Cart is Empty
by மாலதி பாலன்
தீபாவளித் திருநாளான 1944 அக்டோபர் 16_ம் தேதி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒளி வீசிய ஒரு மாபெரும் சாதனையின் தொடக்க நாள். ஆம்! அன்றுதான் ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வெளியானது. தொடர்ந்து 110 வாரங்கள் ஓடியது. அதாவது, 80 வருடகால தமிழ்த் திரையுலகில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் இதுதான்! மயில்கண் சரிகை வேஷ்டி, சில்க் சட்டை, ஜவ்வாது மணம், பளபளக்கும் சரீரத்துடன், அனைவரையும் வியக்க வைக்கும் சாரீரத்தையும் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர்தான் அந்தச் சாதனையின் கதாநாயகன். நாடகத் துறையின் மூலம் திரைத் துறையில் நுழைந்து, கந்தர்வ கானத்தால் மக்கள் மனதை வென்று ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டம் பெற்ற எம்.கே.டி.பாகவதரின் வாழ்க்கைக் கதையை, சுவையோடு பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் மாலதி பாலன். பாகவதருக்கு, நாடகங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டதையும், இவரை திரைப்படத் துறை தத்தெடுத்தக் காரணத்தையும், முதன்முதலில் இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்ததின் பின்னணியையும், லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் இவர் சிக்க நேர்ந்த விவரத்தையும், சிறைவாசத்துக்குப் பிறகு இவருடைய நிலையையும் இந்த நூலில் தெளிவாக விளக்கியிருக்கி
RS. 56 More...by அஜயன் பாலா
சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. ஒரு திரைப்படம் நம் கண்முன் விரிவது போல பெரியாரின் வாழ்க்கை தொடர்பான சம்பவங்கள் பலவற்றை இந்த நூலில் விவரித்துக் காட்டுகிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. கேலியும் கிண்டலுமாகப் பேசி, மண்டி வியாபாரத்தில் சாமர்த்தியமாக தன்னை விஞ்சுவது கண்டு நெகிழ்ந்த தந்தை வெங்கட்ட நாயக்கர், ஐந்துமாத பெண் குழந்தை இறந்த துக்கத்தால் வாடிய பெரியாரின் மனதைப் புரிந்துகொள்ளாமல், வெற்றிலை எச்சிலால் பலர் முன்னிலையில் முகத்தில் உமிழ்ந்து அவமானப்படுத்தியதையும்... காசியில் கடும் பசியில் நண்பர்களோடு விருந்துக்குச் சென்ற பெரியாரை சாதி பிரச்னை காரணமாக தடுத்து உள்ளே விட மறுக்க, பசியின் கொடுமையால் எச்சில் இலைமுன் அமர்ந்து வயிறு நிறைத்ததையும் படிக்கும் போது பெரியார் என்ற மாமனிதருடன் வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது. காந்திய கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஆங்கிலே
RS. 60 More...by அஜயன் பாலா
அர்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபா நாட்டு விடுதலைக்காகப் போராடிய சே குவாராவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மருத்துவப் படிப்பு படித்துவிட்டு தன்னை ஒரு போராளியாக அறிவித்துக் கொண்டதையும், அர்ஜென்டினா நாட்டில் பிறந்தாலும், கியூபா நாட்டு மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டதையும், கியூபா நாட்டு ரூபாய் நோட்டில் அதிகார கையெழுத்திடும் அளவுக்கு அவரது புகழ் ஓங்கியிருந்ததையும் நினைத்தாலே, இன்றைய இளைஞர்களுக்கு செயல் ஊக்கம் ஏற்படும். ஃபிடல் காஸ்ட்ரோ தன் நாட்டு விடுதலைக்கு, வேற்று நாட்டவரான சே குவாரா மீது நம்பிக்கை வைத்தது, கியூபாவில் அமைச்சராகும் அளவுக்கு அந்த நாட்டு மக்கள் அவர் மீது நட்பு வைத்தது, சொகுசான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தும், காடுகளிலும் மலைகளிலும் சீறிப் பாய்ந்து, எதிரிகளை நேருக்குநேர் சந்தித்துப் போராடி தன்னை வருத்திக்கொண்டது, கடைசியாக அமெரிக்க உளவுப் படையால் வேட்டையாடப்பட்டு சுடப்பட்டது... இப்படி, சே குவாராவின் வாழ்க்கையில் ஆச்சர்யப்பட வைக்கும் நிகழ்ச்சிகளை, எழுச்சிமிகு தமிழில், விறுவிறுப்பான நடையில் எழுதி இருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. கியூபாவில் புரட்சி செய்து வெற்றி அடைந்ததையும், காங்கோவிலும் பொலிவியாவிலும் புரட்சி செய்து தோல்வி அடைந்ததையும், சே குவாரா எப்போதும் ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. விடுதலைப் புரட்சிக்காக விதைக்கப்பட்ட விதைகள் என்றே அவற்றைக் கருதியிருப்பது, இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம். மக்கள் விரும்பிய போராளி சே குவாராவின் வாழ்க்கை வரலாற்றை இந்த உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.
