Vikatan
eBooks
  • அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்
  • ஆன்மிக வரலாறு
  • தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்
  • இல்லறம்
  • இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்
  • சமூக, அரசியல் கட்டுரைகள்
  • சட்டம்
  • மருத்துவம் - ஆரோக்கியம்
  • சுட்டிகளுக்காக
  • பெண்களுக்காக
  • பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு
  • சரித்திரம்
  • வாழ்க்கை வரலாறு
  • நாடுகளின் வரலாறு
  • கதைகள், கவிதைகள்
  • விளையாட்டு
  • விவசாயம் - பிராணி வளர்ப்பு
  • ஆன்மிகம்
  • சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை
  • பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்
  • பொது
  • மொழிபெயர்ப்பு நூல்கள்
  • ஜோக்ஸ் - கார்ட்டூன்ஸ்
  • சமையல்
  • கல்வி விகடன்
  • கிராஃ பிக் நாவல்
  • விகடன் கிட்ஸ்
  • Pod
0

Cart is Empty

பெண்களுக்காக

Sort Books
  • Price: Low to High
  • Newest to Oldest
  • Oldest to Newest
  • Bestsellers
  • Items Eligible For Promo Codes
  • உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

    by டாக்டர் வி.ஜெயந்தினி

    குழந்தைகள், இந்த உலகத்தின் ஈரத்தை இன்னமும் காப்பாற்றி வைத்திருப்பவர்கள். வறுமை தொடங்கி வன்முறை வரையிலான எந்த விஷயத்தையும் குழந்தைகள் சட்டைசெய்வது இல்லை. இந்த உலகம் இன்ப நீச்சலுக்கான தண்ணீர்த் தொட்டி என்பதுதான் குழந்தைகளின் பார்வை. ஆனால், நாம் குழந்தைகளைக் கையாளும் விதங்கள் எப்படி இருக்கின்றன? நாம் நினைக்கும்போது அந்தக் குழந்தை சிரிக்க வேண்டும்; நாம் சொல்வதைக் கேட்க வேண்டும். நாம் வலியுறுத்துவதை ஏற்க வேண்டும். எதிர்பார்ப்பு என்கிற பெயரில் இப்படி எத்தனைவிதமான நெருக்கடிகள்? சாப்பாடு தொடங்கி படிப்பு வரையிலான அத்தனை விஷயங்களையும் நம் விருப்பப்படியே குழந்தைகள் மீது திணிக்கிறோம். உலகத்தின் புது வரவுகளுக்கு நாம் வழிகாட்டும் பக்குவமா இது? குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்கிற நுண்கலையை இந்த நூலின்வழியே கற்றுத் தருகிறார் டாக்டர் வி.ஜெயந்தினி. பெற்றோர்கள் குழந்தையிடம் எதிர்பார்ப்பதைப்போலவே குழந்தையும் பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியவற்றிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அதனைப் புரிந்து நடப்பதே அந்தக் குழந்தையை நம்பர் 1 ஆக்குவதற்கானத் தகுதி என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறார் டாக்டர் வி.ஜெயந்தினி. ‘அவள் விகடனில்’ தொடராக வந்த கருத்துக்கள் இப்போது புத்தக வடிவில்! உங்கள் குழந்தையை நம்பர் 1 ஆக்க, இந்த நூல் நிச்சயம் உதவிகரமாக விளங்கும்.

    RS. 50
    More...
  • அழகே... ஆரோக்கியமே...

    by ராஜம் முரளி

    ‘அழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம். அதிலும் அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத ஆத்மாக்களே இல்லை. ‘அழகு’ என்கிற வார்த்தைதான் உலகை ஆள்கிறது. உடல் அழகை மேன்மேலும் உயர்த்துவதற்கான வழிகள் ஆங்காங்கே கிடைத்தாலும், அவற்றில் ஆரோக்கியம் இருப்பதில்லை. ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் அழகையும் விரும்புவது இயல்புதானே! இதன் அடிப்படையில், ரசாயனக் கலவை இல்லாத இயற்கை வஸ்துகளின் மூலம் இனிக்கும் இளமையான தோற்றத்தைப் பெறும் அற்புதத் தகவல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த நூல். தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப் பெறுவது சாத்தியமா? ‘சாத்தியமே’ என்ற பதிலை, சுவாரஸ்யமிக்க செய்முறைகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் ராஜம் முரளி. ‘அவள் விகடனி’ல் ‘அழகே... ஆரோக்கியமே...’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைத்துத் தரப்பு மக்களும் மிக எளிதாக செய்து பார்க்கும் வழிமுறைகள் இதில் உள்ளன. அழகுடன் பழகும் அற்புத வாய்ப்புக் கிடைக்காதா! என ஏங்குபவர்களுக்கும், அழகை அரவணைக்க ஆசைப்படுபவர்களுக்கும் இந்த நூல் அற்புதமானப் பொக்கிஷம்.

