Cart is Empty
by எம்.நிர்மல்
கை நிறைய சம்பளம், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு, முன்னேறுவதற்கான வழிகள் இருப்பதால்தான் இன்ஜினீயரிங் படிப்புக்கு இத்தனை டிமாண்ட்! இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது இன்டர்வியூதான், அதுவும் குறிப்பாக கேம்பஸ் இன்டர்வியூ! நேர்முகத் தேர்வில் எப்படி பதில் சொல்லவேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும், பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு மாணவனிடம் என்ன எதிர்பார்க்கின்றன, எப்படிப்பட்ட தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான முழுமையான பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ‘ஒவ்வொரு பொறியியல் மாணவனும் ஒரு விற்பனைப் பொருள். அவனை வாங்குவதற்காகத்தான் இன்டர்வியூ நடத்துகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். அவனிடம் எப்படிப்பட்ட தகுதிகள், திறமைகள் ஒளிந்து இருக்கின்றன என்பதை அவன்தான் எடுத்துச் சொல்லவேண்டும். தான் ஒரு திறமைசாலி, நேரம் காலம் பார்க்காமல் உழைக்கக் கூடியவன், குழுவினரோடு இணைந்து வேலை பார்க்க விரும்புபவன், சொல்லித் தருவதை உடனே கற்றுக் கொள்பவன் என்றெல்லாம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் மாணவரை உடனே வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்’ என்று இந்தப் புத்தகத்தை ஒரு மேனேஜ்மென்ட் வடிவில் எழுதி வழி காட்டி இருக்கிறார், நூலாசிரியர் எம்.நிர்மல். இன்டர்வியூவின் வடிவம் முதல் அதனை வெற்றி கொள்வது வரையிலும் முழுமையான தகவல்கள் இந்த நூலில் உள்ளன. இதனைப் படிப்பவர்களுக்கு, ஒரு தேர்ந்த வழிகாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு இன்டர்வியூ சென்றுவந்த அனுபவம் கிடைக்கும். அதனால், வேலை பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம்!
RS. 63 More...by மதன்
இந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு என்று பல்வேறு துறைகள் குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் மதன். அதேபோல், விலங்குகள், பறவைகள் பற்றியும்... காதல், மனித உறவுகள், மனோதத்துவம் பற்றியும்... இந்த மூன்றாம் பாகத்திலும் அறிவுபூர்வமான பதில்கள் பரவிக் கிடப்பதை வாசகர்கள் பார்க்கலாம். மேலும் அவரது அனுபவங்கள் சார்ந்த பல சுவையான தகவல்களையும் அளித்திருக்கிறார். 2005 நவம்பர் முதல் 2006 அக்டோபர் வரையில் விகடனில் வெளியான கேள்வி பதில்களின் தொகுப்பே இந்த ஹாய் மதன். ஒவ்வொருவரின் வீட்டு புத்தக அலமாரியிலும் இந்த நூல் இருக்க வேண்டும். இருந்தால், பொது அறிவு விஷயங்களில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், இந்நூலைப் புரட்டிப் பார்த்து வாசகர்கள் விடை தெரிந்து கொள்ளலாம்.
RS. 67 More...by மதன்
அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்குத் தெளிவாக, ஆனந்த விகடன் இதழ்களில் வெற்றி பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதியை, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களும் படித்துப் பாராட்டி வருகிறார்கள். நவீன உலகத்து நாகரிகம், விஞ்ஞானம், சினிமா போன்ற விஷயங்களை விவரிப்பது மட்டுமல்லாமல், பண்டைய காலத்து கலை, கலாசாரம், வரலாறு என அனைத்துத் துறை சார்ந்த கேள்விகளுக்கு தன் கண்ணோட்டத்தில் மதன் பதில் அளிக்கும் அழகும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அனைத்து உயிரினங்களின் இயல்புகளை தனது எண்ணங்களில் கோத்து எழுதும் நேர்த்தியும் உண்மையிலேயே வாசகர்களின் அறிவுக்கு விருந்துதான்! ‘வாக்குறுதி தர ரொம்ப யோசிக்கிறவர்கள்தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள்!’ ‘சிறந்த மனிதனின் மனதில் ஓடுவது லட்சியங்கள். சாதாரண மனிதனின் மனதில் ஓடுவது ஆசைகள்!’ ‘விரோதிகளை ஒழித்துக் கட்ட சுலபமான ஒரு வழி _ அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டுவிடுங்கள்!’ _ இப்படி, சிந்தனைத் தெளிவு தரும் பதில்களும் ‘ஹாய் மத’னின் பலம்! ‘எனக்குப் பிடித்த அழகான சுற்றுலா தளம் _ புத்தகக் கடைகள்தான்’ என்று சொல்லும்
RS. 63 More...by மதன்
ஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்து வருகிறது. வரலாறு படைத்தவர்களை மதன் தன் கண்ணோட்டத்தில் பாராட்டும் அழகும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அவர் கௌரவிக்கும் நேர்த்தியும், கிண்டலும் கேலியும் தொனிக்கும் கேள்விகளுக்கு அவர் அசராமல் விளாசித்தள்ளும் நகைச்சுவையான பதிலும்... படிக்கப் படிக்க திகட்டாதவை! மதன் தன் பரணில்கூட பல புத்தகங்களைத் தேடி, படித்து, அலசி, ஆராய்ந்து, அள்ளி வழங்கும் பதில்கள் சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் மனதைக் கவருவதால்தான், அதைப் படிக்கும் வாசகர்களும் உந்துசக்தி பெற்று நிறைய கேள்விகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘கேட்கப்படாத கேள்விதான் விடை தெரியாத பதில்’ என்று சொல்லும் அளவுக்கு, சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாசகர்கள் காட்டும் ஆர்வம், அமோகமாக விற்பனையாகும் ‘ஹாய் மதன்’ புத்தக வரிசையில் தெரிகிறது! இது 7வது தொகுப்பு. ஆனந்த விகடனில் நவம்பர் 2008 முதல் அக்டோபர் 2009 வரை வெளியான கேள்
