Vikatan
eBooks
  • அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்
  • ஆன்மிக வரலாறு
  • தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்
  • இல்லறம்
  • இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்
  • சமூக, அரசியல் கட்டுரைகள்
  • சட்டம்
  • மருத்துவம் - ஆரோக்கியம்
  • சுட்டிகளுக்காக
  • பெண்களுக்காக
  • பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு
  • சரித்திரம்
  • வாழ்க்கை வரலாறு
  • நாடுகளின் வரலாறு
  • கதைகள், கவிதைகள்
  • விளையாட்டு
  • விவசாயம் - பிராணி வளர்ப்பு
  • ஆன்மிகம்
  • சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை
  • பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்
  • பொது
  • மொழிபெயர்ப்பு நூல்கள்
  • ஜோக்ஸ் - கார்ட்டூன்ஸ்
  • சமையல்
  • கல்வி விகடன்
  • கிராஃ பிக் நாவல்
  • விகடன் கிட்ஸ்
  • Pod
0

Cart is Empty

பொது

Sort Books
  • Price: Low to High
  • Newest to Oldest
  • Oldest to Newest
  • Bestsellers
  • Items Eligible For Promo Codes
  • கற்றது கடலளவு

    by து.கணேசன்

    கடலும் கப்பலும் எப்போதுமே அழகானவை. ‘டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு கப்பல் மீதான ஆர்வம் எல்லோருக்கும் அதிகமானது உண்மை. கடலின் மீது மிதக்கும் பிரமாண்டமான கவிதையாகத்தான் கப்பலை நாம் பார்க்கிறோம். ஆனால், கப்பலில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசிக்க வாய்ப்பு இல்லை. காரணம், ‘அவர்களுக்கு என்ன குறை? நல்ல வருமானம். சுகமான வாழ்க்கை...’ என நினைப்போம். இந்த எண்ணத்தைத் திருப்பிப்போடும் விதமாக, கடலும் கப்பலுமாக வாழும் து.கணேசன் எழுதி இருக்கும் அதிநுட்பப் பதிவு இது. பல வருடங்களுக்கு முன்னால் ‘கற்றது கடலளவு’ என்ற தலைப்பில் ஜூ.வி-யில் தொடராக வந்தபோதே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பல கற்பனைகளோடும், கனவுகளோடும் விரும்பி ஏற்றுக்கொண்ட பணியில் கிடைத்த அனுபவங்களை ஒரு நண்பனிடம் சொல்வதைப்போல் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கப்பல் பணியில் உள்ள நிறைகளையும் குறைகளையும் ஒளிவுமறைவின்றி நிதர்சனமாக எடுத்து வைத்திருக்கிறார். கப்பலில் இன்ஜினீயராக சேர்வது, வெவ்வேறு கப்பலுக்கு பணியை மாற்றிக்கொள்வது, கப்பல் பொறியாளர்களுக்கு வழங்கப்படும் விசா என பணியின் நடைமுறைகளையும் எல்லோருக்கும் விளங்கும் விதமாகப் புரியவைக்கிறார். நிலநடுக்கோட்டைக் கடக்கும் விழா, கப்பலில் கிடைக்கும் உணவு வகைகள், சரக்குக் கப்பல் பணிக்கும், பயணிகள் கப்பல் பணிக்கும் உள்ள வேறுபாடுகள், வசதிகள் என நாம் அறியாத பல தகவல்கள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன. கப்பலில் பயணிக்கும் அனுபவம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு நாவலுக்கு சற்றும் குறையாத இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிக்கையில் கப்பலில் பல நாட்கள் பயணித்த நிறைவு கிடைக்கும் என்பது நிச்சயம்!