RS. 56 More...by எஸ்.கே.முருகன்
ஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். காரணம், மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த நேர்மையான அரசியல் துறவி அவர். காமராஜர், தேசிய அளவில் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே, ‘மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவிகளைத் துறந்து, கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்’ என்கிற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதற்கு முன்னுதாரணமாக தானே பதவியிலிருந்து விலகினார்! அவரது செயலைக் கண்ட பிரதமர் நேரு தவித்து, காமராஜரை வழியனுப்ப முடியாமல் நெகிழ்ந்திருக்கிறார்! தன் தங்கையின் பேரன், நல்ல மார்க் எடுத்து மெடிகல் கவுன்சிலுக்குத் தகுதி பெற்றும், அவரை மருத்துவக் கல்லூரிக்குப் பரிந்துரைக்காமல், கோவை விவசாயக் கல்லூரிக்குப் போகச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் காமராஜர்! இதுபோன்ற, மனதை ஈர்க்கும் சம்பவங்கள் மக்களைக் கவர்ந்ததாலேயே அவர் ‘பெருந்தலைவர்’ என்று அழைக்கப் பட்டார். கிராமம் தோறும் கல்விக்கூடங்கள், மதிய உணவுத் திட்டம், தொழிலாளர் நலனுக்காக தொழிற்பேட்டைகள், விவசாயம் செழிக்க அணைத் திட்டங்கள் போன்ற அரிய செயல்களைச் செய்ததால் ‘கர்மவீரர்’ என்று போற்றப்பட்டார். காமராஜரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, ஆவணங்களின் உதவியுடன் உறுதி செய்துகொண்டு, சுவைபட எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.கே.முருகன். அரசியல் வாழ்க்கை நடத்துபவர்களும், புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களும் இந்த நூலைப் படித்தால் காமராஜரைப் போல நேர்மையாளராக வாழ வேண்டும் என்ற வைராக்யம் ஏற்படும்.
RS. 119 More...by சாலமன் பாப்பையா
பட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா! ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கும் சொந்தக்காரர். போன தலைமுறையில், பட்டிமன்றம் என்றால் கல்லூரி மாணவர்களுக்குக் கொஞ்சம் தெரிந்திருக்கலாம். ஆனால், இன்றைய தலைமுறையில் இதைப் பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்தவர் பாப்பையா என்றால் அதில் மிகை இல்லை. தீபாவளி, பொங்கல் சமயங்களில் டி.வி. முன் அமர்ந்த பெரியவர்களுக்கு, பட்டிமன்றத் தமிழால் தன்னை அடையாளம் காட்டியது ஒரு பக்கம். ‘ஜுராசிக் பார்க்’ படத்தின் மூலம் ஜனரஞ்சக உலகத்துக்கு ‘டினோசர்’ தெரிந்ததைப் போல, ‘சிவாஜி’ படத்தின் மூலம், ‘அங்கவை_சங்கவை’ சங்கதியை அவர் தெரிவித்து, சிறு குழந்தைகளுக்கும் தன்னை அடையாளம் காட்டியது ஒருபக்கம். ஆக, மதுரை மண்ணில் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்து, இன்று ஒரு தமிழ் அறிஞராக, பேச்சாளர்களுக்கு வழிகாட்டியாக, நடிகராக உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார். இந்நூலில், தன் வாழ்க்கை வரலாற்றை மண்வாசனையோடு அள்ளித் தந்திருக்கிறார். இளவயது சம்பவங்களையும், தன் குடும்பத்தையும் உருக்கமாக விவரித்திருக்கிறார். பட்டிமன்றத்தின் வீச்சு, அது காலமாற்றத்துக்கு ஏற்றாற் போல வளர்ந்த விதம், அதனால் தான் வளர்ந்தது, வாழ்க்கை ஓட்டத்தின் சில சுகமான சம்பவங்கள், சில சங்கடமான அனுபவங்கள் என அனைத்தையும் மிகையில்லாமல், அதேசமயம் சுவை குன்றாமல் விவரித்திருக்கிறார். எவர் மனதையும் புண்படுத்தாமல், மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூலை, மாணவர்கள், மேடைப் பேச்சாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் படிக்கலாம்.
