Vikatan
eBooks
  • அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்
  • ஆன்மிக வரலாறு
  • தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்
  • இல்லறம்
  • இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்
  • சமூக, அரசியல் கட்டுரைகள்
  • சட்டம்
  • மருத்துவம் - ஆரோக்கியம்
  • சுட்டிகளுக்காக
  • பெண்களுக்காக
  • பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு
  • சரித்திரம்
  • வாழ்க்கை வரலாறு
  • நாடுகளின் வரலாறு
  • கதைகள், கவிதைகள்
  • விளையாட்டு
  • விவசாயம் - பிராணி வளர்ப்பு
  • ஆன்மிகம்
  • சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை
  • பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்
  • பொது
  • மொழிபெயர்ப்பு நூல்கள்
  • ஜோக்ஸ் - கார்ட்டூன்ஸ்
  • சமையல்
  • கல்வி விகடன்
  • கிராஃ பிக் நாவல்
  • விகடன் கிட்ஸ்
  • Pod
0

Cart is Empty

இல்லறம்

Sort Books
  • Price: Low to High
  • Newest to Oldest
  • Oldest to Newest
  • Bestsellers
  • Items Eligible For Promo Codes
  • தலையணை மந்திரம்

    by எஸ்.கே.முருகன்

    மந்திரம் என்றாலே அது ஆன்மிக வாழ்வுக்கானது என்ற எண்ணம் நமக்கு ஏற்படும். ஆனால் ஒரேயொரு மந்திரம் மட்டும் அனைவருக்கும் பொதுவான சமூக வாழ்வுக்கான மந்திரமாகத் திகழ்கிறது. அதுதான் தலையணை மந்திரம். தலையணை மந்திரம் என்றவுடன் மனைவி தன் கணவனிடம் மந்திரம் ஓதி மனத்தைக் கரைப்பது என்ற எதிர்வினை அர்த்தம் எவருடைய மனத்திலும் சட்டென்று தோன்றுவது இயல்பே. ஆனால் அதற்கு மாறாக புது அர்த்தத்தையே தருகிறது இந்த நூலின் தலைப்பு! தம்பதிகள் தங்களுக்குள் நெருங்கிப் பழகும் நேரம் & அவர்களின் தனிமை நேரமே. அந்த நேரத்தில் அவரவர் உள்ளக் கிடக்கையை இருவரும் பகிர்ந்துகொள்ளும் அன்யோன்யமான உரையாடலே தலையணை மந்திரம். அந்த ஏகாந்த நேரத்தில் அன்யோன்யத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்; அன்யோன்யம் வளர வளர எப்படி தாம்பத்யத்தை பலப்படுத்திக் கொள்ளலாம்; தாம்பத்யத்தில் லேசாக விரிசல் நேரும்போதே அதை எப்படி நேராக்கிக் கொள்வது; தாம்பத்யத்துக்கான சோதனைக் களனான ஊடல் ஏற்படும் நேரங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்... ஆகிய அனைத்தையும் இந்தப் புத்தகம் அலசுகிறது. தாம்பத்யம் எனும்போது உள்ள உறவு மட்டும்தானா, உடல் உறவு இல்லாமலா? அது இல்லாமல் வாழ்க்க

    RS. 53
    More...
  • உயிர்

    by டாக்டர் நாராயண‌ ரெட்டி

    உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து சொல்கின்றனர். உடலின் கூடலில் இன்ப உணர்ச்சியை அடையலாம். இந்தப் பாலுணர்வுதான் தலைமுறை விருத்திக்கான வழியும்கூட..! எனவேதான் செக்ஸை மனித இனம் உயர்நிலையில்வைத்து மதிப்பிடுகிறது. பருவ மாற்றத்தினால் உடலில் உருவாகும் கிளர்ச்சியைக் கண்டு, குழப்பத்தில் மன உளைச்சல் அடைபவர்கள் பலர். உடலைப் பற்றி பேசினால்கூட, 'என்ன அசிங்கமா, செக்ஸா பேசுற' என தவறான எண்ணம் கொண்டவர்களும் பலர். வெளியே சொல்லி விவாதிக்க தயங்கும் விதமாக செக்ஸ் பலருக்கு புதிராகவே உள்ளது. உடலின் இயக்கத்துக்கு அடிப்படை விஷயங்களான பசி, தாகம் போன்றுதான் செக்ஸும் என்பதை ஏற்க மறுக்கிறது அவர்களது மனம். இந்தியா உட்பட பல நாடுகளில் பண்பாடு எனும் போர்வையில் மறைபொருளாக வைக்கப்பட்ட செக்ஸை, பார்க்க&ரசிக்க&அனுபவிக்க முறையற்ற வழிகளில

