Cart is Empty
by தமிழருவி மணியன்
அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழும் தமிழருவி மணியன், அரசியல் வாழ்விலும் தனக்கென தனி அடையாளம் கொண்டவர்; தனி இயக்கம் கொண்டவர். நம் நாட்டில் வளர்ந்துவிட்ட சமூக சீர்கேட்டுக்கு காரணமான அரசியல், கட்சி, கொள்கை, கட்சித்தாவல், சந்தர்ப்பவாதம், வாக்குறுதி, இலவசம், மது, முகஸ்துதி, வன்முறை, லஞ்சம், ஊழல், விவாகரத்து... என பல பொருள்களில் ‘எங்கே போகிறோம் நாம்?’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகின்றன. ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்! தன்னலம் கருதாமல் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொள்வோரும், அறிவார்ந்த நிர்வாகத்திறமை மிக்கவர்களும், மாசற்ற தொண்டுள்ளம் கொண்டவர்களும் மட்டுமே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டுக்கும் மக்களுக்கும் நல்வழி காட்ட முடியும் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது இந்த நூல். அரசியல்வாதிகளின
RS. 130 More...by சுவாமி சுகபோதானந்தா
இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று கேட்காமல் 100 இளைஞர்களைத் தாருங்கள்' என்றுதான் கேட்டார். தமிழின் முதல் தர வரிசையிலிருக்கும் மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!' புத்தகத்தின் மூலம் தமிழ் வாசக உலகைப் புரட்டிப் போட்ட சுவாமி சுகபோதானந்தா அந்த உண்மையை நன்கு உணர்ந்தவர். நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி, தடைகளைத் தகர்த்தெறிந்து, திக்கு திசை தெரியாமல் பாயும் காட்டற்று வெள்ளமான இளைய சமுதாயத்தை அணைகளுக்குள் அடக்கி, விளைநிலங்களுக்குத் திருப்பி, ஆக்கபூர்வமான ஆறாக மாற்றவேண்டியது பெரியோரின் கடமையல்லவா..? அதை நன்கு உணர்ந்து இளைய சமுதாயம் நின்று கேட்கும் வண்ணம் அறிவுபூர்வமான, அறிவியல்பூர்வமான உதாரணங்களை 'இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' என்ற இந்த நூலில் சொல்லி ஆற்றுப்படுத்தியிருக்கிறார் சுவாமி சுகபோதானந்தா. அன்பின் வரிகளை பல்வேறு மதங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும்... உற்சாக வரிகளை பெரும் சாதனையாளர்களின் வாழ்க்கையில் இருந்து உதாரணம் காட்டுவதிலாகட்டும்... சொல்ல வந்த கருத்தை அழகா
RS. 102 More...by ராஜுமுருகன்
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, பாசம், பரிதவிப்பு, நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள்! தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்க்கையின் பன்முகங்களையும் பந்தி வைத்திருக்கும் ராஜுமுருகன், தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை மிகுந்த அடையாளம். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் தன்னை அறியாமலே செய்யும் ஒரு குழந்தையைப்போல் வாழ்வின் அத்தனை விதமான உணர்வுகளையும் போகிறபோக்கில் நெஞ்சு தைக்கச் சொல்லி இருக்கிறார் ராஜுமுருகன். துயரங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் இந்த உலகை சற்று தூரத்தில் நின்று கவனித்த கணக்காய் அத்தனை விதமான அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம். புறந்தள்ளப்பட்டவர்களுக்காக அழலாம்; போராடுபவர்களுக்குக் கைகொடுக்கலாம்; இழந்தவர்களுக்குத் துணை நிற்கலாம்; வென்றவர்களுக்கு மலர்க்கொத்து நீட்டலாம்; கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டலாம். மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்களையும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குள் நிகழ்த்தும். குவிந்து கிடக்கும் பணத்தைப் பார்ப்பதும் பார்வையே... பணத்தின் நடு வட்டத்தில் யாரோ ஒருவன் தன் காதலைப் பிழைகளோடு சொல்லி இருப்பதைப் பார்த்துச் சிலிர்ப்பதும் பார்வையே. அந்தக் காதலன் தன் காதலியோடு சேர்ந்திருப்பானா என, எவனோ ஒருவனுக்காக ஏங்கித் தவிப்பது மூன்றாம் பார்வை. இந்தப் புத்தகத்தின் அற்புதம் இத்தகைய பெருங்குணமே! கடலுக்குள் கூடுகட்ட - கனவுக்குள் கடல் கட்ட மனப்பக்குவம் வார்க்கும் மயிலிறகுத் தீண்டலே இந்தப் புத்தகம்!
