Cart is Empty
by டாக்டர் எஸ்.கார்த்திகேயன்
பணம் சம்பாதிக்க எல்லோருக்கும் ஆசை! சம்பாதிப்பதில் உள்ள -ஆபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஆபத்துக்கும் ரிஸ்க்குக்கும் உள்ள வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் அருமையாக விளக்கப் பட்டிருக்கிறது. ரிஸ்க் என்பது என்ன என்று தெரியாமலேயே ஒரு விஷயத்தில் புகுந்தால் அது ‘ரிஸ்க்’ அல்ல; ஆபத்து. இதைத் தமிழில் அருமையாக ‘ஆழம் தெரியாமல் காலை விடுவது ஆபத்து’ என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் ‘ரிஸ்க்’குக்கு ஓர் அருமையான விளக்கம் இருக்கிறது. ரிஸ்க் என்பதை நம்மில் பலர் ஆபத்து என்றே தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். துருவ, வெள்ளைக் கரடிகள் பனிப் பாளத்தின் மேலே பக்குவமாக நடந்து செல்லும். திடீரென்று தயங்கி வளைந்து செல்லும். அங்கே செல்பவர்கள் அது எங்கெங்கே காலை வைக்குமோ அந்தத் தடத்திலேயே காலை வைத்துச் செல்வார்கள். அந்த இடத்தில் எல்லாம் கரடியின் எடையைப் பனிப் பாளம் தாங்கும். மற்ற இடத்தில் காலை வைத்தால் ஒல்லியான மனிதனுடையை எடையைக்கூட பாளம் தாங்காமல் நொறுங்கிவிடும். வாழ்க்கையில் ஒரேயடியாக ரிஸ்க் எடுக்காமலிருந்தாலும் முன்னேற முடியாது. கண் மண் தெரியாமல் ஆபத்தை விலை கொடுத்தும் வாங்கக் கூடாது. அன்றாட வாழ்க்கையிலேயே நாம் குறைந்த பட்ச ரிஸ்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இயற்கையே குறைந்தபட்ச ரிஸ்குக்கு நம்மை தண்டிப்பதில்லை. ரிஸ்க் எடுக்காமல் இருந்தாலும், அதிக பட்ச ரிஸ்க் எடுத்தாலும் தண்டிக்கிறது. ரிஸ்கைப் பற்றித் தெரிந்துகொண்டாலே நம் மன நிலை முன்னேற்றத்துக்குப் பாதி தயாராகிவிடும். இந்த சூட்சுமம் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. ‘மிதமிஞ்சிய ரிஸ்க் எடுக்காமல் அளவான ரிஸ்க் எடுத்து பணத்தை அள்ளுவது எப்படி? அளவான ரிஸ்க் எடுத்தால் நிச்சயம் பணம் எப்படி வருகிறது? ரிஸ்கை எப்படி அளப்பது? பணம் சம்பாதிப்பதற்கான மன நிலை எப்படித் தானாகவே அமைகிறது? சில சமயங்களில் அதற்கேற்ற மன நிலையை எப்படி வளர்த்துக்கொள்வது?’ ஆகிய பணம் சம்பாதிப்பதற்கான பல முக்கிய விஷயங்களை அக்கறையுடன் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர். இனி பணம் உங்கள் கையில் அடங்கியிருக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
RS. 112 More...by தமிழருவி மணியன்
ஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித குலத்துக்கு வழி காட்டினார். வேத உபநிடதங்களும், இதிகாச புராணங்களும், சான்றோர் வாக்குகளும் மாமருந்தாகத் திகழ்ந்து, மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்கின்றன. இவ்வளவு இருந்தும் இன்றைய மனித வாழ்வில்தான் எத்தனை துக்கங்கள்; மனத் துயரங்கள்? வெறுப்பு, ஏமாற்றம் என எதிர்மறைச் சிந்தனைகளால் மனம் அலைக்கழிப்பு... _ இப்படி ஒரு நிலையை மனிதன் அனுபவிக்க என்ன காரணம்? காரணத்தை இந்த நூலில் அலசியிருக்கிறார் நூலாசிரியர் தமிழருவி மணியன். வெறுப்புற்ற உள்ளத்தை அமைதிப்படுத்தும் அருமருந்தாக இவரின் இனிய சொற்கள் இந்த நூலில் இதமாக ஒத்தடம் கொடுக்கின்றன. ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என, மனித வாழ்வோடு தொடர்புடைய முப்பது தலைப்புகளில் சக்தி விகடனில் இவர் தொடராக எழுதிய கட்டுரைகளின் நூல் வடிவம் இது. தொடர் வெளியாகிக் கொண்டிருந்தபோது, தாங்கள் உள்ளத்தில் பலம் பெற்று, ச
RS. 63 More...by வெ.இறையன்பு