RS. 67 More...by மதன்
‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் நான் உடனே புரட்டிப் பார்ப்பது இந்த நூல்களைத்தான்... ஐந்தாவது பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...’ _ வாசகர் ஒருவர் எங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தின் ஒரு பகுதி இது. பொதுவாக பொது அறிவு புத்தகங்களில் சுவாரஸ்யங்கள் இருக்காது; வெறும் தகவல்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். அது விரைவில் நம்மை சோர்வடையச் செய்துவிடும். இந்த மனோபாவம் தெரிந்துதான், ‘என் கேள்விக்கு என்ன பதில்?’ என்று வாசகர்கள் எழுப்பும் வினாக்களுக்கு ஏனோதானோவென்று இல்லாமல் நிஜமான ஈடுபாட்டுடன், அங்கங்கே நகைச்சுவை கலந்து மதன் பதிலளித்து வருகிறார். தவிர, யாருமே தொடுவதற்குத் தயங்கும் ஏரியாக்களில்கூட இவர் புகுந்து புறப்படுவதால் ‘எதைப் பற்றியும் இவரிடம் சந்தேகம் கேட்டு தெளிவு பெறலாம்’ என்ற நம்பிக்கை பெரும்பாலான வாசகர்களிடம் இருந்துவருகிறது. விகடனில் வெளியான கேள்வி_பதில்களைத் தொகுத்து, வெளியான நான்கு பாகங்களும் வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவருகின்
RS. 60 More...by மதன்
கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர்! கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு! விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன்! இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது 'ஹாய்மதன்'தொகுப்பின் நான்காம் பாகம். இது 2004, நவம்பர் முதல் 2005, அக்டோபர் வரை விகடனில் வெளியான பதில்களின் தொகுப்பு. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்கள் போலவே இதிலும் பல்வேறு துறை சம்பந்தமான மதனின் துல்லியமான, அறிவுபூர்வமான ப
RS. 67 More...by மதன்
ஆனந்த விகடனில் 1995ல் ஹாய் மதன் என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தார் மதன். ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பகுதியாக இது ஹிட் ஆனது! இதுவரை 7000 கேள்விகளுக்கு மேல் இந்தப் பகுதியில் பதிலளித்திருக்கிறார் மதன். இது ஒரு சாதனையே! ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மலை போல் குவிய, அதிலிருந்து பொறுமையாகக் கேள்விகளைத் தேர்வு செய்து ஆதாரபூர்வமாக அவற்றுக்குப் பதில் எழுதி வருகிறார். புராணம், வரலாறு, விஞ்ஞானம்... என்று எது குறித்துக் கேள்விகள் கேட்டாலும் பதில் கிடைக்கும் மதனிடம். அதேபோல், விலங்குகள், பறவைகள், புதிய கண்டுபிடிப்புகள்... என்று வாசகர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும். காதல் பற்றி, மனித உறவுகள் பற்றி, மனோதத்துவம் பற்றி... என்று வித்தியாசமான சப்ஜெக்ட்களையும் இந்தப் பகுதியில் லாகவமாகக் கையாண்டிருக்கிறார். மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கும் அந்தத் துறை சார்ந்த நூல்களைப் படித்து, அலசி ஆராய்ந்து, ஆதாரங்களுடன் பதிலளித்திருக்கிறார். இந்தப் பதில்கள் எல்லாமே ஒரு முறை படித்துவிட்டு மறந்து விடக் கூடியதில்லை. கைவசம் அவை இருந்தால் எந்தச் சமயத்திலு
RS. 70 More...by டாக்டர் சங்கர சரவணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை மேற்கோள் காட்டுவதும் உண்டு. ஏனென்றால் புத்தக ‘ஸ்கோப்’பைத் தாண்டிய ஆனால், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கும். மேற்கொண்டு இருக்கும் விஷயங்களைப் பாடுபட்டுச் சேகரிக்க வேண்டும். ஆனால், இந்தப் புத்தகம் அனைத்தையும் மொத்தமாகத் தருகிறது. இந்திய வரலாறு பண்பாடு ஆகியவற்றைப் பற்றி போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலை அறியப் பயன்படும் வகையிலும் அந்தக் குறிப்பிட்ட விஷயங்களை அங்கங்கே தேடிக்கொண்டு இருக்காமல், ஒரே இடத்தில் தொகுத்து இந்தப் புத்தகத்திலேயே அனைத்து விஷயங்களும் வரிசைவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, சிந்து சமவெளி நாகரிகம், பண்டைத் தமிழகம், பௌத்தம், சமணம், பேரரசுகளின் தொடர்ச்சி, டெல்லி மொகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, நேரு யுகம், இந்திரா யுகம் என அனைத்து விஷயங்களும் சின்னஞ்சிறு குறிப்புகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. பண்பாட்டுப் பகுதியிலும் இந்து மத நூல்களில் தொடங்கி, பக்தி இயக்கம், ராமாயணம், மகாபாரதம், தமிழர் பாரம்பரியம், கலாசாரம், சங்கத் தமிழ், தமிழ் நூல்கள், தற்கால இலக்கியம், நுண் கலைகள் என அனேக விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அவ்வப்போது எடுத்துப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு ஆழ்ந்து படிக்கவும் தேவையான ஒரு நூல்!
