Cart is Empty
by தமிழருவி மணியன்
தமிழ் வாசகர்களுக்கு தமிழருவி மணியன் புதியவரல்ல. இவர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு சமூக விஞ்ஞானியும்கூட! சிறந்த சிந்தனையாளரான தமிழருவி மணியன், அரசியலில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் பற்றியும், நேர்மையற்ற அரசியல்வாதிகள் பற்றியும் எழுதி, தமிழக மக்களை ‘மாற்றம் வேண்டும்!’ என வீறுகொண்டு எழச் செய்தவர். ஊழல்கள் புரையோடிப் போயிருக்கும் அரசியலுக்குத்தானே அறுவை சிகிச்சை தேவை! ‘ஒரு குடும்பத்தில் தனி மனிதர் ஒருவர் தவறு செய்தால் பாதிக்கப்படுவது அந்தக் குடும்பத்தினர் மட்டுமே. ஆனால், அரசியலில் நுழைந்து, பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் தவறு செய்தால், அதனால் பாதிக்கப்படுபவது நாடும், நாட்டு மக்களும்தான்!’ என, அரசியலில் உள்ள அழுக்கை நீக்க, கட்டுரைகளில் இவர் வைக்கும் வாதங்கள் ஆணித்தரமானவை. ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், இதழ்களில் இவர் எழுதிய விழிப்பு உணர்வுக் கட்டுரைகள், கடிதங்கள், பேட்டிகள், ‘விகடன் மேடை’ பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் ஆகியவற்றுடன், ‘அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை’ என்ற கட்டுரைத் தொடரும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக இப்போது உங்கள் கைகளில் மிளிர்கிறது. எப்பேர்ப்பட்ட பதவிகளில் இருந்தாலும், அவர்கள் செய்யும் தவறுகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்டு இவர் எழுதிய கட்டுரைகளும், மக்களின் மனதை மேம்படுத்தும் கலாசாரம், பண்பாடு பற்றிய கட்டுரைகளும் விகடன் வாசகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றன. ‘குற்றால அருவி’யில் குளிப்பது மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல, மூலிகைகளை அள்ளிக்கொண்டு வரும் அருவி நீர், நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது. அதைப் போல இந்த ‘தமிழருவி’ வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுவது மட்டுமல்ல, அதனைச் செயல்படுத்தி பலனையும் பெற உதவுகிறது.
RS. 84 More...by சி.மகேந்திரன்
உயிர் பிழைக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட அவசரத்தில் அப்பாவி மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்! சிதறிய உடல்கள், சாலைகளில் ஒட்டியிருக்கும் சதைகள், உணர்வுகளற்று ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள்... என, மூச்சிரைத்து வந்த சமூகத்தின் முனகல் சத்தமே அங்கு பேரவல ஒலியாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது! கை, கால், முகம் என காயம் ஆறாத இளம் பெண்கள், ரணம் கண்டு கத்திக் கத்திச் சோர்ந்துபோன குழந்தைகள், குழந்தைகளின் தாகம் தணிக்க முடியாத தாய்மார்கள், மனைவியின் மானத்தைக் காக்க முடியாத கணவன்மார்கள்... துயரம் தோய்ந்த அந்தச் சமூகத்தில் பலியான உயிர்களின் எண்ணிக்கை, இலக்கங்களால் வரையறுக்க முடியாது! கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அவர்கள் இடம் பெயர்வதற்கான காரணம், அதில் இலங்கை அரசின் சூழ்ச்சி, இடப்பெயர்வின்போது ஏற்பட்ட இன்னல்கள், போராட்டங்கள், உடைமையும் உணர்வையும் இழந்து உயிரைக் காக்க அவர்கள் பட்ட பாடு... இப்படி, முள்வேலி முகாம்வாசிகளின் அவலங்களை மூடி மறைக்கும் இனவெறி அரசின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.மகேந்திரன். ஈழத் தமிழ் அகதிகளின் அன்றாட வேதனைகளை வேர் அறுக்கும் முயற்சியாக ‘வீழ்வே னென்று நினைத் தாயோ?’ என்ற தலைப்பில், ஆனந்த விகடன் இதழ்களில் வெளி வந்த தொடரோடு, மேலும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ள இந்த நூல், கொடுமை செய்வதையே கடமையாகக் கொண்டுள்ள இனவெறி அரசின் வஞ்சக முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான முன்னோட்டமாகத் திகழும். ‘அடக்கியவர்கள் நிலையாக ஆளப்போவதில்லை!’ என்பதே கடந்த கால சரித்திரம் உணர்த்தும் பாடம்!
