அன்பார்ந்த வாசகர்களே...!
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் திட்டமிட்டுச் செய்கிறவர்களுக்கு பெரிய அளவில் சிக்கல்களோ சிரமங்களோ ஏற்படுவதில்லை. நிதி சார்ந்த விஷயங்களிலும் அப்படித்தான். வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு, என்னென்ன இலக்குகளுக்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு, சரியான முதலீட்டுப் பாதையில் செல்கிறவர்களின் பயணம் எப்போதுமே இனிமையானதாகவே இருக்கும்.
செலவுகளை எப்படி சரியாகத் திட்டமிடுவது, எப்படி இலக்குகளைத் தீர்மானிப்பது, எவ்வளவு சேமித்தால் இலக்குகளைப் பூர்த்தி செய்ய முடியும், எந்தெந்த முதலீடுகள் எனக்குச் சரியானதாக இருக்கும், நான் என்னென்ன இன்ஷூரன்ஸ் பாலிகள் எடுக்க வேண்டும், நான் கடன் எவ்வளவு வாங்கலாம், கடன் வாங்கி வீடு வாங்கலாமா, கார் வாங்கலாமா, குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், என்னுடைய ஓய்வுக்காலத்துக்கு எவ்வளவு ஒதுக்கவேண்டும், வருமான வரிச் சேமிப்புக்கு நான் என்ன செய்யவேண்டும் என நிதித் திட்டமிடலில் நம் எல்லோருக்குமே ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன.
உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வுகளைச் சொல்லவே, நாணயம் விகடன் ‘ஃபைனான்ஷியல் பிளானிங் - குடும்ப நிதித் திட்டமிடல்' ஒருநாள் பயிற்சி வகுப்பை
சென்னையில் ஜூலை 14- ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த உள்ளது.
கணவன் மனைவி இருவரும் இணைந்து குடும்ப நிதித் திட்டமிடல் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்பதற்காகக் கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. நிதித் திட்டமிடல் குறித்து முறையான பயிற்சியைப் பெற்று வளமான வாழ்க்கைக்கு அடித்தளமிடுங்கள்
இடம் : சென்னை
நாள் : ஜூலை 14 (ஞாயிற்றுக்கிழமை)
கட்டண விவரம்
* பயிற்சிக் கட்டணம் ஒரு நபருக்கு : ரூ.4000
* கணவன் - மனைவி இருவருக்கும் சிறப்புச் சலுகைக் கட்டணம்: ரூ.6000
பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்:
* உங்களின் தற்போதைய நிதி சூழலை அறிந்துகொள்ளுதல்
* உங்கள் நிதி இலக்குகளைத் தீர்மானித்தல்
* உங்கள் கடன் அளவை தீர்மானிக்கும் ஃபார்முலா
* உங்களுக்கு அவசியமான காப்பீடுகள்
* பணத்தைப் பெருக்கும் முதலீட்டுச் சூத்திரங்கள்
* இலக்குகளுக்கேற்ப உங்கள் ஃபோர்ட்போலியோவை அமைத்தல்
* குறிப்பு : இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்பவர்களுக்கு தனிப்பட்ட குடும்ப நிதித் திட்டமிடல் வழங்கப்பட மாட்டது.
பயிற்சியாளர் :
சுரேஷ் பார்த்தசாரதி,
நிதி ஆலோசகர்,
Myassetsconsolidation.com
மேலும் விவரங்களுக்கு : 9940415222
நிபந்தனைகள்:
1. எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் மீடியா சர்வீசஸால் திரும்ப அளிக்கப்படும்.
2.நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நாணயம் விகடன் மற்றும் விகடன் மீடியா சர்வீசஸ் பொறுப்பாகாது.
3.வகுப்புக் கட்டணமானது பயிற்சிக்குண்டான கட்டணத்தை மட்டுமே உள்ளடக்கியது.