RS. 203 More...by தமிழருவி மணியன்
ஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித குலத்துக்கு வழி காட்டினார். வேத உபநிடதங்களும், இதிகாச புராணங்களும், சான்றோர் வாக்குகளும் மாமருந்தாகத் திகழ்ந்து, மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்கின்றன. இவ்வளவு இருந்தும் இன்றைய மனித வாழ்வில்தான் எத்தனை துக்கங்கள்; மனத் துயரங்கள்? வெறுப்பு, ஏமாற்றம் என எதிர்மறைச் சிந்தனைகளால் மனம் அலைக்கழிப்பு... _ இப்படி ஒரு நிலையை மனிதன் அனுபவிக்க என்ன காரணம்? காரணத்தை இந்த நூலில் அலசியிருக்கிறார் நூலாசிரியர் தமிழருவி மணியன். வெறுப்புற்ற உள்ளத்தை அமைதிப்படுத்தும் அருமருந்தாக இவரின் இனிய சொற்கள் இந்த நூலில் இதமாக ஒத்தடம் கொடுக்கின்றன. ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என, மனித வாழ்வோடு தொடர்புடைய முப்பது தலைப்புகளில் சக்தி விகடனில் இவர் தொடராக எழுதிய கட்டுரைகளின் நூல் வடிவம் இது. தொடர் வெளியாகிக் கொண்டிருந்தபோது, தாங்கள் உள்ளத்தில் பலம் பெற்று, ச
RS. 63 More...by த.இராமலிங்கம்
விடியும் பொழுது, யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. ஒவ்வொரு பொழுதையும் தனக்கான விழுதாகப் பயன்படுத்தி வாழ்வில் வளம் சேர்ப்போரும் உண்டு. அதையே பழுதுபடுத்திவிட்டு படுத்து உறங்குவோரும் உண்டு. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனிதத்தின் மாண்பை உணர்ந்து உழைக்க வேண்டும் என்பதையே, ‘கனவு காணுங்கள்!’ என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். ‘நீ தூங்கும்போது காண்பதல்ல கனவு; உன்னை எது தூங்கவிடாமல் செய்கிறதோ, அதுதான் உன் கனவு!’ என்பதை, இன்றைய வளரும் தலைமுறையினரின் மனதில் பதிய வைக்கவரும் ஒழுக்கக் கையேடாக உருவெடுத்துள்ளது இந்த நூல். நாளும் பொழுதும் நால்வகை அனுபவங்களைப் பெற்றிடும் நமக்கு, நம்மால் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட ஒழுக்கச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு, அதற்கான சூழ்நிலைகள், தீர்வுகள் என, மனித சமூகம் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் எதிர்கொள்ளும் அனுபவங்களின் அரிய தொகுப்பு இந்த நூல். இருட்டை விரட்டும் வெளிச்சம், உழைக்காமல் வருமா உயர்வு?, உறவுகளின் உன்னதம், தேவை & பாராட்டு மழை!, திட்டமிட்டால் வெற்றி உறுதி!, ‘வள்ளுவன்’ என்றொரு நண்பன்!, நிற்க அதற்குத் தக!, பொழுது & போக்குவதற்கா... ஆக்குவதற்கா?, மௌனம் என்னும் பேச்சு!, விலங்குக்குள் மனிதம் என, அத்தியாயம் தோறும் ஒழுக்க நடைமுறைகளை வரிசைப்படுத்தி, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை சுவாரஸ்யமிக்க வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்களை கோத்து எடுத்துள்ளார் நூலாசிரியர் வழக்கறிஞர் த.இராமலிங்கம். தன் நிலையை அறிந்துகொள்ள முயற்சித்து, துவண்டுபோன ஒவ்வொருவரையும் புத்தம் புதிதாகத் துளிர்க்க வைத்து, நமக்குள் இருக்கும் வெற்றியைப் பற்றிக்கொள்ளும் திறனை நமக்கே வெளிச்சமிட்டுக் காட்டும் பொக்கிஷ ஏடுகள் இவை! படித்தால், மனிதத்தில் மாற்றம்! படித்ததை மனதில் பதியவைத்தால், வாழ்வில் ஏற்றம்!
