வணிகயோகமும் கைரைகை விஞ்ஞானமும்

by:காஞ்சி எஸ்.சண்முகம்
Synopsis

ஜோதிடம், கைரேகை போன்ற புராதன சாஸ்திரங்களின் துணையோடு, மூன்று காலங்களுக்கும் உரிய பலன்களையும் பக்கவாட்டில் வைத்தபடியே ஓடிக்கொண்டு இருக்கிறது இன்றைய தலைமுறை. இவற்றுள் ‘கைரேகை’ என்பது, மனிதக் கருவறையில் இறைவனால் வரையப்பட்ட வாழ்க்கை வரைபடம் என்றுகூட சொல்வார்கள். கை நிறைய சம்பாதித்து, மனம் நிறைய மகிழ்ச்சியை உறவுகளோடு பகிர்ந்துகொண்டு வாழ வேண்டும் என்பதுதான், மனித சமுதாயத்தின் மாண்பு. இதற்கு உள்ளங்கைகளில் பதிந்துள்ள ரேகைகள் துணை புரியுமா? என்ற கேள்வி, அநேகரிடம் இருப்பதை காண முடிகிறது. பல்வேறுவிதமான வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்து பொருள் ஈட்டவேண்டிய இன்றைய சூழலில், ஒவ்வொருவரின் ரேகை அமைப்பும் என்ன சொல்கிறது, ரேகை சொல்லும் வணிகம் எது, வணிகம் செய்வதற்கான காலம் எது, எந்த வணிகத்தைத் தொடங்கினால் சிறப்படையலாம், தனி வணிகமா... கூட்டு வணிகமா... குடும்ப வணிகமா? என்பதையெல்லாம் ஆய்வின் அடைப்படையில் இந்த நூல் விளக்குகிறது. மேலும், ரேகை அமைப்பு முறைகளை அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் வரைபடங்களுடன் எளிமையாக விவரித்துள்ளார் நூலாசிரியர். ரேகை மற்றும் கிரக மேடுகளின் அடிப்படையில் பலன்களை விவரித்துள்ள இந்த நூல், வணிகம் தொடங்கி வளம் பெற முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் காட்டும்.

Buy the eBook
List Price RS .70
Your price
RS .50
You save Rs. 20(28%)

You can read this item using Vikatan Mobile App: