• Date: ஜூலை 19, 2020
  • Time: காலை 10.30- 12.30
corona
எம்.ரமேஷ்பிரபா

கேலக்ஸி இன்ஸ்டிடியூட் அப் மேனேஜ்மென்டில் தலைவராக உள்ள ரமேஷ்பிரபா பல வருடங்களாக மாணவர்களின் உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் வழங்கி வருபவர். பொறியியல், MBA படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இவர் நடத்திய வழிகாட்டும் நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். 

corona
க.சத்தியசீலன்

அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கும் இவர், IIT,IISC, NID என பல கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு இந்தத் துறையில் பயிற்சி கொடுத்தவர். டாடா மோட்டார்ஸ்,ஜெனரல் மோட்டார்ஸ், நிஸான், டி.வி.எஸ் எனப் பல நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். MIT (புனே) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கல்விக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

corona
ஏ.ஆர்.ஆர் ராமநாதன்

சென்னையிலுள்ள 'Dot School of Design'-னின் சேர்மன் ஏ.ஆர்.ஆர் ராமநாதன். டாட் ஸ்கூல், சென்னையின் முதல் டிசைன் ஸ்கூல் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த வயதாக இருந்தாலும் சரி, எந்தக் கல்வி பின்புலம் கொண்டிருந்தாலும் சரி, ஆர்வமுள்ள எவரும் இக்கல்லூரியில் சேர்ந்து பயிலலாம்! தமிழகத்திலுள்ள பள்ளிகளில், குழந்தைகளுக்கு டிசைன் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ராமநாதன், மாணவர்களுக்கு‌ வழிகாட்டியாகவும், கல்வி ஆலோசகராகவும் திகழ்கிறார். பாரம்பர்ய ஆத்தங்குடி டைல்ஸைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும்,‌ பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்..

அன்பார்ந்த வாசகர்களே!

ஆனந்த விகடன் மற்றும் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் இணைந்து நடத்தும் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

நீங்கள் +2 முடித்த மாணவரா ? உங்களின் எதிர்கால படிப்பை சிறப்பானதாகத் திட்டமிட ஓர் அரிய வாய்ப்பு...ஏராளமான வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ள டிசைனிங் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன? உங்களுக்கு எந்தப் படிப்புகள் பொருந்தும்? உங்களுக்கு உகந்த படிப்புகளில் எப்படி சேர்வது? என்ற உங்களின்  கேள்விகளுக்கு விடைகாண ஆனந்த விகடன் மற்றும் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் இணைந்து நடத்தும் "என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்"  கல்வி வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் பங்கேற்க, பின்வரும் குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

8012342589

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 8012342589