• Date: ஆகஸ்ட் 21, 22
  • Time: மாலை 06.00 - 07.00 & மாலை 03.00 - 04.00
கலைமாமணி பாரதி திருமகன்

புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞரான சுப்பு ஆறுமுகம் அவர்களின் மகள். பல தளங்களிலும், ஊடகங்களிலும் வில்லிசைப் பாடல்கள் மூலம் ஆன்மிகம், நம்  கலாசார மகிமைகளை வளர்த்து வருகிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

நாள்: 21.8.2020 (வெள்ளி)  
1. வில்லுப்பாட்டுடன் விநாயகர் சதுர்த்தி!
- நேரம்: 6 - 7:00 P.M. முழுமுதற் தெய்வமாம் பிள்ளையாரின் மகிமைகளை வில்லுப் பாட்டிசையாக வழங்குகிறார்  கலைமாமணி பாரதி திருமகன்.  தொன்மைவாய்ந்த நம் மண்ணின் அற்புதக் கலைகளில் ஒன்று வில்லுப்பாட்டு. வில்லுப் பாட்டு ஒவ்வொன்றும் தந்தனத்தோம் என்றே தொடங்கும். `தன்னைத் தந்தோம்...' என்பதே தந்தனத்தோம் என்றானதாம்! ஆம், நாமும் அனைத்தையும் தந்த ஆனைமுகனுக்கு நம்மையே தரும் விதமாக, வில்லுப்பாட்டிசையில் (இணைய வீடியோ வழி) சங்கமிப்போம்; விநாயகரின் மகிமைகளைக் கேட்டு மகிழ்ந்திருப்போம்!
நாள்: 22.8.2020 (சனி) 
2. தீவனூர் பொய்யாமொழி விநாயகர் சிறப்பு தரிசனம் - நேரம்: 3 - 4:00 P.M. சங்கல்ப வழிபாடு! திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் வரும் ஊர் தீவனூர். இங்கே,  சுயம்பு வடிவில் லிங்க வடிவில் அருளும் பிள்ளையாரை கணபதி லிங்கம் எனப் போற்றுக்கிறார்கள். இவரை ஒருமுறை தரிசித்தாலேபோதும், வினைகள் தீர்ந்து நம் விதிப்பயன் நல்லவிதமாக மாறும்  என்பது நம்பிக்கை. திருமண வரம், குழந்தைப் பேறு அருளும் அற்புத கணபதி இவர். விநாயக சதுர்த்தித் திருநாளில் (இணைய வீடியோ மூலம்) வீட்டிலிருந்தபடியே இந்தத் தலத்தில் நிகழும் விசேஷ வழிபாட்டு ஆராதனைகளை தரிசித்து மகிழ்ந்திருப்போம்.
இந்த ஆன்லைன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

7397430999

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 7397430999