செங்கல்பட்டு - திருவடிசூலம் சப்த சைலஜ ஶ்ரீபாதாத்ரி நூற்றியெட்டு திவ்யதேசத்தில் (நடப்புச் சூழலில் உரிய விதிகளைப் பின்பற்றி) நிகழவுள்ள
இந்த வழிபாடுகளில், வாசகர்கள் தங்கள் நலனுக்காகவும் பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களின் நன்மைக்காகவும் வேண்டிச் சங்கல்பித்து பலன் பெறலாம்.
குறைவற்றச் செல்வமான நோயற்ற வாழ்க்கையை வரமாகப் பெற, 'ஸ்ரீ'தன்வந்த்ரி பகவானை வழிபட வேண்டும். அவரை வழிபடுவதால் தீராத பிணிகளும் தீரும்; எவ்வித நோய் பாதிப்புகளும் நம்மை அண்டாது என்கின்றன ஞானநூல்கள்.
அவ்வகையில், இன்றைக்கு உலக மக்களைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் விலகவும், பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம்பெறவும், வாசகர்கள் ஏவ்வித நோய்ப் பாதிப்புக்கும் ஆளாகாத வண்ணம் பூரண உடல் ஆரோக்கியம் பெறவும், வேறு பிணிகளால் வருந்துவோர் அவற்றிலிருந்து விரைவில் மீண்டு நலம் பெறவும் வேண்டி... சக்தி விகடன் மற்றும் திருவடிசூலம் ஆதிபரமேஸ்வரி ஶ்ரீகருமாரி அம்மன் அறக்கட்டளை இணைந்து வழங்கும் ஶ்ரீ தன்வந்த்ரி மகா ஹோமம் மற்றும் சிறப்பு திருமஞ்சன வழிபாடுகள் (27.9.2020 ஞாயிறன்று) நடைபெறவுள்ளன.
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.250 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில்... வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் (29.9.20 செவ்வாய் அன்று) வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!
கீழ்க்காணும் சங்கல்ப முன்பதிவு படிவத்தில் பெயருக்கான இடத்தில் தங்களின் நட்சத்திரத்தையும் சேர்த்துக் குறிப்பிடவும்.