    RS. 147
    More...
  • லவ்வாலஜி

    by எஸ்.கே.முருகன்

    மனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான்! ‘காதலிக்க நேரமில்லை!’, ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’, ‘காதல் படுத்தும் பாடு!’, ‘காதலுக்குக் கண்ணில்லை!’, ‘காதல் கசக்குதய்யா!’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..!’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் பதிவுசெய்து வைத்திருந்தாலும்... வெற்றியோ தோல்வியோ, காதல் பற்றி எப்போது பேசினாலும் கரும்புபோல இனிக்கவே செய்கிறது. அன்பு, நேசம், நளினம், ஆசை, மகிழ்ச்சி, உற்சாகம், தைரியம், வீரம், பெருமிதம், அடக்கம், வெட்கம், பாராட்டு, தூய்மை, நம்பிக்கை, ரகசியம், கற்பு - இவை அனைத்தும் காதலுக்கு மரியாதை தரும் வார்த்தைகள். ‘காதலுக்கு இலக்கணம்’ என்று பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் காதல் உணர்வுகளை இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உணர்வு என்பது பொதுவானது. எந்த வயதில், யாருக்கு, எப்போது காதல் உணர்ச்சி எழும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் காதல் உடனே நிறைவேற வேண்டும் என்று தவமாய் தவமிருப்பவர்கள் ஏராளம். காதல் கைகூடி வந்தபிறகு அதில் திளைத்து வாழ்பவர்கள் ஏராளம். அதே சமயத்தில், ‘காதல் தோல்வி’ என உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் ஏராளம்! காதலில் தோல்வி அடையாமல், காதலை வளர்க்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து மந்திரங்களை, இந்த நூலில் அழகாகத் தொகுத்து எழுதி இருக்கிறார் எஸ்.கே.முருகன். காதலை ரசனை மிக்க வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள விரும்பும் காதலனும் காதலியும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, காதல் உணர்வை அலட்சியப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், பெற்றோர்களால் வரும் ஆபத்து, காதல் கல்யாணத்தால் சமூகத்தில் எழும் பிரச்னைகள்... என காதலைப் பற்றி முழு ஆராய்ச்சி செய்து, விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர். அனைவராலும் காதலிக்கப்பட வேண்டிய நூல் இது.

    RS. 60
    More...
  • காதல் வாழ்க

    by மத‌ன்

    மனித உணர்வுகளில் அதிமுக்கியமானது ‘காதல்’. அன்பின் அடிப்படையில் முகிழும் காதல், யுவன்-யுவதிகள் இடையே மட்டும் அல்லாது வயது வித்தியாசம் இன்றி எந்த வயதினரையும் பற்றும்; எவரையும் சுற்றும். இரு மனங்களும், நான்கு கண்களும் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம்தான் ‘காதல்’. இதிகாச காலம் தொட்டு இன்றைய காலம் வரை, காதல் என்கிற வார்த்தைதான் உலகத்தை ஆள்கிறது. இனம், நிறம், குணம் என எல்லாவிதமான பாகுபாடுகளையும் சரிசெய்யும் சக்தியாக காதல் மட்டுமே இருக்கிறது. லைலா-மஜ்னூன், கேதரீன் ஹெப்பர்ன்-ஸ்பென்ஸர் ட்ரேஸி, கிளார்க் கேபிள்-கரோல் லோம்பார்ட் போன்றோரின் காதல் நிகழ்வுகளை நம் கண்ணெதிரே நடப்பது போன்ற ஓட்டத்தோடும், காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளோடும் அழகியலாக விளக்கி உள்ளார் நூலாசிரியர் மதன். காதலில் கரைய விரும்புகிறவர்கள், தன் காதலை எப்படி வெளிப்படுத்துவது, தன் ஜோடியிடம் எவ்வாறு நடந்துகொள்வது, தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணம் என்ன, அதைத் தீர்க்கும் வழிமுறைகள் என்ன என்பதுபோன்ற பல்வேறு தகவல்கள் இந்த நூல் முழுவதும் விரவி இருக்கின்றன. மேலும், இந்த நூலில் இடம்பெற்றுள்ள, ‘காதலை வெளிப்படுத்துவதற்கான சுயபரிசோதனை வழிமுறைகள்’, காதலர்களுக்கான வழிகாட்டியாக விளங்கும். மதன் படைத்த இந்தக் காதல் குளத்தில் நீங்கள் மகிழ்வோடு கண் எறிந்து பார்க்கலாம். நிச்சயம் உங்கள் நெஞ்சத்தை வசீகரிக்கும்.