இந்த பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள் எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளன. மனசு நினைக்கும் செயலை செய்து முடிப்பது உடலில் உள்ள உறுப்புக்கள்! அந்த உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தியபடியேதான் இருக்கிறது. அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பதுதான் இந்த ‘மனிதன் மாறிவிட்டான்’! உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் ஏதாவது ஒரு காரணத்துக்காக நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த உறுப்பு என்ன காரணத்துக்காக படைக்கப்பட்டதோ அந்த காரணத்துக்காக பயன்படுத்தி இருக்கிறோமா என்று இந்தப் புத்தகம் யோசிக்க வைக்கிறது. மனசுக்கும் உறுப்புக்கும் உள்ள தொடர்பையும் சம்பந்தத்தையும் இதைவிட எளிமையாக சொல்வது கடினம். ‘கண்கள் பலவிதமான உடல்மொழிகளைப் பரிமாறுகின்றன. கண்களைக் கீழே குவிப்பது அடக்கத்தை உணர்த்துகிறது. கண்களை உயர்த்துவது களங்கமற்ற தன்மையை உணர்த்துவதாக இருக்கிறது. கண்களை உற்றுப் பார்ப்பதும், மௌனமாக இருப்பதும் குழந்தைகளின் மீது ஆதிக்கம் செலுத்த பயன்படுத்தும் உத்தி. கண்களை அகலப்படுத்துவது ஆச்சர்யத்துக்கான அறிகுறி. கண்களை குறுக்குவது கூர்மையாகப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் உடல்மொழி. கண்ணடிப்பது என்பது இருவருக்குள்ளான ரகசிய பரிமாற்றத்தை ஏற்படுத்துகிறது’ என்று கண்களைப் பற்றி விவரிக்கும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் ஆசிரியர். ஜூனியர் விகடனில் தொடராக வந்த சமயத்தில் ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் நூலின் ஆசிரியர் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அந்த கேள்விகளுக்கான விடைகளை தொடரின் இறுதியில் குறிப்பிட்டார். அவர் கேட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட மூன்று விடைகளுமே பொருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் முடிவில் அவர் கொடுத்த சரியான விடையும் அதற்கான காரணமும் நியாமனதாக இருந்தது. தொடராக வந்த சமயத்தில் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ‘மனிதன் மாறிவிட்டான்’ இப்போது நூல் வடிவத்தில் உங்கள் கைகளில் தவழ்கிறது. நிச்சயம் இது மீண்டும் உங்களைப் படிக்கத் தூண்டும். பாதுக்காக்க வேண்டிய பொக்கிஷமாகவும் இருக்கும்!
RS. 116 More...by தமிழருவி மணியன்
தொலைநோக்குப் பார்வையோடும், சமதர்ம சிந்தனையோடும் சமூகத்தை உற்று நோக்கியவர் மகாகவி பாரதி. இனம், மொழி, நாடு, சாதி என்று அனைத்தையும் கடந்து சிந்தித்த அற்புத பிறவி! அடித்தட்டு மக்கள் சந்திக்கும் அவலங்களை எளிய கவிதை வரிகளாலே உணர்த்திய மாமனிதர்! அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெண்கல்வி, விதவை மறுமணம், பெண் விடுதலை, மதநல்லிணக்கம். கலப்புத் திருமணம் என எல்லாமே சமுதாய சீர்திருத்த நோக்குடன் அமைந்தவை. கொள்கைகள் யாருடையதானாலும், அதிலுள்ள குறைகளையும் நிறைகளையும் சமூக நலன் சார்ந்த கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, தன் கருத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்துவதில் பாரதிக்கு இணை பாரதிதான்! . சமூக மறுமலர்ச்சியையும், தேசத்தின் விடுதலையையும் தனது உயிர்மூச்சாகப் பாவித்த பாரதியின் கவிதைகள், உரைநடைகள், கடிதங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, புரட்சிகரமான நடையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் தமிழருவி மணியன். மானுடத்துக்கும் மனிதநேயத்துக்கும் சான்றாக அமைந்திருக்கும் கவிஞரின் எண்ணங்களையும், அவர் ஏற்படுத்திய எழுச்சி மிகு மாற்றங்களையும் இந்த நூலில் தெளிவாக விளக்குகிறார். தேசத்தின் ஒற்றுமைக்கும், சமுதாய மேம்பாட்டுக்கும் உகந்த ஆழ்ந்த சிந்தனைகளைக் கொட்டிக் குவித்த ‘பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும்’ என்பதை தன் எழுத்தின் வன்மையோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். தேசியம், தெய்விகம், மதம் என பல விஷயங்களிலும் பாரதியின் பார்வை எத்தகையது என்பதைப் படித்தறிய _ பகுத்தறிய உதவும் நூல் இது.