    RS. 81
    More...
  • மயிலிறகு மனசு

    by தமிழச்சி தங்கபாண்டியன்

    சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லிவிளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் இருந்து எழ மனமே இல்லாமல் எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துக்களின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும். எழுதிக் குவிக்கும் இயந்திரத்தனத்தில் இத்தகைய எழுத்துக்கள் எப்போதாவது - எவரிடம் இருந்தாவது வெளிப்படும். தமிழச்சியிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் ‘மயிலிறகு மனசை’ப்போல்! ‘மயிலிறகு மனசு’ எனத் தலைப்பிட்டதாலோ என்னவோ... மிக மெல்லியத் தூரலைப்போல் நம்மை மிதக்க வைக்கிறது அவருடைய எழுத்து. கட்டுரைக்கான கட்டமைப்பிலும் கவிதைத்தனம் நிகழ்த்தியிருப்பது கைகுலுக்கத்தக்கது. நமக்கு மிக நெருக்கமான நண்பர்களிடத்தில் நம் எண்ணச்சாயல் நிச்சயம் இருக்கும். அறுபடாத ஆத்மார்த்த நட்பை அந்த எண்ணச்சாயலே ஏற்படுத்துகிறது. அந்த விதத்தில் தமிழச்சி அறிமுகப்படுத்தும் அத்தனை தோழிகளிடத்திலும் எளிமை, நேர்மை, யதார்த்தம் எனத் தமிழச்சியின் பிரதிபலிப்புகளையே பார்க்க முடிகிறது. தாயாய் வருடிக்கொடுக்கவும், குழந்தையைப்போல் அடம்பிடிக்கவும் கற்றுவைத்திருக்கிறது தமிழச்சியின் தமிழ். அதனால்தான் அன்பின் அவசியத்தைப் பெருமையாகவும், ஏக்கமாகவும் ஒரே நேரத்தில் அவரால் எடுத்துவைக்க முடிகிறது. ஒரு பூக்காரப் பெண்ணையும் தன் ரத்தம் பிரித்த மகளையும் ஒரே தட்டில்வைத்துப் பாசம் பாராட்டும் பக்குவம் தமிழச்சிக்கு வாய்த்திருப்பது வரம். நடிகை ரோகிணி தொடங்கி தன் வீட்டு வேலைக்காரப் பெண் பாண்டியம்மா வரை தமிழச்சி விவரிக்கும் நட்பும் நெகிழ்வும் அலாதியானவை. ‘சமயங்களில் வாழ்வின் விழுமியங்களை, அதிகம் படிக்காத அன்பானவர்களே நமக்குக் கற்றுத் தருகிறார்கள் - போகிறபோக்கில் ஒரு மாம்பூ மேலுதிர்வதுபோல்!’ என்ற வரிகளில் தமிழச்சியின் எழுத்து தோகை விரித்து ஆடுகிறது. அவள் விகடனில் தொடராக வந்தபோதே ஏராளமான இதயங்களைக் குத்தகைக்கு எடுத்த இந்தப் படைப்பு, நூல் வடிவில் நிச்சயம் உங்களையும் ஒரு பூனைக்குட்டியாக மாற்றும்!

    RS. 56
    More...
  • ஞானகுரு

    by எஸ்.கே.முருகன்

    வேடதாரிகளும் போலிகளும் பெருகிவிட்ட ஆன்மிக உலகுக்கு லௌகீகத்தின் இயல்பைப் புரிந்துகொண்ட ஒரு நிதர்சன மனிதன் பிரவேசித்தால் எப்படியிருக்கும்? இந்தக் கேள்விக்கு ஞானகுருவில் பதில் இருக்கிறது. தனக்கு முன் மிதக்கும் இலைகளைக்கூட வாஞ்சையுடன் ஏந்திக்கொள்ளும் காதல் மிகுந்த துறவி இந்த ஞானகுரு! மடங்களையும் ஆசிரமங்களையும் கட்டிக்கொண்டு ஏமாற்றும் போலிச் சாமியார்களுக்கு நடுவே, ரகசியங்களோ அதிசயங்களோ எதுவும் இல்லாமல் நம்மை நெருங்குகிற புதிய ஆன்மிக அனுபவம் இது. சாதகமாகவே எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் மனித இயல்புகளை மீறாத தத்துவ விசாரணைகளைப் பேசும் இந்த ஞானகுரு, விதவிதமான கேள்விகளோடு நெருங்குபவர்களை பரிகசிப்பதில்லை. மாறாக, அவர்களின் பலவீனங்களுக்கு தீர்வுகள் சொல்கிறார். மனிதன் திருப்தியடைகிற மாதிரி நிறைய பதில்களை இவர் வைத்திருக்கிறார். தேடி வருபவர்களைப் பதில்களால் குழப்பி, திரும்பத் திரும்ப தன்னைச் சரணடைய வைக்கும் சிலருக்கு மத்தியில், வாழ்வின் ருசியைக் கற்றுக் கொடுத்து அனுப்பி வைக்கிறார் இந்த ஞானகுரு. வழிபாடு என்பது அப்படியே பின்பற்றுவதில்லை, பின்பற்றிப் போவதற்கு சரியான வழியைக் கண்டுபிடிப்பது! என்று நமக்கு

    RS. 50
    More...
  • கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)

    by சுஜாதா

    தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர். அந்த வகையில், சமூக வளர்ச்சியையும் சிதைவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து அலசி ஆராய்ந்து அக்கறையோடு எழுதப்பட்ட கட்டுரைத் தொடர் 'கற்றதும்... பெற்றதும்...' தான் கற்றதையும் பெற்ற அனுபவங்களையும் புதிய சிந்தனையுடன் கலந்து சுஜாதா அளித்திருக்கும் அற்புதமான அனுபவக் களஞ்சியம்தான் இப்போது உங்கள் கைகளில் புத்தமாகத் தவழ்கிறது. நாட்டு நடப்புகளை, நயமான நகைச்சுவை கலந்து சுஜாதா எழுதும் எழுத்தை வரவேற்றுப் படித்து வரும் வாசகர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, விகடனில் வெளியான 'கற்றதும்... பெற்றதும்...' கட்டுரைத் தொடர்களை இதற்குமுன் இரண்டு பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். புதிய கட்டுரைகளுடன் மூன்றாவது பாகம் இதோ உங்கள் பார்வையில்! இந்தப் புத்தகம் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தி புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமையும்.

    RS. 126
    More...
  • கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)

    by சுஜாதா

    ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர். சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல புத்தகங்களைப் படித்த‌தோடு, தினந்தோறும் பலரையும் சந்தித்தார். அந்த‌த் தகவல்களைக் கட்டுரையில் தந்த‌போது, அந்த அனுபவ‌ப் பகிர்வு பலருக்கும் அரிய பொக்கிஷமாக இருந்தது. ஆதலால், பிறர் எழுதிய கட்டுரை, கதை, கவிதை, பொன்மொழி, மேற்கோள்கள் போன்றவற்றில் அவருக்குப் பிடித்ததையும் கட்டுரைகளில் குறிப்பிட்டு எழுதினார். சுஜாதாவின் கருத்தால் பெற்ற அங்கீகாரத்தால் இளம் படைப்பாளர்கள் பலன் பெற்றனர். கற்றதும்... பெற்றதும்... பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் நான்காம் தொகுப்பு என இந்த நூலாக வெளிவந்திருப்பது, அக்கட்டுரைகளுக்கு வாசகர்கள் தரும் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது. அரசியல்வாதிகளின் செயல்பாடு, பார்த்த சினிமாக்கள், கேட்ட பாடல்கள், படித்த புத்தகங்கள், நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை விமர்சித்தும், பாராட்டியும் எழுதியத

    RS. 102
    More...
  • சுஜாதாட்ஸ்

    by சுஜாதா

    இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; பிடிப்பதில்லை என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை. ஆகவே, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற நடைமுறையை ஊடகங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன. அதன்படியே, இன்றைக்கு அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் நன்றாகவே அதை அமல்படுத்தவும் செய்கின்றன. அதை உள்வாங்கிக் கொண்டுதான் விகடன் குழுமத்திலிருந்து முன்பு வெளிவந்துகொண்டிருந்த ஜூனியர் போஸ்ட் இதழில், சுஜாதாட்ஸ் என்ற தொடர் வெளிவந்தது. அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் சம்பவங்களையும் தன் சிந்தனை ஓட்டத்தில் இருந்து எழுத்தாளர் சுஜாதா எழுதிவந்தார். அப்போது, ஜூனியர் போஸ்ட் வாசகர்கள் மத்தியில், அது மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இலக்கியம், அரசியல், சினிமா, ஊடகம் என்று பல்வேறு துறைகளையும் சுஜாதா அந்தக் கட்டுரைகளில் அலசியிருக்கிறார். முன்பு சொன்ன மாதிரி சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற முறையே அந்தக் கட்டுரைகளின் சிறப்பு. தனது சரளமான எழுத்து நடையால் வாசகர்களை மீண்டும் மீண்டும் தன் பக்

