கமும் இளைய சமுதாயத்தின் இதயத்தில் நிலைத்திருக்குமேயானால், அந்தக் கனவு நனவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. இன்று கொம்புத் தேனாய் காட்சி தரும் தங்கள் வளமிக்க எதிர்காலத்தை, எதிர்கொள்ளத் தயங்கும் இளைஞர்களைக் கண்டு, இனி பயப்படத் தேவையில்லை என்றும் அதை படிக்கற்களாக எண்ணி லட்சிய சிகரத்தை அடையலாம் என்று சொல்லி உற்சாகப்படுத்துகிறார். இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக விளங்கப்போகிற இளைஞர்களின் வாழ்வு ஒளிர, அவர்களின் முன்னேற்றப் பாதை நிமிர, கலாமின் கவிதை வரிகளையும் இனிய சொற்பொழிவுகளையும், சான்று காட்டிய நீதி நூல் வரிகளையும் உள்ளடக்கிய இந்த நூல், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும். புத்தகம் ஒவ்வொரு மனித வாழ்வையும் செம்மைப்படுத்தி, இனிய நண்பனாக விளங்கும் என்பதால், புத்தகங்களைச் சேகரித்து வீட்டு நூலகம் அமைக்க வலியுறுத்திக் கூறிய அப்துல் கலாம் அவர்கள், தமிழகத்தின் பல்வேறு கல்லூரி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்புதான் இந்த நூல். தான் கற்ற கல்வியை சரியான முறையில் வாழ்வின் நடைமுறையில் செயல்படுத்துகிறவர்களால் மட்டுமே லட்சியத்தை அடைய முடியும். இந்த நூல் அதற்கு ஒரு நல்ல நண்பனாக விளங்கும்.

Buy the eBook
List Price RS .160
Your price
RS .112
You save Rs. 48(30%)

You can read this item using Vikatan Mobile App: