இதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள்

by:யசோதரை கருணாகரன்
Synopsis

இதயம் - மனித உடலின் உயிர்நாடி. இதன் துடிதுடிப்பே மனித வாழ்க்கையின் இயக்கம். இதயம் ஒருவருக்கு சீராக இயங்குகிறதென்றால் அவரது ஆயுள் நீடிக்கும். இதயம் மற்றும் மற்ற உடற்பாகங்களின் இயக்கம் சீராகவோ அல்லது நோயுடனோ இயங்க முக்கியக் காரணம் உணவுதான். உடலின், சமமான ஒழுங்கான இயக்கத்துக்கு உணவு முறை அவசியம். நாவின் ருசிக்கு அடிமையாகாத எவரும் பூரண ஆயுளோடு வாழமுடியும். பரபரப்பான இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில் சமைப்பதில் கிடைத்த உணவா... ஏற்ற உணவா... என்கிற போட்டியே நடைபெறுகிறது. இதில் ஜெயிப்பது கிடைத்த உணவே. இன்றைய மக்களில் பலர் பாரம்பர்ய உணவு குறித்த அவசியத்தில் விழிப்பு உணர்வு பெற்றிருக்கின்றனர். இருப்பினும் மேலைநாட்டு உணவு மீது உள்ள மோகத்தைக் குறைத்து, நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த பாரம்பர்ய உணவுமுறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழலாம். உடல் காக்கும் உயிர் காக்கும் பாரம்பர்ய உணவுகளை தேர்ந் தெடுத்து உண்ணுவது உடலையும் உடலை இயங்க வைக்கும் இதயத்தையும் நோய் அணுகாமல், தூய்மையாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் எடுத்துரைக்கிறார். அஞ்சறைப் பெட்டியின் பொருட்கள் முதல் கீரை, சிறுதானியங்கள், பயறு வகைகள், பாரம்பர்ய அரிசி, ரசாயனம் இல்லாத பழம் மற்றும் காய் வகைககளைக் கொண்டு சமைக்கும் முறையையும், காலை முதல் இரவு வரை எந்தெந்தநேரத்தில் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்கிற முறைகளையும் இந்த நூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. உணவே மருந்தாகி உடல் நோயை போக்கிவிடும்... தேவையற்ற உணவால் தேங்கும் கழிவுகளை உணவாலேயே அகற்ற முடியும் என்கிற பல ஆச்சரியமான தகவல்களை அள்ளிக் கொடுப்பதோடு, நோயில்லா வாழ்வுடன், பூரண ஆயுளும் சேர்ந்து, பல்லாண்டு காலம் வாழ இந்த நூல் வாழ்த்துகிறது.

Buy the eBook
List Price RS .165
Your price
RS .116
You save Rs. 49(29%)

You can read this item using Vikatan Mobile App: