கார்ப்பரேட் கோடரி

by:நக்கீரன்
Synopsis

சில கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கியமான வேலையே இயற்கை வளங்களைச் சுரண்டி, கோடி கோடியாகப் பணம் குவிப்பதுதான். நிலம் கையகப்படுத்தும் சட்டம் `கிராம மயமாக்கல்' என்ற கிணற்றுக்குள் இருந்து புறப்பட்ட புது பூதம். விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கையகப்படுத்தியதால், ஏற்கெனவே பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர். இனி வேளாண் குடிகளும் தங்கள் வாழ்நிலத்தை இழக்கச் செய்யும் முயற்சிதான் இந்தச் சட்டம். வேளாண் நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கைமாறும்போது, ‘இனி வேளாண் பொருட்களின் உற்பத்தி பெருகும்’ என்று எல்லா நாட்டு அரசும் மக்களை கண்துடைப்புச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! எரிபொருள் உற்பத்திக்காகவே அதிகப்படியான நிலங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இனிமேல் உணவுப் பொருட்களின் உற்பத்திக்காக கொஞ்சம் விதைக்கப்பட்டாலும் அவை அந்நாட்டு மக்களின் வயிற்றை நிரப்பாது என்பது உண்மை. இதற்கு சாட்சி எத்தியோப்பியா. `இந்திய வேளாண்மை மீதான வன்முறை, பருத்தியில் இருந்துதான் தொடங்கியது. ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்பட்ட பருத்தியின் உண்மையான நிறம் சிவப்பு - காரணம், பல கோடி மக்களின் ரத்தத்தில் வளர்க்கப்பட்டது நவீன பருத்தி' என்றும், `ஒரு காருக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள் இரும்பு, ரப்பர், பிளாஸ்டிக் என்று சொல்லும் காலம் மாறி சோளம், கரும்பு, கிழங்குகள், கோதுமை, சோயா, நெல்தான்...' என்பன போன்ற ஆச்சர்யமூட்டும் தகவல்களை அள்ளித் தெளிப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். மண் மீதான வன்முறையை விளக்கி பசுமை விகடனில் தொடராக வெளிவந்த ‘கார்ப்பரேட் கோடரி' இப்போது நூலாகியிருக்கிறது. அரிய தகவல்களைக் கொடுத்து உழவர்களையும் மக்களையும் எச்சரிக்கை செய்வதோடு, இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதைத் தடுத்து நம் பாரம்பர்ய மண்ணைப் பாதுகாக்கவும் வலியுறுத்துகிறது இந்த நூல்.

Buy the eBook
List Price RS .100
Your price
RS .70
You save Rs. 30(30%)

You can read this item using Vikatan Mobile App: