Cart is Empty
by ராஜம் முரளி
‘அழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம். அதிலும் அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத ஆத்மாக்களே இல்லை. ‘அழகு’ என்கிற வார்த்தைதான் உலகை ஆள்கிறது. உடல் அழகை மேன்மேலும் உயர்த்துவதற்கான வழிகள் ஆங்காங்கே கிடைத்தாலும், அவற்றில் ஆரோக்கியம் இருப்பதில்லை. ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் அழகையும் விரும்புவது இயல்புதானே! இதன் அடிப்படையில், ரசாயனக் கலவை இல்லாத இயற்கை வஸ்துகளின் மூலம் இனிக்கும் இளமையான தோற்றத்தைப் பெறும் அற்புதத் தகவல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த நூல். தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப் பெறுவது சாத்தியமா? ‘சாத்தியமே’ என்ற பதிலை, சுவாரஸ்யமிக்க செய்முறைகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் ராஜம் முரளி. ‘அவள் விகடனி’ல் ‘அழகே... ஆரோக்கியமே...’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைத்துத் தரப்பு மக்களும் மிக எளிதாக செய்து பார்க்கும் வழிமுறைகள் இதில் உள்ளன. அழகுடன் பழகும் அற்புத வாய்ப்புக் கிடைக்காதா! என ஏங்குபவர்களுக்கும், அழகை அரவணைக்க ஆசைப்படுபவர்களுக்கும் இந்த நூல் அற்புதமானப் பொக்கிஷம்.
RS. 60 More...by விகடன் பிரசுரம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..! வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்..! உண்மைதான்! ரகசியங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும்வரை அவை ஆச்சரியமான அதிசயங்கள்தான்! எப்போது அவை நம் கண்களுக்கு புலப்படுகிறதோ, அப்போது அவை அழகான அதிசயங்களாக நம்மை பிரமிக்க வைத்துவிடும். அதுவும் பிரபலமானவர்களின் அழகு ரகசியங்கள் நமக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் தந்து, நம்மையும் அழகுபடுத்திக் கொள்ளத் தூண்டும். அப்படி நமக்கு ஏற்கெனவே அறிமுகமான சில பிரபலங்களின் அழகு ரகசியங்களை இங்கே அணிவகுத்துத் தந்திருக்கிறோம். அவள் விகடன் இதழில் தொடர்ந்து வெளியான அழகின் ரகசியம் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். சினிமா, இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் பிரபலமான 42 பெண்மணிகள், தங்கள் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமான விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் விளக்கிச் சொல்கிறார்கள். பளிச் என்று மின்னலைத் தோற்கடிக்கும் அழகோடு வலம் வரும் பிரபலங்களைப் பார்க்கும்போது, எப்படிப்பா அவங்க ஸ்கின் மட்டும் பளபளனு மின்னுது..! அவங்க என்னதான் உபயோகிப்பாங்களோ? அது என்னனு தெரிஞ்சா நானும் வாங்கி அழகுபடுத்திப்பேனே
RS. 84 More...by சுவாமி சுகபோதானந்தா
இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்! பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளாக தங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த உலகம் பெண்களை மிகப்பெரும் சக்தியாகப் போற்றும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்களும், அவர்களது குடும்பத்தாரும் நம்பிக்கையான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதற்காக கோபம், சந்தேகம், மன அழுத்தம், பொருளாதாரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து பெண்கள் முன்னேற வேண்டியுள்ளது. இப்படி, பெண்களின் மனநிலையை அறிந்து, அவர்களிடத்தில் சிக்கிக் கிடக்கும் மன அழுத்தங்களை விலக்கி, அவர்களின் இதயத்தை இலகுவாக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா. அவள் விகடன் இதழ்களில் ‘பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ தொடராக வந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த தன் உணர்வு கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் வீற்றிருக்கிறது. பெண்களின் மன இறுக்கத்தையும், மனதில் ஏற்படும் சந்தேக நோயையும் விளக்கி, பெண்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் பயனுள்ள நூல் இது!