    RS. 60
    More...
  • அழகு

    by வசுந்தரா

    வாழ்க்கை அழகு நிறைந்தது. மலர், தென்றல், நதி, கடல், காடு, மலை, வானம், வயல் என்று இயற்கையின் படைப்பில் யாவும் அழகு ததும்புவன; பெண்ணும்தான். பெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று வயதைக் கொண்டு ஏழாக வகைப்படுத்தியிருக்கிறது நமது இலக்கியம். அதுபோல, பெண்ணின் அழகை வெளிப்படுத்தும் பாகங்களையும் ஏழாக வகைப்படுத்தலாம். கூந்தல், கண்கள், இதழ்கள், கன்னம், கழுத்து, இடை மற்றும் விரல்கள் ஆகிய ஏழு வகை பாகங்களும் அழகு பொருந்தி இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களும் நினைப்பார்கள்; அது இயற்கையே. ஆனாலும், தொடர்ந்து அழகைப் பேணிப் பாதுகாக்கும் பெண்களுக்கே இந்த ஏழு வகை அம்சங்களும் பொருந்தியிருக்கும். சிலருக்கு அழகைப் பேணுவதில் ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியாது. தெரிந்தாலும் அரைகுறையாகவே தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்காகவே 'அவள் விகடன்' இதழில் 'அழகு' தொடராக வெளிவந்தது. அழகுக்கலை நிபுணர் வசுந்தரா எழுதிவந்த இந்தத் தொடர் வாசகியர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த நூல் முழுக்க இயற்கை முறையிலான அழகுக் குறிப்புகள் நிறைந்து இருக்கின்றன. எ

    RS. 123
    More...
  • என்ன அழகு... எத்தனை அழகு!

    by வீணா குமாரவேல்

    இன்றைய நவ நாகரிக உலகில் தங்களைப் பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்கள் இல்லை. ஒவ்வொருவரின் அறிவு, மதிப்பு, வசதியை அழகு மேலும் உயர்த்திக் காட்டுகிறது. பிறருடைய ஈர்ப்பை மட்டும் அல்லாது தன்னம்பிக்கை, பெருமை, தெளிவு என அழகு நமக்குக் கொடுக்கும் அபரிமிதமான ஆற்றல்கள் அதிகம். மேக்கப் என்பது சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள், வசதிபடைத்த மேல்தட்டுப் பெண்களுக்கு மட்டுமேயானது என்கிற நிலை இப்போது மாறிவிட்டது. நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் தங்களை அழகாக மாற்றிக்கொள்ள மேக்கப் கலையை நாடத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் பெருநகரங்களில் அழகு நிலையங்கள் பல்கிப் பெருகி உள்ளன. இமை, விழி, புருவம், நெற்றி, உதடு, கன்னம், கழுத்து, காது, மூக்கு, முகம், முதுகு, மேனி, விரல்கள், நகங்கள், சருமம், கூந்தல் என அத்தனை உறுப்புகளும் அழகு பெற நூலாசிரியர் வீணா குமாரவேல் சொல்லும் வழிமுறைகள் அனைவரும் பின்பற்றத்தக்கவை. மேலும், நம் நிறத்துக்கு ஏற்றபடி உடை அலங்காரம், அணிகலன்கள், கையில் எடுத்துச் செல்லும் பை என அனைத்தையும் மாற்றிக்கொள்ளும் வழிமுறைகளையும் இங்கே கற்றுத் தருகிறார் வீணா குமாரவேல். அழகுக்கு அணி சேர்க்கும் எக்கச்சக்கக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகம், உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் இருக்க வேண்டிய ஒன்று.