    RS. 91
    More...
  • விளம்பர உலகம்

    by எஸ்.எல்.வி.மூர்த்தி

    விளம்பரங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை.எந்த ஒன்றும் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு கைகொடுப்பது விளம்பரங்கள்தான்.சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் கன்ஸ்ட்ரக்ஷன் கான்ட்ராக்ட் வரை எதுவானாலும் வெவ்வேறு விதமாக பல யுத்திகளில் விளம்பரங்கள் வெளியாகி அசரடிக்கின்றன. இதைச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சுவரொட்டிகள், திரையரங்குகள் மூலம் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.அப்படி வணிகத்துக்கு உயிர்நாடியாகிவிட்ட விளம்பரத் துறை கோடிகள் புரளும் கனவுத் தொழிற்சாலை.இந்தத் துறையின் ஆரம்ப காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்தையும் இங்கே அற்புதமாகப் படைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.விளம்பர வியூகம் எங்கிருந்து எப்போது தொடங்கியது, அது படிப்படியாக எப்படி பல மாற்றங்களைக் கண்டுள்ளது, பல பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் விளம்பரங்களை துணை கொண்டு தங்கள் பொருட்களை எப்படியெல்லாம் சந்தைப்படுத்தியுள்ளன என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக வருடங்களின் புள்ளிவிவரங்களோடு கொடுத்திருப்பது மகத்தானது.செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி என்று தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்தே விளம்பர உலகம் வளர்ந்து, இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப இணையதளம் வரை மாறியிருப்பதை அழகாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.ஒரு பொருளின் தரம், விலை நிர்ணயம், அந்தப் பொருளின் பயன்பாடு, எந்தப் பொருளுக்கு விளம்பரத்தை எப்படி கையாண்டால் மக்களை அது கவரும், மார்க்கெட்டில் வெற்றி பெறும் என்பது போன்ற பல தகவல்கள் உள்ளன. மார்க்கெட்டிங் பற்றி அறியாதவர்களும்கூட புரிந்துகொள்ளும் விதமாக, சுவாரஸ்யமாக, எளிமையான நடையில் இந்த நூலை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வணிக வியூகத்தை அழகாகச் சொல்லித் தரும் இந்த நூல் அனைவரும் படித்து பயன்பெறக்கூடிய செய்திகளைக் கொண்ட விளம்பர உலகின் வழிகாட்டி.

    RS. 56
    More...
  • வணிகயோகமும் கைரைகை விஞ்ஞானமும்

    by காஞ்சி எஸ்.சண்முகம்

    ஜோதிடம், கைரேகை போன்ற புராதன சாஸ்திரங்களின் துணையோடு, மூன்று காலங்களுக்கும் உரிய பலன்களையும் பக்கவாட்டில் வைத்தபடியே ஓடிக்கொண்டு இருக்கிறது இன்றைய தலைமுறை. இவற்றுள் ‘கைரேகை’ என்பது, மனிதக் கருவறையில் இறைவனால் வரையப்பட்ட வாழ்க்கை வரைபடம் என்றுகூட சொல்வார்கள். கை நிறைய சம்பாதித்து, மனம் நிறைய மகிழ்ச்சியை உறவுகளோடு பகிர்ந்துகொண்டு வாழ வேண்டும் என்பதுதான், மனித சமுதாயத்தின் மாண்பு. இதற்கு உள்ளங்கைகளில் பதிந்துள்ள ரேகைகள் துணை புரியுமா? என்ற கேள்வி, அநேகரிடம் இருப்பதை காண முடிகிறது. பல்வேறுவிதமான வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்து பொருள் ஈட்டவேண்டிய இன்றைய சூழலில், ஒவ்வொருவரின் ரேகை அமைப்பும் என்ன சொல்கிறது, ரேகை சொல்லும் வணிகம் எது, வணிகம் செய்வதற்கான காலம் எது, எந்த வணிகத்தைத் தொடங்கினால் சிறப்படையலாம், தனி வணிகமா... கூட்டு வணிகமா... குடும்ப வணிகமா? என்பதையெல்லாம் ஆய்வின் அடைப்படையில் இந்த நூல் விளக்குகிறது. மேலும், ரேகை அமைப்பு முறைகளை அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் வரைபடங்களுடன் எளிமையாக விவரித்துள்ளார் நூலாசிரியர். ரேகை மற்றும் கிரக மேடுகளின் அடிப்படையில் பலன்களை விவரித்துள்ள இந்த நூல், வணிகம் தொடங்கி வளம் பெற முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் காட்டும்.