RS. 70 More...by வசுந்தரா
வாழ்க்கை அழகு நிறைந்தது. மலர், தென்றல், நதி, கடல், காடு, மலை, வானம், வயல் என்று இயற்கையின் படைப்பில் யாவும் அழகு ததும்புவன; பெண்ணும்தான். பெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று வயதைக் கொண்டு ஏழாக வகைப்படுத்தியிருக்கிறது நமது இலக்கியம். அதுபோல, பெண்ணின் அழகை வெளிப்படுத்தும் பாகங்களையும் ஏழாக வகைப்படுத்தலாம். கூந்தல், கண்கள், இதழ்கள், கன்னம், கழுத்து, இடை மற்றும் விரல்கள் ஆகிய ஏழு வகை பாகங்களும் அழகு பொருந்தி இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களும் நினைப்பார்கள்; அது இயற்கையே. ஆனாலும், தொடர்ந்து அழகைப் பேணிப் பாதுகாக்கும் பெண்களுக்கே இந்த ஏழு வகை அம்சங்களும் பொருந்தியிருக்கும். சிலருக்கு அழகைப் பேணுவதில் ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியாது. தெரிந்தாலும் அரைகுறையாகவே தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்காகவே 'அவள் விகடன்' இதழில் 'அழகு' தொடராக வெளிவந்தது. அழகுக்கலை நிபுணர் வசுந்தரா எழுதிவந்த இந்தத் தொடர் வாசகியர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த நூல் முழுக்க இயற்கை முறையிலான அழகுக் குறிப்புகள் நிறைந்து இருக்கின்றன. எ
RS. 123 More...by ராஜம் முரளி
``நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா? தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் முல்லைச் சிரிப்பும்தான் அழகு என்பதில்லை. `சாதாரணமாக இருந்தாலும், கூந்தல் முதல் பாதம் வரை நம்முடைய உறுப்புகளை ஒழுங்காகப் பராமரித்தாலே அழகாகத் திகழலாம்’ என்கிறார், இயற்கை அழகுக் கலை நிபுணர் ராஜம் முரளி. ஏற்கெனவே, `அழகைப் பராமரித்தல்’ குறித்து இவர் எழுதி, நமது பிரசுரத்தில் வெளிவந்துள்ள நூல்கள், வாசகர்களிடையே, முக்கியமாக பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. இப்போதும், பல நூறு டிப்ஸ்களை அள்ளி வழங்கி இருக்கிறார். நம் அழகைப் பேணிப் பராமரிக்க உதவும் பொருட்கள் எல்லாம் எங்கேயோ எட்டாத தூரத்தில் இல்லை... எல்லாமே நம் வீட்டில், நாம் அடிக்கடி புழங்கும் பொருட்கள்தான். பால், தயிர், வெந்தயம், எண்ணெய், மருதாணி, கறிவேப்பிலை, மிளகு என்று நம் அடுக்களையில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான அழகு சிகிச்சை செய்துகொள்ளக் கற்றுத் தருகிறார். வெட்டிவேர், ரோஜா இதழ்கள், புங்கங்கொட்டை போன்ற மற்ற சில பொருட்கள் நாட்டுமருந்துக் கடையில் கிடைப்பவையே! தயாரிக்கும் முறையையும் உபயோகிக்கும் விதத்தையும் அதில் கவனிக்கவேண்டிய விஷயங்களையும் எளிமையாக வழங்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த கேள்விகளுக்கு விரிவாக விளக்கங்களைத் தந்திருக்கிறார். அவை, எல்லோருக்குமே பயன் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இனியும் தாமதிக்காமல், உங்கள் கைக்கு எட்டும் தூரத்திலேயே காத்திருக்கும் அழகை, உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு இந்தப் புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். அழகுடன் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகள்!
RS. 95 More...by ஆர்.வைதேகி
இன்றைய தேதியில் பலருக்கும் 'தலையாய' பிரச்னையாக இருப்பது தலைமுடியை பாதுகாப்பது தான். இந்தப் பிரச்னை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் பொதுவானதுதான். இயந்திரங்களின் உலகமாகிவிட்ட தற்கால சூழலில் மாசு கலந்த காற்றும் நீரும் தலைமுடிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப்போல மாசு மற்றும் தூசியிலிருந்து தலைமுடியைக் காப்பாற்ற... என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்று தெரியாமல் எத்தனையோ பேர் தவிக்கின்றனர். சிலருடைய ஆலோசனையைக் கேட்டு இருந்த முடியை இழந்தவர்களும் உண்டு. அமேசான் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ மூலிகைக் கதைகளை நம்பி காசையும் முடியையும் இழந்தவர்களுக்கும் இங்கே பஞ்சமில்லை. எனில், இந்த பிரச்னைக்கு என்னதான் தீர்வு? `கூந்தல் என்சைக்ளோபீடியா' என்கிற இந்தப் புத்தகம் அதற்கான முழுமையான தீர்வைச் சொல்கிறது!