    RS. 74
    More...
  • அழகின் சிரிப்பு... அசத்தல் குறிப்பு!

    by முரளி கிருஷ்ணன்

    அவசரம் கலந்த அதிரடியான நிகழ்வுகள் நிறைந்த இன்றைய வாழ்க்கை முறை, அனைவரையும் மூச்சுமுட்டத் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. அந்த ஓட்டத்தால் உடலின் வாட்டம் குன்றி, ஒவ்வொருவரின் உடல் அழகும் அதல பாதாளத்தில் விழுந்துவிடுகிறது. அதை மேம்படுத்தும் வழிமுறைகள் பல இருப்பினும், நமது பொருளாதார நிலை நம்மை சற்றே தயங்க வைக்கிறது. அதை உடைத்தெறியும் விதமாக, அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தும் இயற்கைப் பொருட்களை வைத்து அழகை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறிப்புகளாக இந்த நூலில் ஏராளம் உள்ளன. மனித உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் உரிய அழகை பெறும் இயற்கை இடுபொருட்களை நமக்குச் சுட்டிக்காட்டுவதோடு, சுருக்கமான செய்முறைகளையும், அரிய குறிப்புகளையும் எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. மஞ்சள், வேப்பிலை, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், கிராம்பு, முட்டையின் வெள்ளைக் கரு, அருகம்புல், தேங்காய் எண்ணெய், பூண்டு, இஞ்சி, வெந்தயம், காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள் என உடலின் புற அழகு மட்டுமல்லாமல், அக அழகையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான அசத்தல் குறிப்புகள் அனைத்தையும் எடுத்துரைப்பது இந்த நூலின் சிறப்பு. தலைமுடி தொடங்கி, தனம் தொடர்ந்து, குறுக்கு வசீகரிப்பதற்கான வழிமுறையோடு பாத வெடிப்பு வரையில் ஆரோக்கியமான வாழ்வுக்கு வேண்டிய தெளிவான செயல்முறைகளோடு பழகும் விதத்தில் அழகை அள்ளி அணைத்திருக்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். சிறுவர் & சிறுமியர், யுவன் & யுவதி, மூத்தோர் & முதியோர் என அனைத்து பிரிவினருக்கு தேவையான அத்தனை அழகுக் குறிப்புகளையும் ஒருங்கே தொகுத்து இருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. இது, அழகால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த ஓர் எளிய வழிகாட்டி!

    RS. 50
    More...
  • பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ்

    by சுவாமி சுகபோதானந்தா

    இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்! பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளாக தங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த உலகம் பெண்களை மிகப்பெரும் சக்தியாகப் போற்றும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்களும், அவர்களது குடும்பத்தாரும் நம்பிக்கையான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதற்காக கோபம், சந்தேகம், மன அழுத்தம், பொருளாதாரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து பெண்கள் முன்னேற வேண்டியுள்ளது. இப்படி, பெண்களின் மனநிலையை அறிந்து, அவர்களிடத்தில் சிக்கிக் கிடக்கும் மன அழுத்தங்களை விலக்கி, அவர்களின் இதயத்தை இலகுவாக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா. அவள் விகடன் இதழ்களில் ‘பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ தொடராக வந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த தன் உணர்வு கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் வீற்றிருக்கிறது. பெண்களின் மன இறுக்கத்தையும், மனதில் ஏற்படும் சந்தேக நோயையும் விளக்கி, பெண்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் பயனுள்ள நூல் இது!