    RS. 63
    More...
  • வாத்ஸாயனரின் காமசூத்திரம்

    by டாக்டர் டி.நாராயண ரெட்டி

    இன்றைய தினசரிகளைப் புரட்டினால் பாலியல் கொடூரங்கள் குறித்த செய்திகளுக்கும், ஆண்மை குறித்த விளம்பரங்களுக்கும் குறைவே இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எனப் பன்முகத் தளங்களில் ஜெட் வேகத்தில் முன்னேறும் காலகட்டத்திலும் பாலியல் புரிதலில் நாம் பின்தங்கியவர்களாகவே இருக்கிறோம். திருமணமான இரண்டாவது நாளே காவல் நிலையப் படியேறி கண்ணைக் கசக்கும் மணமகள், மூக்கு சரியில்லை என்பதற்காக திருமணப் பந்தத்தை முறித்துக்கொண்ட மணமகன், பெருகும் விவாகரத்து வழக்குகள், கள்ளத்தொடர்புகளால் ஏற்படும் விபரீதங்கள்... என அத்தனைக்கும் பின்னணியாக இருப்பது பாலியல் புரிதலற்றதனம்தான்! காமம், பொத்திப் பதுக்க வேண்டிய ஒன்று அல்ல; புரிந்துகொள்ள வேண்டிய பக்குவம் அது. குடும்ப உறவுகளைச் சுக்குநூறாக்கும் ஆயிரக்கணக்கான பிரச்னைகளில் 80 சதவிகிதத்துக்கும் மேல் செக்ஸ்தான் பின்னணியாக இருக்கிறது. பாலியல் கல்விக்கான அவசியத்தை வலியுறுத்தும் விதமாக நாளுக்கு நாள் ‘இல்லற அவலங்கள்’ அதிகமாகி வருகின்றன. இந்தக் காலகட்டத்தில் இல்லற உண்மைகளை உரக்கச் சொல்லவும், உறவுகள் குறித்த நெறிகளைச் சொல்லி வழிநடத்தவும், தனி மனிதத் தவறுகளைத் தவிர்க்கவும், எது சரி எது தவறு என்கிற தெளிவை ஏற்படுத்தவும் டாக்டர் நாராயண ரெட்டி மிகுந்த சிரத்தையோடு வாத்ஸாயனரின் காமசூத்திரத்தை இந்த நூலில் பகுத்துக் காட்டி இருக்கிறார். ‘சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை என்பது தவறு. கலை என்றாலே சொல்லித் தெரிந்துகொள்வதுதான்’ என்பதை அழுத்தமாக வலியுறுத்தும் டாக்டர் நாராயண ரெட்டி, வாத்ஸாயனரின் அத்தனைவிதமான பார்வைகளையும் ஆய்வுகளையும் மிக எளிமையான விளக்கமாக எடுத்துரைக்கிறார். பெண்களை மிகுந்த கௌரவத்துடனும், அவர்கள் தரப்பிலான எதிர்பார்ப்புகளை மிகச் சரியாகக் கணித்தும் சொல்லி இருக்கிறது காமசூத்திரம். வாத்ஸாயனர் விளக்கும் வாழ்வியல் நுட்பங்களை ஏழு தொகுதிகளாகவும், 36 அத்தியாயங்களுமாக மிகத் தெளிவாக தமிழ்ச் சமூகத்துக்குப் படைத்தளித்திருக்கும் டாக்டர் நாராயண ரெட்டியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இல்லறம் நல்லறமாக செழிக்க எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய ‘நவீன குடும்ப வாழ்வுக்கான பழங்கால இந்தியக் கையேடு’ இந்த நூல்!