RS. 102 More...by வீணா குமாரவேல்
இன்றைய நவ நாகரிக உலகில் தங்களைப் பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்கள் இல்லை. ஒவ்வொருவரின் அறிவு, மதிப்பு, வசதியை அழகு மேலும் உயர்த்திக் காட்டுகிறது. பிறருடைய ஈர்ப்பை மட்டும் அல்லாது தன்னம்பிக்கை, பெருமை, தெளிவு என அழகு நமக்குக் கொடுக்கும் அபரிமிதமான ஆற்றல்கள் அதிகம். மேக்கப் என்பது சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள், வசதிபடைத்த மேல்தட்டுப் பெண்களுக்கு மட்டுமேயானது என்கிற நிலை இப்போது மாறிவிட்டது. நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் தங்களை அழகாக மாற்றிக்கொள்ள மேக்கப் கலையை நாடத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் பெருநகரங்களில் அழகு நிலையங்கள் பல்கிப் பெருகி உள்ளன. இமை, விழி, புருவம், நெற்றி, உதடு, கன்னம், கழுத்து, காது, மூக்கு, முகம், முதுகு, மேனி, விரல்கள், நகங்கள், சருமம், கூந்தல் என அத்தனை உறுப்புகளும் அழகு பெற நூலாசிரியர் வீணா குமாரவேல் சொல்லும் வழிமுறைகள் அனைவரும் பின்பற்றத்தக்கவை. மேலும், நம் நிறத்துக்கு ஏற்றபடி உடை அலங்காரம், அணிகலன்கள், கையில் எடுத்துச் செல்லும் பை என அனைத்தையும் மாற்றிக்கொள்ளும் வழிமுறைகளையும் இங்கே கற்றுத் தருகிறார் வீணா குமாரவேல். அழகுக்கு அணி சேர்க்கும் எக்கச்சக்கக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகம், உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் இருக்க வேண்டிய ஒன்று.
RS. 74 More...by டாக்டர் வி.ஜெயந்தினி
குழந்தைகள், இந்த உலகத்தின் ஈரத்தை இன்னமும் காப்பாற்றி வைத்திருப்பவர்கள். வறுமை தொடங்கி வன்முறை வரையிலான எந்த விஷயத்தையும் குழந்தைகள் சட்டைசெய்வது இல்லை. இந்த உலகம் இன்ப நீச்சலுக்கான தண்ணீர்த் தொட்டி என்பதுதான் குழந்தைகளின் பார்வை. ஆனால், நாம் குழந்தைகளைக் கையாளும் விதங்கள் எப்படி இருக்கின்றன? நாம் நினைக்கும்போது அந்தக் குழந்தை சிரிக்க வேண்டும்; நாம் சொல்வதைக் கேட்க வேண்டும். நாம் வலியுறுத்துவதை ஏற்க வேண்டும். எதிர்பார்ப்பு என்கிற பெயரில் இப்படி எத்தனைவிதமான நெருக்கடிகள்? சாப்பாடு தொடங்கி படிப்பு வரையிலான அத்தனை விஷயங்களையும் நம் விருப்பப்படியே குழந்தைகள் மீது திணிக்கிறோம். உலகத்தின் புது வரவுகளுக்கு நாம் வழிகாட்டும் பக்குவமா இது? குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்கிற நுண்கலையை இந்த நூலின்வழியே கற்றுத் தருகிறார் டாக்டர் வி.ஜெயந்தினி. பெற்றோர்கள் குழந்தையிடம் எதிர்பார்ப்பதைப்போலவே குழந்தையும் பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியவற்றிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அதனைப் புரிந்து நடப்பதே அந்தக் குழந்தையை நம்பர் 1 ஆக்குவதற்கானத் தகுதி என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறார் டாக்டர் வி.ஜெயந்தினி. ‘அவள் விகடனில்’ தொடராக வந்த கருத்துக்கள் இப்போது புத்தக வடிவில்! உங்கள் குழந்தையை நம்பர் 1 ஆக்க, இந்த நூல் நிச்சயம் உதவிகரமாக விளங்கும்.