RS. 81 More...by தமிழருவி மணியன்
தொலைநோக்குப் பார்வையோடும், சமதர்ம சிந்தனையோடும் சமூகத்தை உற்று நோக்கியவர் மகாகவி பாரதி. இனம், மொழி, நாடு, சாதி என்று அனைத்தையும் கடந்து சிந்தித்த அற்புத பிறவி! அடித்தட்டு மக்கள் சந்திக்கும் அவலங்களை எளிய கவிதை வரிகளாலே உணர்த்திய மாமனிதர்! அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெண்கல்வி, விதவை மறுமணம், பெண் விடுதலை, மதநல்லிணக்கம். கலப்புத் திருமணம் என எல்லாமே சமுதாய சீர்திருத்த நோக்குடன் அமைந்தவை. கொள்கைகள் யாருடையதானாலும், அதிலுள்ள குறைகளையும் நிறைகளையும் சமூக நலன் சார்ந்த கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, தன் கருத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்துவதில் பாரதிக்கு இணை பாரதிதான்! . சமூக மறுமலர்ச்சியையும், தேசத்தின் விடுதலையையும் தனது உயிர்மூச்சாகப் பாவித்த பாரதியின் கவிதைகள், உரைநடைகள், கடிதங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, புரட்சிகரமான நடையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் தமிழருவி மணியன். மானுடத்துக்கும் மனிதநேயத்துக்கும் சான்றாக அமைந்திருக்கும் கவிஞரின் எண்ணங்களையும், அவர் ஏற்படுத்திய எழுச்சி மிகு மாற்றங்களையும் இந்த நூலில் தெளிவாக விளக்குகிறார். தேசத்தின் ஒற்றுமைக்கும், சமுதாய மேம்பாட்டுக்கும் உகந்த ஆழ்ந்த சிந்தனைகளைக் கொட்டிக் குவித்த ‘பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும்’ என்பதை தன் எழுத்தின் வன்மையோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். தேசியம், தெய்விகம், மதம் என பல விஷயங்களிலும் பாரதியின் பார்வை எத்தகையது என்பதைப் படித்தறிய _ பகுத்தறிய உதவும் நூல் இது.
RS. 88 More...by எஸ்.கே.முருகன்
உத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உறுதுணையாக இருப்பார்கள். அவ்வாறு ஊக்கப்படுத்துவதற்காக உபயோகிக்கும் சொற்கள்தான் நாம் வெற்றியை நோக்கிப் பயணிக்க உதவும் தூண்டுகோல்கள். நல்ல மனிதனாக மட்டுமல்ல, மிகச் சிறந்த வெற்றியாளராகவும் ஆக்கும் வல்லமை சொற்களுக்கு உண்டு. ஒரு சாதாரண இளைஞனான ஆபிரகாம் லிங்கனை அமெரிக்க ஜனாதிபதியாக்கியது, 'நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாகவே மாறுவாய்!' என்ற வார்த்தைகள்தான். அதுபோல், 'துணிந்தவனுக்குத் தோல்வியில்லை!' என்று தன் தாய் சொல்லக் கேட்ட சிவாஜி, ஒருபோதும் தோல்வியை நெருங்கவிடாத மாவீரன் ஆனார். இதுபோன்ற சான்றுகள் பலவற்றை சரித்திரத்தில் காணலாம். அத்தகையச் சம்பவங்களோடு, இலட்சியவாதிகளாகத் தங்களை மாற்ற உறுதுணையாக இருந்த பல்வேறு மந்திரச் சொற்களை வாசகர்களின் மனதில் பதியச் செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எஸ்.கே.முருகன். இரத்தினச் சுருக்கமாக, மூன்றே பக்கங்களில் ஒவ்வொரு சரித்திரச் சாதனையாளர்களின் முழு வரலாற்றைப் படித்த திர
RS. 67 More...by வேதாத்திரி மகரிஷி
வாழும் கலையை போதித்த மகான், வேதாத்திரி மகரிஷி. ஆன்மிக நெறிகளோடு லௌகிக வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களையும் உபதேசித்த அந்த மகான் கற்பித்த யோக கலைதான் இந்த ‘வாழ்க, வளமுடன்!’ இன்று செல்வச் செழிப்பில் வாழும் பலர், பத்துத் தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு தங்கம், வைரம், பணம், நிலம், வண்டி, வாகனம்... என கோடிக்கணக்கில் சொத்துகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஆனால், வைரம் போன்ற உடலையும், தங்கமான மனசையும், நோயில்லாத வாழ்க்கையையும் பெற்றிருக்கிறார்களா என்றால்... அது கேள்விக்குறிதான்! நமது சந்ததிகளுக்குச் சொத்துகளைச் சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, பரம்பரைக்கும் தொடரக்கூடிய நோய்களை-வியாதிகளை சேர்த்து வைக்கக் கூடாது. அப்படி வராமல் தடுக்க உடல்நலத்தையும், மனவளத்தையும் பேணிக் காக்க வேண்டியது அவசியம். வளமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமே பெரும் செல்வம். இந்த நூலில், ஆரோக்கியமான உணவுமுறைகளையும், அவற்றின் அளவு பயன்பாட்டையும், உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் எளிய உதாரணங்களோடு விளக்கி, புத்துணர்ச்சியோடு வாழ வழிகாட்டியிருக்கிறார், வேதாத்திரி மகரிஷி. கை, கால், மூச்சுப் பயிற்சிகளை எளிய முறையில் விளக்கியிருப்பது இந்த நூலின் சிறப்பு. அந்த மகானின் வேதவாக்கைக் கிரகித்து, அதை சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும், மனதைக் கவரும் வண்ணம் எழுத்தாக்கம் செய்திருக்கிறார் வி.ராம்ஜி. ‘சக்தி விகட’னில் தொடராக வந்த ‘வாழ்க, வளமுடன்!’ இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்.