    RS. 70
    More...
  • பேசாத பேச்செல்லாம்

    by ப்ரியா தம்பி

    ‘‘உங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, நான் எங்கே இருந்தேன்?”, ‘‘இறந்துபோனவங்களை மண்ணுக்குள் புதைச்சா, அவங்க எப்படி மேல போவாங்க?” - இப்படி குழந்தைகள் அறிவுபூர்வமாக கேள்விகள் எழுப்பும்போது நம்மால் அவர்களுக்குப் புரிகிறமாதிரி பதில்கள் தர முடிவது இல்லை. ஆண் குழந்தைகள் புத்திசாலித்தனமாகப் பேசினால் ‘அறிவாளி’ என்றும், அதுவே பெண் குழந்தைகள் என்றால் ‘வாயாடி’ என்றும் நாமே பிரிவினை செய்துவிடுகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் பேசுவதைக் காட்டிலும் எழுதுவதற்கு நல்ல தளம் கிடைத்து, அதை நன்றாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். தனது பால்யகாலம்தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம்பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூல் ஆசிரியர் ப்ரியா தம்பி. போகிறபோக்கில் சம்பவங்களைச் சொல்லிச் சென்றாலும் ஒரு விஷயம் ஒருவருக்கு மயிலிறகால் வருடுவதுபோலவும் அதுவே வேறொருவருக்கு ஊசியால் குத்துவதுபோலவும் இருப்பது, இவரது எழுத்து வன்மையின் எடுத்துக்காட்டு. எந்த ஒளிவுமறைவும் இன்றி உள்ளது உள்ளபடி பகிர்ந்ததால் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப் பெற்ற ‘பேசாத பேச்செல்லாம்...’ தொடர், இப்போது புத்தகமாக வெளிவருகிறது. புத்தகம் படித்து முடிக்கும்போது உங்களை நீங்களே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.

    RS. 130
    More...
  • பழகிய பொருள்... அழகிய முகம்!

    by ராஜம் முரளி

    மனைவி, தாய், மருமகள், அண்ணி, அதிகாரி என்று வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்பவள் இன்றைய பெண். தன்னை எப்போதும் மலர்ச்சியான தோற்றத்தில் வைத்துக்கொள்வது அவளுக்கு அவசியமான ஒன்று. அதற்கு உதவுவதுதான் இந்தப் புத்தகம். அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள்களைக் கொண்டு, உடலை ஆரோக்கியமாகவும், புறத்தோற்றத்தை எப்போதும் அழகு மிளிர வைத்துக்கொள்ளவும் பாரம்பரிய அழகுக் குறிப்புகளைத் தருகிறார் ராஜம் முரளி. ''மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தால் நம்முடைய பாரம்பரிய வழக்கங்களை ஒவ்வொன்றாக மறந்து வருகிறோம், அவற்றின் மகத்துவம் புரியாமலேயே! அழகு விஷயமும் அப்படித்தான் ஆகிவிட்டது. அந்தக் காலத்துப் பெண்கள், தங்களை அழகுபடுத்திக்கொள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களைத்தான் பயன்படுத்தினார்கள். இளமை, அழகுக்கு உத்தரவாதம் தரும் அந்தப் பொருட்கள் நம் கைக்கு பழக்கப்பட்டவைதான் என்றாலும் எதை எதை எதோடு எந்த அளவில் சேர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது விஷயம்!'' என்கிறார் ராஜம் முரளி. தன் குடும்பத்தின் மூத்த தலைமுறைகளிடமிருந்து கற்றுக்கொண்ட கைப்பக்குவங்கள் ஏராளம். அந்த ரகசியங்களை எடுத்துச்