RS. 50 More...by ப்ரியா தம்பி
‘‘உங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, நான் எங்கே இருந்தேன்?”, ‘‘இறந்துபோனவங்களை மண்ணுக்குள் புதைச்சா, அவங்க எப்படி மேல போவாங்க?” - இப்படி குழந்தைகள் அறிவுபூர்வமாக கேள்விகள் எழுப்பும்போது நம்மால் அவர்களுக்குப் புரிகிறமாதிரி பதில்கள் தர முடிவது இல்லை. ஆண் குழந்தைகள் புத்திசாலித்தனமாகப் பேசினால் ‘அறிவாளி’ என்றும், அதுவே பெண் குழந்தைகள் என்றால் ‘வாயாடி’ என்றும் நாமே பிரிவினை செய்துவிடுகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் பேசுவதைக் காட்டிலும் எழுதுவதற்கு நல்ல தளம் கிடைத்து, அதை நன்றாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். தனது பால்யகாலம்தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம்பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூல் ஆசிரியர் ப்ரியா தம்பி. போகிறபோக்கில் சம்பவங்களைச் சொல்லிச் சென்றாலும் ஒரு விஷயம் ஒருவருக்கு மயிலிறகால் வருடுவதுபோலவும் அதுவே வேறொருவருக்கு ஊசியால் குத்துவதுபோலவும் இருப்பது, இவரது எழுத்து வன்மையின் எடுத்துக்காட்டு. எந்த ஒளிவுமறைவும் இன்றி உள்ளது உள்ளபடி பகிர்ந்ததால் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப் பெற்ற ‘பேசாத பேச்செல்லாம்...’ தொடர், இப்போது புத்தகமாக வெளிவருகிறது. புத்தகம் படித்து முடிக்கும்போது உங்களை நீங்களே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.
RS. 130 More...by கங்கா ராமமூர்த்தி
இன்றைய வாழ்க்கையில் அழகுக்கு நாம் அதிகமாகவே ஓர் அந்தஸ்தை வழங்கி இருக்கிறோம். இயற்கையாக உள்ள அழகுக்கு மேலும் மெருகூட்ட அனைவரும் பியூட்டி பார்லர்களை நோக்கிப் படையெடுக்கிறோம். அதிக விலை கொடுத்து அறிமுகமில்லாத செயற்கை க்ரீம்களையும், லோஷன்களையும் வாங்கிப் பூசிக்கொண்டு இயற்கை அழகைக் கெடுத்துக்கொள்வதைவிட, இயற்கையாக விளைந்த மூலிகை, மருந்துப் பொருட்கள், அஞ்சறைப் பெட்டி அழகு சாதனங்கள் போன்றவற்றின் மூலமாக முகத்தைப் பொலிவடையச் செய்து மூலிகைகளின் மூலம் அழகை உங்கள் முன் மண்டியிடச்செய்ய முடியும். முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி; முகத்திலுள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பால் நாம் அடையும் நன்மை என்ன; அலர்ஜி, அல்சர் ஆகியவற்றுக்கான காரணம்தான் என்ன; மோர் ஒரு மருந்தாவது எப்படி; வில்வ இலையைக் கொண்டு உடலின் வில்லங்கத்தைப் போக்குவது எப்படி; துளசியைக்கொண்டு நம் உடல் உறுப்புகளை தூய்மைப்படுத்துவது எப்படி; புறக்கண்ணில் ஏற்படும் கருவளையத்தைப் போக்குவது எவ்வாறு போன்ற பலவித நுணுக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றன. அதிகச் செலவில்லாமலேயே அழகை அதிகரித்துக் கொள்வது எப்படி; எந்தெந்தப் பொருளை எப்படிப் பயன்படுத்த
RS. 50 More...