Cart is Empty
by எஸ்.கணேச சர்மா
கருணைக் கடல் காஞ்சி முனிவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைத்து உள்ளம் சிலிர்ப்பவர் பலர். அந்த மகானை தரிசித்தவர்களும் அவருடைய அருளுரைகளைக் கேட்டவர்களும் தங்களை புண்ணியம் செய்தவர்களாகவே இன்று வரை கருதி வருகிறார்கள். பரமாச்சாரியாருடன் ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கும்போது யாருமே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி நெக்குருகிப் போவதுண்டு. நூலாசிரியர் எஸ்.கணேச சர்மா, காஞ்சிப் பெரியவரின் நெருக்கத்தில் இருந்தவர். அவரின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர். அவர் புகழைப் பேசவும் கேட்கவும் பாடவும் சந்தர்ப்பங்கள் பலவும் தனக்குக் கிடைத்திருப்பதை புண்ணிய பலனாக எண்ணி வருபவர். காஞ்சி மகானின் புண்ணிய சரிதத்தை ஏழு காண்டங்களாக அமைத்து கணேச சர்மா செய்த உபன்யாசங்களின் தொகுப்பே இந்த நூல். பக்தர்களுக்கு காஞ்சி முனிவருடன் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர். இந்த அவதார புருஷர் அருள்பாலித்த பல சம்பவங்களை கோவையாக எடுத்துரைக்கிறார். நூலைப் படிக்கும்போது அந்த மகானை நேரில் தரிசிப்பது போன்ற உணர்வும், அன்னாரின் அருளுரைகளைக் கேட்டு மகிழ்வது போன்ற அனுபவமும் ஏற்படும். இந
RS. 53 More...by எஸ்.ரமணி அண்ணா
மனிதன் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகையை வளர்ப்பது. பக்தியை புகட்டும் எளிய பாடம் இறை நெறி. பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக கற்று அறிந்தவர் தேவை. அதுபோல இறை நெறி அடைய ஒரு வழிகாட்டி தேவை. அப்படி இறை ஞானம் வளர்க்க நினைத்தவர்களின் வழிகாட்டியாக இருந்தவர் காஞ்சி மாமுனிவர். பெரியவா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட காஞ்சிப் பெரியவர், துறவு பூண்டு இறை நெறி வளர்த்தவர். காஞ்சிமடம் வந்து, தம்மிடம் ஆசிபெற நினைப்பவர்களுக்கு அருளாசி வழங்கியதோடு, வழிகாட்டியாகவும் இருந்தவர். மகா பெரியவரின் பக்தி நெறி, வழிகாட்டும் திறன், ஈகைத் தன்மை குறித்து சக்தி விகடன் இதழில் ஆன்மிக அனுபவம் என்ற பகுதியில் எஸ்.ரமணி அண்ணாவின் அனுபவங்கள் தொடராக வந்தது. அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. காஞ்சிப் பெரியவர் இளைஞர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார் என்பதற்கு, வளரும் இளைஞர்கள் மெய்ஞானத்தில் இருக்கும் தங்களுடைய பற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும், எப்படி தங்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பத
RS. 70 More...by செந்தில்
நஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும்! விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இதுகுறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அரசு சார்பாக, பயிர்க் கடன், அறுவடைக் கடன், கிணறு வெட்டக் கடன், கால்நடை வளர்க்கக் கடன், மானியங்கள் இப்படி ஏராளமான வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள், இந்தக் கடனை எப்படிப் பெறலாம், யாரிடம் பெறலாம் எனத் தெரியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
RS. 10 More...by பி.என்.பரசுராமன்