RS. 70 More...by முருகன்
‘என்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாக காவல் துறை செய்த சித்திரிப்புகள்தான் என்னை இன்றைக்கு தூக்குக் கயிற்றின் முன்னால் நிறுத்தி இருக்கின்றன. கயிறா உயிரா எனத் தெரியாமல் தவிக்கும் என்னுடைய உண்மையான ஒப்புதல் வாக்குமூலம், ஜூனியர் விகடனில் நான் பகர்ந்த தொடர்தான்!’ - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனைக் கைதியாக மரணத்தின் விளிம்பில் அல்லாடும் முருகன் சொன்ன வார்த்தைகள் இவை. ‘09-09-11 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்’ என அரசு அறிவித்திருந்த வேளையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி மூவரின் தூக்குக்கும் இடைக்காலத் தடை வாங்கப்பட்டது. மரண மேகம் சூழ்ந்திருந்த அந்த இக்கட்டான சூழலில் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லும் கடைசி வாய்ப்பாக, ஜூனியர் விகடனில் ‘கயிறே, என் கதை கேள்!’ என்ற தலைப்பில் முருகன் பகர்ந்த தொடரின் தொகுப்பே இந்த நூல். விசாரணை என்ற பெயரில் முருகனும் அவர் மனைவி நளினியும் எதிர்கொண்ட சித்ரவதைகளைப் படிக்கையில், அதிகாரத் தரப்பின் வெறியாட்டம் நெஞ்சில் அறைகிறது. உள்ளத்து உண்மையாக - உணர்வுகளின் கதறலாக முருகன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியையும் இந்த நூல் அப்படியே அம்பலப்படுத்துகிறது. முருகனுக்கும் சிவராசனுக்குமான நட்பு, கொலைகளத்தில் நளினியின் பங்கு, இவர்கள் எப்படிக் குற்றவாளி ஆக்கப்பட்டனர்... என, முருகன் விவரிக்கும் உண்மைகள் எவரையும் உலுக்கக்கூடியவை. முருகன் கடந்து வந்திருக்கும் 21 வருட கொடூரமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்த நூல்.
RS. 53 More...by நாஞ்சில் நாடன்
தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி முத்திரையைப் பதிக்கத் தவறாதவர். ‘தீதும் நன்றும்!’ என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில், ஒவ்வொரு வாரமும் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும், அரசியல்_சமூக அந்தஸ்து பெற்று, வாசகர்களிடையே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்திய கட்டுரைகள்! அவற்றின் தொகுப்பே இந்த நூல். பெண்கள் பயிலும் பள்ளிகளில் சுகாதாரக்கேடு நிறைந்திருப்பதை, மிகுந்த அக்கறையோடு இவர் சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரை, கல்வித்துறை அதிகாரிகளை உற்றுநோக்க வைத்தது. கலாசாரச் சின்னங்களைப் பாதுகாக்க, கோபுரங்கள் மற்றும் சிலைகளின் பெருமைகளைச் சொன்ன விதமும், வர்ணித்த அழகும் இன்பமூட்டும் கவிதை! ஊர்வலம் பற்றி இவர் எழுதிய கட்டுரையில், கோபமும் சாடலும் தீப்பற்றி எரிவதை உணரலாம்! அவ்வப்போது நடத்தப்படும் பேரணிகளால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், மருத்த
RS. 105 More...by ப.திருமாவேலன்
மரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’! கொடூரக் கொலைகளையும், திசை அறியாது பதைபதைத்து ஓடும் அவலத்தையும், குண்டு வீச்சுகளைத் தாங்கித் தாங்கி ஈரம் காய்ந்துபோன மண்ணையும் ஒருங்கே கண்டு நடுங்கிய ஈழ தேசத்து மக்களின் பரிதாப நிலைகளை, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்கள் தொடர்ந்து கட்டுரைகளாக வெளியிட்டு, உண்மையை உலகறியச் செய்தன. இலங்கைத் தமிழர்களுக்கும், அவர்களின் வாழ்விடங்களை சீரழித்துவரும் சிங்களப் படையினருக்கும் உள்ள பல்வேறு நிலைப்பாடுகள் முதல், முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலித் தலைவர் பிரபாகரன் எதிர்கொண்ட இறுதிப்போர் வரை நடைபெற்ற சம்பவங்களைத் தொகுத்து, ‘ஈழம் இன்று!’ என்கிற தலைப்பில் ஏற்கெனவே நூலாக வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். அதிர்ச்சியூட்டும் புதிய உண்மைகள் அடங்கிய இரண்டாம் பாகம் இது. ஈழப் பிரச்னை, உலகலாவிய பிரச்னை ஆனதற்கான காரணம், தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவது, போர்க் குற்றங்கள், இலங்கை அரசின் இன்றைய அரசியல் நிலை... என பல்வேறு தகவல்களை இந்த நூலில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் ப.திருமாவேலன். தன் நாட்டு மக்களையே கொடூரமாகக் கொன்று குவித்து, சிறிதும் குற்ற உணர்வே இல்லாமல், கொடுங்கோல் ஆட்சி நடத்திவரும் ராஜபக்ஷே சகோதரர்களின் கூட்டுச்சதியை அம்பலமாக்கும் முக்கிய சாட்சியமே இந்த நூல்.
RS. 56 More...by ப.திருமாவேலன்
ஆதியோடு அந்தமாக ஈழத்து தமிழ் மக்களின் உரிமைப் பிரச்னைகளும், சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் உணர்வுகளும், போராளிகளின் வாழ்க்கையும் ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் கட்டுரைகளாக வெளிவந்து, உண்மை நிலையை உலகறியச் செய்தது! லட்சக்கணக்கான மக்கள் சொந்த மண்ணில் வாழ்வுரிமைக்காகப் போராடி, உயிரிழந்த கொடுமைகளைப் பார்த்து இந்த உலகம் வேதனைப் பெருக்கோடு கண்ணீர் சிந்திக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையெல்லாம் மீறி இலங்கை அரசாங்கம் செய்தது என்ன? சிங்கள ராணுவம் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது ஏற்படுத்திய நெருக்கடிகள்தான் அவர்களைப் போராளிகளாக உருவாக்கியது என்பதைச் சுட்டிக்காட்டி, ‘குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்’ எனத் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் திருமாவேலன். தன்மானத்தை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டு தனி ஈழம் கேட்டு போராடிய தலைவர்களுடன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இணைப்பு உண்டானது எப்படி? பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர் படை ஆயுதம் ஏந்திய போராளிகளாக உருவெடுப்பதற்கான திருப்புமுனைச் சம்பவம் என்ன? இலங்கை
RS. 67 More...by அப்பு