RS. 126 More...by டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா
வி.ஏ.ஓ. பதவி ஒரு சின்ன ஐ.ஏ.எஸ். அலுவலர் பதவிக்கு ஒப்பானது. ஒரு கிராமத்துக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் அந்தக் கிராமத்துக்குக் கொண்டு சேர்ப்பதும் கிராம மக்கள் வாழ்வில் உயர்வதற்கான கல்வி, வேலை வாய்ப்பு, நிலம் கொடுக்கல் வாங்கல் போன்ற பல விஷயங்களுக்கு ஆதாரமான பல சான்றிதழ்களை வழங்குவதும் அவரின் தலையாய பணி. வி.ஏ.ஓ. அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினால் நாடு ஊழலற்ற நாடாக உயரும். ஓர் அலுவலர் ஊழலற்றவராகத் திகழ வேண்டுமானால் அவர் அந்தப் பதவிக்கு வரும் விதமும் அவ்வாறே அமைய வேண்டும். தன் அறிவாலும் திறமையாலும் போட்டித் தேர்வை வெற்றி கொண்டு, வரும் ஒரு நல்ல அலுவலரால் ஊரும் நாடும் சிறக்கும். வி.ஏ.ஓ. தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் புதிய பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய பாடத் திட்டத்துக்கான பாடக் குறிப்புகளை முப்பருவ மற்றும் சமச்சீர் பாடப் புத்தகங்களிலிருந்தும் 2011-12ம் ஆண்டு வி.ஏ.ஓ. தேர்வு வினாக்களின் அடிப்படையிலும் இந்த நூலை டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா ஆகியோர் தொகுத்துத் தந்திருக்கின்றனர். குறிப்பாகக் கிராம நிர்வாகம், ஆப்டிட்யூட் ஆகிய புதிய பாடப் பகுதிகளுக்கான குறிப்புகள் நுட்பமாகத் தயாரிக்கப்பட்டு மாதிரி வினாக்களோடு தரப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். நடப்பு நிகழ்வுகளுக்கு 2013-14ம் ஆண்டு நாட்குறிப்புகளைப் பின்பற்றி தன்னறிவு சோதனை வினாக்கள் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க அலுவலராக வாழ்த்துகள்!
RS. 350 More...by டாக்டர் சங்கர சரவணன்
போட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. ஆயிரம் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள். எனவே, இந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, புரிதலுடன் கூடிய படிப்பும் பயிற்சியும் அவசியம் தேவை. போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரத்யேகமாக ‘போட்டித் தேர்வு களஞ்சியம்’ வரிசையில் புத்தகங்கள் வெளியிடத் தீர்மானித்தோம். அந்த வரிசையில் ‘இந்திய அரசமைப்பு’ முதல் புத்தகமாக வெளிவருகிறது. TNPSC-யின் புதிய பாடத்திட்டப்படி இந்த நூலைத் தொகுத்துள்ளார், நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். இதில் இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள், அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மத்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநில நிர்வாகம், தேர்தல் ஆணையம், சட்டத்துறை, உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட நிர்வாகம் போன்ற நிர்வாகரீதியிலான அமைப்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிழிறிஷிசி குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் கேட்கப்பட்ட இந்திய அரசமைப்பு தொடர்பான வினாக்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு, தேவையான இடங்களில் விடைகளுடன் உரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சம். சமச்சீர், முப்பருவக் கல்வி பாடநூல்களை அடிப்படையாகக்கொண்ட புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பம்சம். மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நூலின் இறுதியில் கலைச் சொற்களும் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வோர் இந்திய குடிமகனும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷப் புத்தகம் இது.
RS. 91 More...