RS. 88 More...by லதானந்த்
நினைவாற்றல் எனும் மந்திரம்! ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தாலும் நினைவாற்றலை இழக்கும்போது நாம் சராசரி மனிதர்களாகி விடுகிறோம்.அரசு நிர்வாகத் துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள்,தொழில் அதிபர்கள்,பங்கு மார்க்கெட் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மட்டும் அல்லாமல், அரசியல்வாதிகளிலும் நல்ல நினைவாற்றல் உள்ளவர்களே முதல் இடத்தில் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. வார்த்தையை மறப்பவர்கள்,எண்களை மறப்பவர்கள்,பெயரை மறப்பவர்கள்,பாடத்தை மறப்பவர்கள் என எத்தனையோ பேர் தங்களின் நினைவு சக்தியைப் பெருக்கிக்கொள்ள போராடுகிறார்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு,வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது இந்த நூல்.ஆங்கில வார்த்தைகளின் ‘எழுத்து’ முதற்கொண்டு நாம் பார்க்கும் வண்ணங்கள் வரை அனைத்தையும் நினைவில் இருத்துவது எப்படி என்பதையும்,தகுந்த நேரத்தில் அதையெல்லாம் நினைவில் கொண்டுவந்து சமயோசிதமாகச் செயல்படுவது எப்படி என்பதையும்,எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கற்றுத் தருகிறார் நூலாசிரியர் லதானந்த்.நினைவாற்றல் மிக்கவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படுவது உண்மை.அந்த வகையில், நினைவாற்றல் உத்தியைக் கற்றவர்கள் மந்திரம் கற்றவர்களைப்போல எங்கும் எப்போதும் அறிவுச் செழுமையுடன் உலா வரலாம்; நடமாடும் பல்கலைக்கழகமாகச் சுற்றி வரலாம்; விழா மேடைகளில் கலக்கலாம்;புள்ளி விவரங்களை அள்ளிவிடலாம்;க்விஸ் நிகழ்ச்சிகளில் வெற்றி பெறலாம்;போட்டித் தேர்வில் வெல்லலாம்.உங்களின் சாதனைக்குத் தக்க பலமாக விளங்கும் மந்திர நூல் இது.
RS. 67 More...by இயகோகா சுப்பிரமணியம்
அரசாங்க வேலையை நோக்கி இளைஞர்கள் ஓடியது ஒரு காலம்; அந்தக் கதவுகள் திறக்கப்படாததால் தனியார் துறையை நோக்கிப் படையெடுக்கிறார்கள். ஆனால், எத்தனை சதவிகிதம் பேர் தொழில் முனைவோராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்? பரம்பரைத் தொழில் செய்பவர்கள் மற்றும் பரம்பரைப் பணக்காரர்கள் மட்டுமே தொழில் செய்து முன்னுக்கு வருகிறார்கள். படித்த இளைஞனுக்கு தொழில் முனைவோராக ஆவதற்கு குடும்பத்திலும் சமுதாயத்திலும் பல இடைஞ்சல்கள். இந்த வகை இளைஞர்களுக்குத் தேவை நல்ல வழிகாட்டுதலும் சரியான அறிவுரையும். இதைத் தெளிவாகவும் தனது அழகான மொழி நடையாலும் எடுத்துரைக்கிறார் நூல் ஆசிரியர் இயகோகா சுப்பிரமணியம். பிரபல தொழில் அதிபராக இருப்பதாலும், பழுத்த அனுபவசாலியாக இருப்பதாலும் வாழ்க்கையில் வெற்றி வெளிச்சத்தைக் காண விரும்பும் அனைவருக்கும் முன் உதாரணமாகத் திகழ்கிறார். தான் சந்தித்த மனிதர்கள், பிற நாட்டுக் கலாச்சாரம் மற்றும் பிரபல நிறுவனங்களின் வெற்றி ரகசியங்களையும் கூறி சுய முன்னேற்றத்துக்கான வழிவகைகளை அழகாக எடுத்துரைக்கிறார். சுயமுன்னேற்றம் மற்றும் தொழிலில் வெற்றி என்பது ‘ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள கலாச்சாரம், அரசியல் அமைப்பு, தனி மனிதப் பண்பாட்டின் அடிப்படையில்தான் அமைகின்றன’ என்று ஆணித்தரமாக அடித்துரைக்கிறார். வெற்றி வெளிச்சத்தில் உலாவ நினைக்கும் அனைவருக்கும் இந்த நூல் பயன்படும்!
RS. 74 More...by டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை. இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆகவே, அவர்களுக்கும் வழிகாட்ட ஒருவர் தேவையாக இருக்கிறது. இளைஞர்கள் வாழ்க்கை ஆதாரத்துக்கு ஒரு வேலையைத் தேடிக்கொள்ளத்தான் வேண்டும். அவர்களும் வேலையைத் தேடி அலைகிறார்கள். ஒரு வேலைக்கு வேண்டிய ஆற்றல் என்னென்ன, ஒரு வேலையைப் பெறும் அளவுக்கு ஆற்றல்களை எளிதாக, சுலபமாக, அலட்டிக்கொள்ளாமல் வளர்த்துக் கொள்வது எப்படி, காம்படிட்டிவ் உலகத்தில் அதே ஆற்றலுடன் போட்டி போட்டுக்கொண்டு சக பந்தயக்காரர்கள் வந்தாலும் தாங்கள் ஒரு மாற்று அதிக பலத்துடன் வருவது எப்படி என்ற முன்னேற்ற வழிகளை நூல் ஆசிரியர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் பக்குவமாக எடுத்துச் சொல்கிறார். இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றப் பாதையைக் காட்டுகிறார். உண்மை, நேர்மை ஆகியவற்றை விட்டால்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்பதைத்தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அடிப்படைப் பண்புகளை விட்டு விடாமல் போட்டிகளில் ஜெயிக்க முடியும் என்று நம்பிக்கையை நூல் ஆசிரியர் ஊட்டுகிறார். அவர் ஏற்று நடத்திய பயிற்சிப் பாசறைகளில் இடம் பெற்ற கவர்ச்சியான போட்டிகள், அனுபவங்கள் ஆகியவற்றைக் கட்டுரையில் ஆங்காங்கே சொல்லியிருப்பது படிப்பதை விறுவிறுப்பாக்கி இருக்கிறது. நாணயம் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
RS. 84 More...by த.இராமலிங்கம்
விடியும் பொழுது, யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. ஒவ்வொரு பொழுதையும் தனக்கான விழுதாகப் பயன்படுத்தி வாழ்வில் வளம் சேர்ப்போரும் உண்டு. அதையே பழுதுபடுத்திவிட்டு படுத்து உறங்குவோரும் உண்டு. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனிதத்தின் மாண்பை உணர்ந்து உழைக்க வேண்டும் என்பதையே, ‘கனவு காணுங்கள்!’ என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். ‘நீ தூங்கும்போது காண்பதல்ல கனவு; உன்னை எது தூங்கவிடாமல் செய்கிறதோ, அதுதான் உன் கனவு!’ என்பதை, இன்றைய வளரும் தலைமுறையினரின் மனதில் பதிய வைக்கவரும் ஒழுக்கக் கையேடாக உருவெடுத்துள்ளது இந்த நூல். நாளும் பொழுதும் நால்வகை அனுபவங்களைப் பெற்றிடும் நமக்கு, நம்மால் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட ஒழுக்கச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு, அதற்கான சூழ்நிலைகள், தீர்வுகள் என, மனித சமூகம் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் எதிர்கொள்ளும் அனுபவங்களின் அரிய தொகுப்பு இந்த நூல். இருட்டை விரட்டும் வெளிச்சம், உழைக்காமல் வருமா உயர்வு?, உறவுகளின் உன்னதம், தேவை & பாராட்டு மழை!, திட்டமிட்டால் வெற்றி உறுதி!, ‘வள்ளுவன்’ என்றொரு நண்பன்!, நிற்க அதற்குத் தக!, பொழுது & போக்குவதற்கா... ஆக்குவதற்கா?, மௌனம் என்னும் பேச்சு!, விலங்குக்குள் மனிதம் என, அத்தியாயம் தோறும் ஒழுக்க நடைமுறைகளை வரிசைப்படுத்தி, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை சுவாரஸ்யமிக்க வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்களை கோத்து எடுத்துள்ளார் நூலாசிரியர் வழக்கறிஞர் த.இராமலிங்கம். தன் நிலையை அறிந்துகொள்ள முயற்சித்து, துவண்டுபோன ஒவ்வொருவரையும் புத்தம் புதிதாகத் துளிர்க்க வைத்து, நமக்குள் இருக்கும் வெற்றியைப் பற்றிக்கொள்ளும் திறனை நமக்கே வெளிச்சமிட்டுக் காட்டும் பொக்கிஷ ஏடுகள் இவை! படித்தால், மனிதத்தில் மாற்றம்! படித்ததை மனதில் பதியவைத்தால், வாழ்வில் ஏற்றம்!