RS. 60 More...by எஸ்.கே.முருகன்
தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்கள், தடைகள், சிக்கல்கள் போன்றவை சாதனை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ‘துன்பங்களும் துயரங்களும் தவிர வாழ்க்கையில் வேறு என்ன மிச்சம்!’ என்று வாழ்க்கையே வெறுத்து, விரக்தியின் விளிம்புக்கு வந்தவர்கள், நம்பிக்கை எனும் மந்திரக்கயிற்றைப் பற்றிக் கொண்டு எப்படி சாதனை படைத்தார்கள்? துயர நிலைகளை எவ்வாறு கையாண்டால் நாமும் சாதனை மனிதனாக முடியும் என்ற சூட்சமத்தைச் சுட்டிக்காட்டும் அந்த மந்திரச் சொற்கள் இந்த நூலில் பரவிக்கிடக்கிறது: தன்மானத்துக்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதற்காகவும் தன்மானத்தை இழக்கக் கூடாது! வீழ்வதல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி! வசதியாக வாழ்வதல்ல, மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம்! விழிகளால் மட்டுமல்ல விரல்களாலும் வெல்ல முடியும்! மைக்கேல் பெல்ப்ஸ், நிக் விய்ஜெசிக், வாரிஸ் டேரி, ஜேம்ஸ் கேமரூன், ஜவஹர்லால் நேரு, காமராஜர், பாரதியார் போன்றோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சிக்கலான சம்பவங்களை எப்படி எதிர்கொண்ட
RS. 56 More...by டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
இது ஒரு கலாம் காலம். காரணம் சரித்திரத்தில் இடம்பிடித்த ஏவுகணை நாயகராம் மறைந்த திரு. ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் எண்ணமும் எழுத்தும், எழுச்சிமிக்க கவிதை வரிகளும் இளைய சமுதாயத்தினருக்கு உந்து சக்தியாக இருக்கிறது. சமூகப் பொருளாதார வேறுபாட்டை மீறி தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்பு காட்டியவர் கலாம். தோல்வியைத் தோல்வியடையச் செய்வதே கலாம் அவர்கள் வலியுறுத்தும் முக்கிய குறிக்கோள். இந்தக் குறிக்கோள் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைத்துத் தரப்பினர் வாழ்விலும் ஓர் ஊன்றுகோலாக மாறும் என்பது உறுதி. ‘மாணவர்கள் தங்கள் சிறு வயதிலிருந்தே புத்தகம் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; மனித வாழ்வை செம்மைப்படுத்தும் இனிய நண்பனாக புத்தகம் விளங்கும்' என்று புத்தகத்தின் இன்றியமையாமையை விளக்கி, அநேக புத்தக நண்பர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் கலாம். வீடுகள்தோறும் நூலகம் அமைத்து தினமும் வாசித்து செம்மைபெற்று, லட்சியத்தை அடைய வேண்டும் என்கிற கலாமின் கருத்துக்கள் இந்த நூலில் விதைக்கப்பட்டிருக்கிறது. 'என்ன இல்லை நம்மிடம்... என்னால் முடியும்' என்ற நம்பிக்கைதான் நம்மிடம் இல்லை. ஆனால், இந்த நூலை நுகரும் உங்களது ஒவ்வொருவர் இதயத்திலும் இனி அந்த நம்பிக்கை நிச்சயம் பூக்கும். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பள்ளி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்புதான் இந்த நூல். தண்ணீரை உள்வாங்கும் விதை, வேர்விட்டு செழித்து விருட்சமாவது போல் கலாமின் வழிகாட்டுதல்களை உள்வாங்கும் உங்களது மனம் நிச்சயம் செழித்து மேலோங்கும்.
RS. 105 More...