    RS. 84
    More...
  • கைக்கு எட்டும் தூரத்தில் அழகு

    by ராஜம் முரளி

    ``நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா? தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் முல்லைச் சிரிப்பும்தான் அழகு என்பதில்லை. `சாதாரணமாக இருந்தாலும், கூந்தல் முதல் பாதம் வரை நம்முடைய உறுப்புகளை ஒழுங்காகப் பராமரித்தாலே அழகாகத் திகழலாம்’ என்கிறார், இயற்கை அழகுக் கலை நிபுணர் ராஜம் முரளி. ஏற்கெனவே, `அழகைப் பராமரித்தல்’ குறித்து இவர் எழுதி, நமது பிரசுரத்தில் வெளிவந்துள்ள நூல்கள், வாசகர்களிடையே, முக்கியமாக பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. இப்போதும், பல நூறு டிப்ஸ்களை அள்ளி வழங்கி இருக்கிறார். நம் அழகைப் பேணிப் பராமரிக்க உதவும் பொருட்கள் எல்லாம் எங்கேயோ எட்டாத தூரத்தில் இல்லை... எல்லாமே நம் வீட்டில், நாம் அடிக்கடி புழங்கும் பொருட்கள்தான். பால், தயிர், வெந்தயம், எண்ணெய், மருதாணி, கறிவேப்பிலை, மிளகு என்று நம் அடுக்களையில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான அழகு சிகிச்சை செய்துகொள்ளக் கற்றுத் தருகிறார். வெட்டிவேர், ரோஜா இதழ்கள், புங்கங்கொட்டை போன்ற மற்ற சில பொருட்கள் நாட்டுமருந்துக் கடையில் கிடைப்பவையே! தயாரிக்கும் முறையையும் உபயோகிக்கும் விதத்தையும் அதில் கவனிக்கவேண்டிய விஷயங்களையும் எளிமையாக வழங்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த கேள்விகளுக்கு விரிவாக விளக்கங்களைத் தந்திருக்கிறார். அவை, எல்லோருக்குமே பயன் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இனியும் தாமதிக்காமல், உங்கள் கைக்கு எட்டும் தூரத்திலேயே காத்திருக்கும் அழகை, உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு இந்தப் புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். அழகுடன் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகள்!

    RS. 95
    More...
  • வேலு பேசறேன் தாயி!

    by வடிவேலு

    ‘‘இந்த வாழ்க்கை, ஓட்டப்பந்தயம் மாதிரி வெரட்டிக்கிட்டே இருக்கு. நாமளும் பின்னங்காலு பிடரியில அடிக்கிற வேகத்துல ஓடிட்டே இருக்கோம். எதுக்கு... யாருக்காக இப்புடி ஓடுறோம்னு தெரியாமலே ஓடிட்டே இருக்கோம். ஒரு எடத்துல நிக்கறப்பதேன்... அதப்பத்தி எல்லாம் யோசிக்க நேரங் கெடைக்குது!’’ - வடிவேலு அவர்கள் என்னிடம் இந்த வார்த்தைகளைப் பகிர்ந்த நிகழ்வு இப்போதும் நினைவில் இருக்கிறது. அனுபவ முத்துக்களாக வெளிப்படும் அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும் நிஜமாகவே நெகிழத்தக்கவை; நம்மை நெறிப்படுத்தக்கூடியவை. ஒவ்வொரு குடும்பத்தின் தாய்மார்களையும் தனது உடன்பிறந்த பிறப்புகளாகப் பாவித்து, தன் வாழ்க்கை அனுபவங்களையும், தன் உறவுகள் குறித்த நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லி, ‘உங்களில் நான் ஒருவன்’ என்பதை உண்மையான அக்கறையோடு வடிவேலு நிரூபித்திருக்கிறார் இந்தப் புத்தகத்தில். ஒவ்வொரு குடும்பமும் ஆனந்தத்தின் இருப்பிடமாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையில் உணவு தொடங்கி நாம் உண்ணும் உணவு வரையிலான அத்தனை விஷயங்களையும் ஆத்மார்த்தமாக நம்மோடு பகர்கிறார் வடிவேலு. செவாலியே சிவாஜி கணேசனுக்குப் பிறகு தமிழ் சினிமா உலகின் தரமான - தங்கமான அடையாளம் வடிவேலுதான். உடல்மொழியிலும் வட்டார வழக்கிலும் நெஞ்சைச் சிலிர்க்கவைக்கும் நகைச்சுவை அவதாரமான வடிவேலு, விகடன் பிரசுரத்துக்காக வழங்கும் இரண்டாவது புத்தகம் இது. நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட அடிப்படைக் கூறுகள் தொடங்கி மாமியார் - மருமகள் பிரச்னைகள் வரை இந்தப் புத்தகத்தில் வடிவேலு சொல்லி இருக்கும் கருத்துகள் அவ்வளவு அற்புதமானவை. தமிழ்ப் பேசும் அத்தனை பேரின் இல்லங்களிலும் - உள்ளங்களிலும் நிறைந்திருக்கும் பாசக்காரராக இந்தப் புத்தகத்தின் மூலம் மறுபடியும் நிரூபித்திருக்கிறார் வடிவேலு.

    RS. 60
    More...
  • 1
  • 2 
  • »
  • Last

© vikatan 2020. All Rights Reserved. Ananda Vikatan Digital Private Limited