RS. 81 More...by விகடன் பிரசுரம்
பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ_வாக பணியாற்றும் தமிழர்களின் செயல்பாடுகளையும் அனுபவங்களையும் எடுத்துக்கூறும் நூல் இது. ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நேர்காணல்கள், இப்போது நூல் வடிவம் பெறுகிறது. சி.இ.ஓ., என்றால் அசகாய சூரர்கள், அவர்களுக்கெல்லாம் ஏதோ திறமை இருக்கிறது, நமக்கெல்லாம் அது எங்கே இருக்கிறது என்பதே பரவலான எண்ணம். திறமை எல்லோருக்கும் இருக்கிறது, ஆனால் அவர்கள் எப்படி அந்தத் திறமையைக் கூர்தீட்டி வளர்த்துக்கொண்டார்கள் என்பதை, சாதனை படைத்த 23 சி.இ.ஓ._க்களின் அனுபவங்கள் விளக்குகிறது. கிட்டத்தட்ட அத்தனை பேரும், தங்கள் பெற்றோர்கள் சிறுவயதில் தங்களுக்குப் போதித்த அறிவுரைகளையே தலைமைப் பீடத்தில் பிரயோகித்திருக்கிறார்கள் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம். ஏதோ ஒரு கணக்கை வைத்துக்கொண்டு தலைமை இடத்தில் இருந்து செயல்பட்டால் வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்கள் விவேகத்தையும் சாதுர்யத்தையும் சாமர்த்தியத்தையும் பயன்படுத்தியே அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது நிச்சயம். அதேநேரத்தில் கொஞ்சம் தைரியமாக ‘ரிஸ்க்’கும் எடுத்திர
RS. 56 More...by கணபதி ராமகிருஷ்ணன்
விவேகத்தை இழந்ததால் கிடைக்கும் வேகத்தை மட்டுமே வாடிக்கையாக கொண்டது இன்றைய வாழ்க்கை முறை. இயந்திரத்தனமான இந்த வாழ்க்கை முறையில் ஆத்மார்த்தமான அமைதியைத் தேடி அலைபவர் அநேகர்.மனிதன் எனும் உருவிலேயே அமைதி எனும் அருவம் அடங்கி இருப்பதை உணராது, புண்ணியத்தைத் தேடி எங்கெங்கோ அலைகிறது இன்றைய நவநாகரிக உலகம். உண்மையின் பிடிப்பில் எப்போதும் இருப்பவர்களுக்கு துன்பமே கிடையாது. தவறான பாதையில் செல்பவர்களுக்கு இன்பமே கிடையாது.சுயத்தை நம்புபவன் வீழ்ந்தாலும் நேர்செய்து கொள்கிறான். விஞ்ஞானத்தின் அடிப்படையில் மெய்ஞானத்தை உணர்ந்த ஒவ்வொருவரும், தூய அன்பின் மூலம் ஆண்டவனை உணர முடியும் என்பதை அறிவர்.நாம் யார், பிறப்புக்கு முன்னும் பின்னும் உள்ள நிலை என்ன,உயிர்களுக்கும் உலகுக்குமான தொடர்பு எப்படி உருவானது, நம்முள் உள்ள தெய்வத்தை உணரும் வழி, மனிதம் என்ற தொடக்க நிலையின் பின்னணி, மனித சமுதாயத்தில் ஆன்மிகம் கலந்த பின்னணி என, அறிவியல்ரீதியிலான கேள்விகளுக்கான பதில்களை, மனித வாழ்க்கை நடைமுறையின் ஆய்வில் கிடைத்த கருத்துச் சிதறல்களை விஞ்ஞானத்தின் அடிப்படையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் கணபதி ராமகிருஷ்ணன்.உலக உயிர்களின் பரிணாம வளர்ச்சியை, படிப்படியான முன்னேற்றத்தை முதன்முதலில், உயிர், மனம், வரலாறு, தெய்வம் என அத்தியாயங்களாக பிரித்து விளக்கி இருப்பது, இந்த நூலின் சிறப்பு. வைரமாகவே இருந்தாலும் பட்டைத் தீட்ட ஒருவர் வேண்டும் என்பதுபோல,உடல் அமைப்பில் நீங்கள் மனிதனாக இருந்தாலும், உணர்வின் அடிப்படையில் புனிதனாக உங்களைப் பட்டைத் தீட்டிக்கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.
RS. 53 More...