    RS. 50
    More...
  • ஐ

    by நெல்லை விவேகநந்தா

    பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டத்தைக் கவிதையாகக் கண்டவர் கவிஞர் வைரமுத்து. எது, எத்தகையது என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது. ஒரே வரிசையில் வைக்க முடியாத வெவ்வேறு விஷயங்களின் ‘மெய்ப்பொருள்’ காணும் முயற்சியாக இந்தக் கதம்பக் கொத்தை நூலாக்கி இருக்கிறார் நெல்லை விவேகநந்தா. பூமியைப் படைத்த பெருந்தகையின் பின்னணி, உலகப்போரில் கொடுங்கோலன் ஹிட்லரின் நிலை, வைரத்தின் வீரியத்தை விவரிக்கும் ‘வைரம் வந்த கதை’, விண்வெளியில் நடந்த முதல் அதிசயம், வியக்கவைக்கும் சீனப் பெருஞ்சுவர், உலக அழகிப் போட்டி பிறந்த கதை, குங்குமப்பூவின் உண்மையான குணாதிசயம், தாயைப் புறக்கணித்த காமராஜர், காதலனுக்கு, காதலி கட்டிய நினைவுச்சின்னம், கிளுகிளுப்பை உண்டாக்கும் விருந்து! என அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ளக்கூடிய சுவாரஸ்யமான தகவல்கள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளிவந்திருப்பது இந்த நூலுக்கே உரிய சிறப்பு. மேலும், ‘சில சந்தேகங்களும் தீர்வுகளும்!’ என்ற தலைப்பில், மக்களின் பல்வேறு மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி, அதற்கான சரியான விளக்கத்தையும் தந்திருப்பது, இந்த நூலின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. பள்ளி, கல்லூரி, போட்டித் தேர்வு, பொது அறிவு என விதவிதமான தகவல்களை ஒருங்கே தொகுத்து அறிவுக் களஞ்சியமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரின் அறிவு விசாலத்துக்கும் நிச்சயம் துணை புரியும்!

    RS. 56
    More...
  • என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்

    by சுமதி ஸ்ரீ

    நம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, சில நேரம் காயப்படுத்துகிறது, சில நேரம் சிரிக்க வைக்கிறது, சில நேரம் அழவைக்கிறது. முடிவாக வாழ்க்கை நம்மை பெரிதும் சிந்திக்கவும் வைக்கிறது. சிலரது வாழ்க்கையில் ஒரு சில சம்பவங்கள் நீங்காத வடுக்களாகவும், ஒரு சில சம்பவங்கள் நினைக்கும்போதே சுகமாக அமைந்து விடுகின்றன. இங்கே நூலாசிரியர் சுமதிஸ்ரீ தன் வாழ்வில் நிகழ்ந்த பலவித அனுபவங்களை, நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளை, மனதில் காயம் ஏற்படுத்திய சங்கடங்களை அழகான நடையில் இலக்கிய நயத்தோடு, வார்த்தை ஜாலங்களின் கலவையோடு இங்கே நம் சிந்தனையைத் தூண்டும் நூலாக கொடுத்திருக்கிறார். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையைத் தெளிந்த நீரோட்டமாக மாற்றிக்கொள்ள வேண்டிய மன உறுதியும், உத்வேகமும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அள்ளித் தெளித்திருக்கிறார். விளையாட்டில்கூட ஆண்கள் & பெண்கள் என பாகுபடுத்தப்பட்டுள்ள நிலை, இறுதிப் பயணத்தில் எரியூட்டப்படும்போது, ‘ஆண்கள் உடலைவிட பெண்களின் உடல் எளிதில் எரிந்துவிடும். காரணம், அடுப்படியில் கிடந்து ஏற்கெனவே பாதி வெந்திருக்கும்’ என்பது போன்ற கருத்துகளைச் சொல்லுமிடத்தில் பெண்ணியத்துக்கான ஆதரவை, உள்ளத்தில் அழுத்தமாகப் பதியும்படி வார்த்தைகளால் வடித்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயான உணர்வுபூர்வமான எதிர்பார்ப்புகள், கணவன் மனைவிக்கு இடையேயான பாசப்பிணைப்பு, தாய்மைக்கான உயரிய அந்தஸ்து எனப் பல விதமான உள்ளத்தின் வெளிப்பாடுகளை, உணர்ச்சிபூர்வமாக கொட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர். பள்ளிப் பருவம் முதல் பேராசிரியர் ஆனது வரை பல தகவல்களையும் பகர்ந்திருக்கிறார். கவியரங்கப் பேச்சாளர், பாடலாசிரியர், என்ற வரிசையில் இலக்கியவாதிகளின் பட்டியலிலும் தனக்கான இடத்தைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சிகளையும் பட்டவர்த்தனமாக இங்கே பதிவாக்கியிருக்கிறார். வாழ்வில் மேன்மையடைய தேவையான அத்தனை உத்வேகத்தையும் அனுபவபூர்வமான சம்பவங்களோடு கூறப்பட்டிருக்கும் இந்த நூல் பலருக்கும் வழிகாட்டியாக அமையும்.

    RS. 56
    More...
  • 1
  • 2 
  • 3 
  • »
  • Last

© vikatan 2020. All Rights Reserved. Ananda Vikatan Digital Private Limited