• Date: ஜூலை 28, 2020
  • Time: மாலை  6.00 - 7.00
corona
ரா.கிருஷ்ணன்

சென்னை, கொளத்தூர்- திருப்பதி நகரில் அமைந்துள்ள அருள்மிகு திருமால்மருகன் திருக்கோயிலில், வேல் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். தொடர்ந்து, வேல்மாறல் பாராயணம் நிகழும். திருப்புகழ் முதலான ஞானநூல்கள் குறித்த ஆய்வுகள் செய்தவரும், சிறந்த கட்டுரையாளரும் சொற்பொழிவாளருமான திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் `வேல்மாறல் பாராயணம்’ நிகழ்த்தவுள்ளார்.

அன்பார்ந்த வாசகர்களே!

சக்தி விகடன் மற்றும் ஸ்ரீநாராயணி நிதி லிமிடெட் நிறுவனம் இணைந்து வழங்கும் கந்தனின் அருள் வேண்டி வேல்மாறல் பாராயணம் வழிபாடு  (சிறப்பு அபிஷேக ஆராதனையுடன்). முருகனின் ஆயுதப் படையான வேலாயுதத்தை வழிபடுவது வேலனையும், சிவனையும், சக்தியையும் வழிபடுவதற்குச் சமம். வேலினைப் போற்றும் பல துதிப்பாடல்கள் உண்டு. அவற்றுள் உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது, வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் தொகுத்து அருளிய வேல்மாறல் பாராயணம். திருமண வரம், குழந்தைப் பேறு, செல்வ கடாட்சம், உத்தியோக உயர்வு, வியாபாரம் செழிக்க, நோய்களும் வினைகளும் விலக... ஆகிய பலன்கள் வேண்டி வேல்மாறல் பாராயண வழிபாடு நிகழவுள்ளது. இந்த ஆன்லைன் நிகழ்வில் தங்கு தடையின்றிப் பங்கேற்க கீழ்க்காணும் குறிப்புகளை மறவாமல் பின்பற்றுங்கள்.

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

7397430999

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 7397430999