விந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்பிணி அற்று, நல்வாழ்வு வாழ வேண்டும் என்று பிரயாசை கொண்டவர்கள். சித்தர்களது வாழ்க்கை விசித்திரமானது. அவர்கள் உபதேசித்த பொன்மொழிகள் யாவும் மக்கள் நல்வாழ்வு வாழ வழி சொல்லும் மந்திரங்களாக இருக்கின்றன. அதை பல இடங்களில், பல வழிகளில் நிறைவேற்றவும் செய்தார்கள். ஆனாலும், சில நேரங்களில் சித்த நிலையை விலக்கி வைத்தும் வாழ்ந்திருக்கிறார்கள்; மக்களின் நலனுக்காகவே அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்பது இந்த நூலை வாசிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும். சித்தர்களின் வாழ்க்கை பற்றிய இந்தக் கட்டுரைகள் சக்தி விகடன் இதழில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. சித்தர்கள் பற்றி பல வெளிவராத தகவல்களை இந்தக் கட்டுரைகளில் தென்னாடுடையான் என்ற புனைபெயரில் பி.என்.பரசுராமன் எழுதினார். கதைப்போக்கில் செல்லும் அவரது நடை, சித்தர்கள் பற்றிய அரிய தகவல்களை எளிய முறையில் விளக்குகிறது. ஓவியர் தாமரையின் படங்கள் சித்தர்களின் வாழ்க்கை
RS. 105 More...by எஸ்.ராஜகுமாரன்
‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா?’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் பக்குவம் மனிதனுக்கு அவசியம். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம். அகத்தியர், போகர், திருமூலர், இடைக்காடர், கருவூரார், சிவவாக்கியர், அழுகணி, பட்டினத்தார்... என சித்தர்கள் பலரின் பிறப்பு ரகசியத்தை விளக்கிச் சொல்கிறது இந்த நூல். சாமான்ய மனிதர்கள் எப்படி சித்தர்களானார்கள்? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்ன? அவர்களின் வாழ்க்கை நெறி விளக்கும் ரகசியம் என்ன? சித்தர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டன? சித்தர்களை போதைப் பிரியர்கள் என்று கூறுவது உண்மையா? என்பது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்த நூல். 27 இந்திய சித்தர்களின் வாழ்க்கையை முத்திரைப் பதிவுகளாக, எளிமையான நடையில் தொகுத்து எழுதியுள்ளார் நூலாசிரியர் எஸ்.ராஜகுமாரன். சித்தர்கள் பற்றிய பிம்பங்களை உள்வாங்கி, தன்னுடைய கற்பனைத் தூரிகையில் சித்தர
RS. 74 More...by சாருகேசி
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து, அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர். காஞ்சிப் பெரியவருடனான தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்; கண்கள் பனிக்கும்; உடல் சிலிர்க்கும். அப்படி ஒருசில பக்தர்களின் பரவச அனுபவங்கள்தான் இந்த நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ‘காமகோடி பெரியவா’ அவர்களுடன் நெருங்கிப் பழகும் அபூர்வ சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்று, அவர் பாதமே கதி என்று சரண் அடைந்த பக்தர்கள் ஒருசிலரைச் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டு அறிந்து, ‘சக்தி விகடன்’ இதழ்களில், ‘கருணை தெய்வம் காஞ்சி மகான்’ என்ற தலைப்பில் சாருகேசி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். படிக்கும்போது இவை எதுவுமே பழங்கதைகளாகத் தோன்றாது. நம் கண்முன் நடப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அத்தகைய அனுபவங்கள் கிடைக்கப் பெற்ற மற்றவர்களும், தங்களுக்கு நேரிட்டதை அசைபோட்டுப் பார்த்து அகம் மகிழ்வார்கள். காஞ்சிப் பெரியவரின் அபூர்வ படங்களுடன் உங்கள் கரங்களில் தவழும் இந்த நூல், ஏற்கெனவே விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் காஞ்சி முனிவர் பற்றிய இதர நூல்களுடன் இணைந்து புத்தக அலமாரியை நிறைக்கட்டும்!
RS. 81 More...by ரா.வேங்கடசாமி
கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது! தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை 'காஞ்சி மகானின் கருணை நிழலில்...' என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் மேலும் பல அனுபவங்க
RS. 81 More...