    RS. 175
    More...
  • மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும்

    by எஸ்.கதிரேசன்

    மனித மனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்போது அல்லது சமூக ஒழுக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது ஏற்படக்கூடிய உணர்வு மாற்றமே ‘மனோதத்துவம்’. இன்றைய தலைமுறையினரிடம் இது முக்கிய இடத்தை வகிக்கிறது. உள்ளுணர்வு, அறியும் ஆற்றல், கவனம், மன உணர்வு அல்லது உணர்ச்சி வேகம், இயல்பு, ஊக்கம், மூளையின் செயல்பாடுகள், ஆளுமை, நடத்தை மற்றும் உள்ளார்ந்த தொடர்புகள் ஆகியவற்றைக் கொண்டதே மனிதனின் அன்றாட செயல்முறைகள். மனிதர்களால் திருத்திக்கொள்ள முடியாத தவறுகள் இன்று ஏராளம். தன்னையும் தன் சமூகத்தைச் சுற்றியும் என்ன நடக்கிறது, என்ன நடக்க இருக்கிறது, குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்கான நம்முடைய செயல்முறைகள் எப்படி இருக்க வேண்டும், பிறரின் மனதில் பொதிந்துள்ள கருத்தை எவ்வாறு அறிவது போன்ற பல்வேறு சிந்தனைகளுக்கான பதில்கள் நம்மிடையே இருக்கின்றன. ஆனால், அவற்றை உணர்ந்துகொள்ள ஏனோ நாம் முயற்சிப்பது இல்லை. விளைவு, பிரச்னைகளை அலசி ஆராயத் தெரியாமல் எளிதில் சிக்கிக்கொள்கிறோம். குடும்பம், சமூகம், உறவுகள், நண்பர்கள் என, மனிதன் இருக்கும் இடம்தோறும் மனோதத்துவரீதியிலான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. உணர்வுரீதியான, உளவுரீதியான, உறவுரீதியான மனநல நிகழ்வுகளையும், அதற்கு டாக்டர் மாத்ருபூதம் தரும் பதில்களையும் பழகுத் தமிழில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் கதிரேசன். மனித உறவுகளிடையே ஊசலாடிக்கொண்டு இருக்கும் உணர்வுகளின் ஒட்டுமொத்த வினாக்களுக்கும் இங்கு விடை காணலாம். வாழ்க்கையில், பிடிப்பற்ற அநேக நிலைகள் வரத்தான் செய்யும்; அவற்றை எதிர்நோக்கி வெற்றி கொள்பவனே ‘முழு மனிதன்!’

    RS. 63
    More...
  • குட் நைட்!

    by டாக்டர் டி.நாராயண ரெட்டி

    முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி கற்பது பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்லி இருந்தார்: ‘ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றுவோம்’. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட ஆபத்தானது அந்த விஷயத்தைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பது. மேலும் நாம் பல விஷயங்களில் ஆயத்தமாக முன் முடிவுகளைக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறோம். இதுவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஒருவருக்குத் தெரிந்த செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுகூட இன்னொரு விளக்கை ஏற்றும் செயலே. அதுவும் அறிவியல் தனது பன்முகத் தன்மையால் உலகையே தன் கீழ்க் கொண்டுவந்துவிட்ட காலம் இது. அறிவியல், ஒவ்வொரு நாளும் புதிய புதிய உண்மைகளைப் பந்தி வைத்துக்கொண்டு இருக்கிறது. அதில் செக்ஸ் விஷயமும் விதிவிலக்கல்ல! டாக்டர் நாராயண ரெட்டி அவர்கள் இந்தியாவில் செக்ஸுவல் மெடிசன் துறையில் புகழின் உச்சியில் இருப்பவர். அவர் தனது ஆய்வுப் பார்வையுடன் செக்ஸ் அறிவியல் உண்மைகளை இந்தப் புத்தகத்தில் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். இந்தப் புத்தகம் எளிய தமிழில் இனிய முறையில் செக்ஸுவல் மருத்துவ அடிப்படையில், நம்முடைய பல சந்தேகங்களுக்கும் பல முன் முடிவுகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் வேட்டுவைத்து தெளிவான பதிலை அறிவியல்பூர்வமாக வழங்குகிறது. டாக்டர் விகடனில் வெளிவந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. படிப்போம்... தெளிவோம்!

