கால்நடைகளுக்கு இயற்கை வைத்தியம் பார்ப்பதில் இன்று இந்தியாவிலேயே இருக்கும் கால்நடை மருத்துவர்களில் புண்ணியமூர்த்தி முக்கியமானவர். மடிவீக்கம், கோமாரி, காய்ச்சல், உண்ணி தொல்லை, கழிச்சல் உள்ளிட்ட கால்நடைகளுக்கு வரும் நோய்களுக்கு எளிய தீர்வுகளை முன்வைத்து வருபவர். அதை நடைமுறையாகவும் பல இடங்களில் சாத்தியப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் மரபுசார் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
கால்நடைக்கான ஆங்கில மருத்துவத்துக்கு எப்போதும் ஒரு கால்நடை மருத்துவரையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால், கால்நடைக்கான மூலிகை மருத்துவத்துக்கு அப்படியில்லை. ஒருமுறை நீங்கள் தெரிந்துகொண்டால் அடுத்த முறை நீங்களே ஒரு மருத்துவராக இருந்து செயல்படலாம். எளிய மூலிகைகள், அஞ்சறைப் பெட்டிகளில் உள்ள பொருள்களை வைத்து மாடுகள், ஆடுகள், கோழிகள் ஆகியவற்றுக்கு ஏற்படும் நோய்களை எளிதாக விரட்டிவிடலாம். அந்தவகையில இந்தப் பயிற்சி கால்நடை வளர்ப்போருக்கு உதவியாக இருக்கும். இந்த ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307
நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.
வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.