பேரமைதியின் பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டிய புத்தனின் தேசம், யுத்த வெறி பிடித்த எத்தனின் தேசமாக வெறிபிடித்துக் கிடக்கிறது. அப்பட்டமான இனப்படுகொலையை உலகமே வேடிக்கைப் பார்க்க நிகழ்த்திக் காட்டிய கொடூர தேசம் இன்றைக்கும் வதைகளின் கூடாரமாக தமிழ்ப் பரப்புகளை மாற்றி வைத்திருக்கிறது. பச்சிளம் குழந்தையின் எச்சில் நினைவுகளுடன் தாய்மார்கள், அன்போடு அரவணைப்பைத் தேடி அல்லல்படும் அறியா குழந்தைகள், ‘மாளத் தயார்; மானத்தை இழக்கமாட்டோம்!’ என்று கற்பைக் காக்கப் போராடும் பெண்கள், ஓடிய களைப்புத் தீர அமைதியை நாடும் நாடி தளர்ந்தோர் என, தமிழீழ மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் வாழும் உரிமை இல்லாத ஓர் இடமாக மாறிவிட்டது இலங்கை. உயிருக்குப் பயந்தும், உடமைகள் அற்றுப்போயும் நிற்கதியாய் தவிக்கும் வன்னிப் பகுதி மக்களின் அவலம், வரலாற்றுத் துயரம். அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நடந்த நெஞ்சுருக வைக்கும் நிகழ்வுகளின் பதிவுகளே இந்த நூல். தமிழ்த் தேசத்து மக்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் உள்ள கிளர்ச்சிகளின் பின்னணி என்ன?, இலங்கைத் தமிழ் மண்ணில் நடந்த கொடுமைகளுக்கு ஆணிவேராக இருந்த காரணி எது?, அங்கு உள்ள தமிழ் மக்களின் இன்றைய நிலை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நோக்கம், இதில் தமிழீழ உணர்வுகொண்ட போராளிகளின் பங்கு என, தான் கண்ட காட்சிகளையும், தான் அனுபவித்த கொடுமைகளையும், கதறல் சாட்சியாக இந்த நூலில் இறக்கி வைத்திருக்கிறார் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பாத ஆதங்கக்காரர் ஒருவர். நெஞ்சை நொறுக்கும் நிஜங்களையும் - உலகத்தையே உறையவைக்கும் கொடூரங்களையும் படித்து உங்கள் கண்களில் கசியும் நீரே, நிகழ்ந்த படுகொலைகளைத் தட்டிக் கேட்பதற்கான முதல் நெருப்பு!
RS. 88 More...by நாவலர்.ஏ.இளஞ்செழியன்
பெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். இலங்கை மலையக மக்கள் மத்தியில், பொதுவாக தமிழ்மக்கள் மத்தியில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் களையவும், பின்னர் அவர்கள் மத்தியில் அரசியல் தலைமையை உருவாக்கவும் மேற்கொண்ட முயற்சிகளை, ஏனைய வரலாற்றுச் சம்பவங்களுடன், இந்த நூலில் தமது அனுபவங்களாகப் பகிர்ந்துள்ளார், நாவலர் ஏ.இளஞ்செழியன். இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசியல் வரலாறு அல்லது மலையக மக்களின் வரலாறு எழுதுபவர்கள், இந்திய வம்சாவளி மக்களிடையே நிலவிய போராட்ட வாழ்க்கையையும், இலங்கை அரசு கையாண்ட அடக்குமுறைகளையும், அவ்வப்போது இலங்கைக்குச் சென்ற தமிழகப் பேச்சாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோர் மக்களிடையே ஆற்றிய உரைகளையும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். மேலும், இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்குத் தலைமை வகித்து, ஈழத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த நாவலர் ஏ.இளஞ்செழியன், ஈழத் தமிழ்மக்களிடையே எத்தகைய அரசியல் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் என்பதனையும் அறிய இந்த நூல் வாய்ப்பளிக்கிறது. உலகெங்கும் பரவி வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழ்மக்கள், இலங்கை மலையக மக்களின் வரலாற்றை அறியும் வகையில் இந்த நூலை, விகடன் பிரசுரம் தமிழ்ச் சமூகத்துக்கான பெரும் கடமையாக வெளியிடுகிறது...
