• Date: July 11, 2020
  • Time: மாலை 06.00 - 08.00

பதிவு கட்டணம் / Registration Fee

200

ஆர்.பி.கணேசன்

முன்னோடி செம்மரச் சாகுபடி விவசாயி. சுமார் 47 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் செம்மரத்தைச் சாகுபடி செய்து வருகிறார். செம்மரச் சாகுபடியில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். பல்வேறு கூட்டங்களில் செம்மரம் குறித்து பேசி வருகிறார். இதற்காகச் 'செம்மரச் செம்மல்' என்ற விருதும் பெற்றுள்ளார்.

அன்பார்ந்த வாசகர்களே!

தமிழ்நாட்டில் பலவிதமான மரச் சாகுபடி நடந்து வருகிறது.  வங்கியில் போடும் பணத்தைவிட, நிலத்தில் நடும் மரங்கள் கொடுக்கும் பயன்கள் அதிகம். சுற்றுச்சூழலுக்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும், மழையை ஈர்ப்பதற்கும் பேருதவி செய்வதோடு நடவு செய்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கின்றன மரங்கள். இப்படி வளர்க்கப்படும் சில மரங்கள், வளர்ப்பவர்களைக் கோடீஸ்வரர்களாக்கும் தன்மை உடையவை. அவற்றில் செம்மரம், சந்தன மரம், கருங்காலி, ஈட்டி போன்றவை முக்கிய இடத்திலிருக்கின்றன. அதிலும் செம்மரங்கள் வறண்ட நிலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்றவையாக இருப்பதால் தமிழ்நாட்டில் பல விவசாயிகள் செம்மரச் சாகுபடி செய்து வருகிறார்கள். செம்மரம் வளர்ப்பு, சாகுபடி தொழில்நுட்பங்கள், அதன் விற்பனை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள இந்த நேரலை (ஆன்லைன்) பயிற்சி வழிகாட்டும். 

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜூலை, 11 காலை 12 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404/9940072144

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 9790990404/9940072144