    RS. 81
    More...
  • ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்

    by கிருஷ்ணா டாவின்ஸி

    காதலுடன் தொடங்கும் எத்தனையோ தம்பதிகளின் வாழ்க்கை கடைசிவரைக்கும் அதே காதலுடன் நீடிக்கிறதா? பெரும் அன்போடும் ஆரவாரத்தோடும் தொடங்கும் இல்லறம் சில நாட்களிலேயே ஏன் சலித்துப்போகிறது? ஊடலும் கூடலும் மாறி மாறித்தான் நம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துகின்றன. ஆனால், ‘இன்பமும் துன்பமும் இணைந்த கலவைதான் வாழ்க்கை’ என்கிற புரிதல் எத்தனை பேருக்கு இருக்கிறது? பல வருடப் பாசமும் காதலும் நொடியில் உதிர்க்கும் ஒற்றை வார்த்தையில் உடைந்துபோகும் நிகழ்வுகளை நாம் அனுதினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சரியான புரிதலும், சரிவிகித அன்பும் இருக்கும் இடத்தில் நிச்சயம் காதலும் நிலைத்திருக்கும். அதற்கான வழிகாட்டுதலை மிக மென்மையான நடையில் இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார் கிருஷ்ணா டாவின்ஸி. பிரபலமானவர்களின் மேற்கோள்களுடனும், தான் சந்தித்தவர்களின் அனுபவங்களுடனும் கிருஷ்ணா டாவின்ஸி ரொமான்ஸ் ரகசியங்களை எழுதி இருக்கும் விதம் அலாதியானது. ஓவியர் மணியம் செல்வனின் அழகிய ஓவியங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அவள் விகடனில் தொடராக வந்தபோதே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படைப்பு இப்போது நூல் வடிவில்! இதில், பக்கத்துக்குப் பக்கம் நிரம்பி இருக்கும் ரொமான்ஸ் நுணுக்கங்கள் நெஞ்சுக்குள் மாமழையாகப் பொழிந்து உங்களை வசப்படுத்தும் என்பது நிச்சயம்!

    RS. 53
    More...
  • அர்த்தமுள்ள அந்தரங்கம்

    by டாக்டர் ஷாலினி

    சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு. இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை. டிஎன்ஏ என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான். இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள். அவை, உயிர்த் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம். காமமா! என அதிர்ச்சியடைந்தாலும், ஆமாம்

    RS. 88
    More...
  • கதை வடிவில் காமத்துப்பால்

    by கலை இலக்கியா

    பாலியல் கல்வி போதிக்கப்படுவது மட்டுமே, பாலியல் குற்றங்களை தடுக்கும் என்று அறிஞர்கள் பலர் கூறிவருகின்றனர். ஆனால், நம் மூத்தகுடியான அய்யன் திருவள்ளுவர் காமத்துப்பாலில் களவியலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே போதித்துள்ளார். திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் புகழ்பெற்ற இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படும் திருக்குறளை முப்பாலாக பிரித்தளித்துள்ளார் வள்ளுவர் பெருமான். கடைசிப்பாலாகிய காமத்துப்பாலில், களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. முப்பாலின் ஒரு பாலான காமத்துப்பால் இன்றைய அறிஞர்களால் ‘இன்பத்துப்பால்’ என்றே பெரும்பான்மையாக அழைக்கப்படுகிறது. ஆண், பெண் இடையே இன்பம் எப்படி உச்சம் அடைகிறது என்பதை வள்ளுவரின் இரண்டடியை நமக்குக் கதை வடிவில் தந்து அசத்தியிருக்கிறார் நூலாசிரியர் கலை இலக்கியா. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. 1281 காதலுக்கு உள்ள குணம் கள்ளுக்குக்கூட இல்லை. காதல் தன்னை நினைத்தாலே மகிழ்ச்சியைத் தருகிறது. கண்டாலே போதும். மகிழ்ச்சியைத் தருகிறது. கள்ளு இப்படி செய்யுமா? உண்டால்தானே? ஆக காதல் என்பது கள்ளை விட கொடிய போதை வாய்ந்தது என்பதை அய்யன் அன்றே சொல்லிவிட்டார். இந்த குறள் விளக்கத்தை கதை வடிவில் நாம் படிக்கும் போது அர்த்தங்கள் எளிதில் புரிபடுகின்றன. இதுபோன்று காமத்துப்பாலை கதைவடிவில் எளிய மொழியில் உருவாக்கி அளித்துள்ளார் நூலாசிரியர்.

    RS. 84
    More...
  • 1
  • 2 
  • »
  • Last

© vikatan 2021. All Rights Reserved. Ananda Vikatan Digital Private Limited