RS. 67 More...by சீமான்
தமிழகத்தில் இருக்கும் ஈழ ஆதரவுத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவர் சீமான். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அரசுக்கு எதிராக ஆவேச வாதங்களை எழுப்பியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சீமான். ஐந்து மாத சட்டப் போராட்டத்துக்குப் பிறகு சிறை மீண்டுவந்த சீமான், ஜூனியர் விகடனில் ‘திருப்பி அடிப்பேன்!’ என்ற தலைப்பில் எழுதிய தொடர்தான் இங்கே நூலாகத் தொகுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலில், ஈழப் பிரச்னை மட்டுமல்லாமல், பொதுவான அரசியல், வாக்குச் சுதந்திரம், மொழிப்பற்று, இளைஞர்களின் பங்களிப்பு என சமூக மாற்றத்துக்கான தேவைகளை, சீமான் வலியுறுத்தி இருக்கும்விதம் அசாத்தியமானது. ஒவ்வொரு கட்டுரையையும் படித்துவிட்டு, ‘களத்துக்கு வரத் தயார்!’ என தமிழகம் முழுக்க எழும்பிய தன்னெழுச்சியே, சமூக மாற்றத்துக்கான சாட்சி! ஈழத் துயரங்களையும், தாய்த் தமிழகத்தில் நிகழும் சகிக்க முடியாத அரசியல் போக்கையும், கனல் தெரிக்கும் வார்த்தைகளால் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகள் இளைஞர்களை முறுக்கேற வைத்தன. ஒவ்வொரு கட்டுரையிலும் உக்கிரமாக வெடித்த சீமானின் வார்த்தைகள், அரசியல் மட்டத்திலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசியல் மாற்றத்துக்கான பெரும் போராக ஒவ்வொரு தமிழனையும் உசுப்பேற்றின! சீமானின் ஆவேச வீச்சை, உக்கிரம் குறையாதபடி பதிவு செய்திருக்கிறார் இரா.சரவணன். ஜூனியர் விகடனில், பற்றி எரியும் பரபரப்புத் தொடராக வெளிவந்த சீமானின் கட்டுரைகள், நிச்சயம் உங்களையும் அதே ஆவேசத்தோடு ஆட்கொள்ளும்!
RS. 53 More...by எஸ்.கிருபாகரன்
“கலையும் உணர்ச்சியும் இணையும்போதுதான் நல்ல பண்பாடும் நாகரிகமும் வளர்கின்றன. நமது கடமைகளைச் செவ்வனே செய்வோம். ஒருவன் தன்னை மட்டுமே நினைக்காமல் சூழ்நிலையில் உள்ள மற்றைய மனிதர்களையும் நினைத்து அவர்களுக்காகப் பணி செய்வதால் நாட்டின் பொதுத் தொண்டனாகிறான் இந்த உணர்ச்சி ஒவ்வொருவருக்கும் வேண்டாமா?’’ தமிழக அரசியல் வானில் ஒளி வீசும் நட்சத்திரமாக இன்னும் ஜொலித்துக்கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சொன்னதே மேற்கண்ட வரிகள். ‘உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்!’ என்ற சீத்தலைச் சாத்தனாரின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் மூலம் எண்ணற்ற குழந்தைகளின் பசிப் பிணி அகற்றி, வள்ளலார் வழி நின்று வாடிய குழந்தைப் பயிர்களின் வாட்டத்தைப் போக்கியவர் அவர். நாடக சபையில் தன் வாழ்வைத் துவக்கி, தமிழக சட்டசபையை அவர் பிடித்தது எப்படி? நடிகர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? கலைஞர்களின் கடமைகள் என்ன? அரசியல்வாதிகள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன? இதோ ‘நான் ஆணையிட்டால்’ என்ற இந்தப் புத்தகத்தில், எம்.ஜி.ஆர். விவரிக்கிறார். அவர் நாடகத்துக்கு வந்த காலம் முதல், தமிழகத்தின் சிம்மாசனத்தைப் பிடித்தது வரை தான் கடந்து வந்த பாதையை பல கால கட்டங்களில், பல மேடைகளில் பேசிய உரைகளின், கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். எண்ணத்தைச் செயல்படுத்தி நினைத்ததை முடித்து, சாதித்துக் காட்டிய எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியத்தை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதை உணர்ந்து எம்.ஜி.ஆரின் உரைகளைச் சிறப்பாகவும் கால வரிசைப்படியும் தொகுத்துள்ளார் எஸ்.கிருபாகரன். இந்த நூலைப் படிக்கும்போது தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர். என்ற மாமனிதரின் பங்கு எத்தகையது என்பதையும், சாமானியன் சரித்திரத் தலைவன் ஆனதையும் நிச்சயம் அறியலாம்!
RS. 91 More...