RS. 70 More...by சுகா
பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சுகா, ஆனந்த விகடனில் ‘மூங்கில் மூச்சு!’ என்ற தலைப்பில் தொடராக எழுதிவந்தார். மண்ணின் மணத்தோடு துவங்கி, பால்ய பருவத்து சகாக்களுடனான சந்தோஷ தருணங்களையும், ஆறு, கோயில், குளம், நீச்சல், விளையாட்டு... என வாழ்ந்த சூழலையும் நம் கண்முன்னே நிழலாடச் செய்திருக்கிறார். வாழ்வோடு ஒன்றிய பல விஷயங்களை வர்ணனைகளோடு வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அறிவு புகட்டிய ஆசான் முதல், அன்பு பாராட்டிய உறவுகள் வரை அனைவரைப் பற்றியும் நெல்லைத் தமிழ் மொழியின் வாசனையோடு, ஜனரஞ்சகமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். எலெக்ட்ரானிக் யுகத்தின் தலைமுறை மாற்றத்தையும் கூறியிருப்பது படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. சென்னைக்கு வந்த பிறகு, திரைத்துறையின் வழிகாட்டியான பாலுமகேந்திரா பற்றியும், பாலசந்தர், பாலா, சீமான், அறிவுமதி போன்றோருடனான நெருக்கத்தையும், சுவையான சம்பவங்களையும் திரையிட்டுக் காட்டுகிறார். ஆட்டோ டிரைவர், சைக்கிள் ரிக்ஷாக்காரர், கண் பார்வை தெரியாத முதியவர்... என பலரையும் தன் நினைவுகளில் தேக்கிவைத்து இவர் வெளிப்படுத்தியிருப்பது, பசுமையான அனுபவம் கொண்டிருக்கும் எவருக்கும், தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.
RS. 98 More...by அருணகிரி
பெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ!’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்! வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா! அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம்! மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை! உறைவிடத்தை இழந்தாலும், தம் உணர்வுகளை நிலைநாட்டும் எண்ணத்தில் தாய்மண்ணை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். உயிருக்குப் போராடும் மனிதர்கள் மத்தியில், ‘அவர்களின் அவல நிலை இன்று மாறும், நாளை மாறும்’ என தங்கள் எழுத்தின் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காசி ஆனந்தன், ‘மறவன் புலவு’ சச்சிதானந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சோ.சேனாதிராசா, மாஸ்டர் நவம், யாழூர் துரை... போன்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்தான் இந்த நூல். ஈழத் தமிழர்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின் கருத்துகளை பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி.
RS. 63 More...by பசுமைக்குமார்
மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனின். அவருடைய வீரமிகு வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பான சுவாரஸ்யம் மிகுந்த எளிய நடையில் சொல்கிறது இந்த நூல். உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின். மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பவும், மார்க்சிய மெய்ஞானத்தின் ஆற்றலை உழைக்கும் மக்களுக்கு எடுத்துக் கூறவும், ஜார் மன்னரின் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கானப் புரட்சிப் படையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் லெனின். இதற்கெல்லாம் அடிப்படையாக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். குழந்தைகளிடமும் விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடம் லெனின் அக்கறை காட்டினார். நாட்டின் எந்தக் கோடியிலிருந்து கடிதம் வந்தாலும் அவற்றைப் படித்துப் பார்த்து, தகுந்த நடவடிக்கை எடுத்தார். ஓய்வு எடுக்காத அவரது வேலை, சிந்தனை, செயல் என்று நூல் முழுக்க அவரோடு பழகிய, பணியாற்றிய, உடன் இருந்தவர்களின் நினைவு கூர்தல் நெகிழ வைக்கிறது. மிகப் பெரும் தேசத்தின் தலைவராக இருந்தும் எளிமையாக ஒரு சின்ன அறைக்குள் வாழ்ந்த அவரது பண்பு வியக்கத்தக்கது. மாஸ்கோவை நிர்மாணித்த அவருடைய திறமை போற்றத்தக்கது. வாழ்வியல் வடிவமாக, வரலாற்று முன்னுதாரணமாக விளங்கும் லெனின் காலாகாலத்துக்குமான வீரிய விதை!
RS. 70 More...by அஜயன் பாலா
வேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட 'மகர்' இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற இளைஞர்தான் அம்பேத்கராக மாறினார். வேதனையில் வெந்து நொந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் கல்வி என்ற தற்காப்பு ஆயுதம் அவர் கைக்குக் கிடைத்தது. கூரான அந்த ஆயுதம் சாதியத்தின் நரம்புகளை பதம் பார்க்கத் தொடங்கியது. இதனால், தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை என்று பிரயோகப் படுத்திக்கொண்டிருந்த சாதிய, துவேஷ சக்திகள் அம்பேத்கரை கண்டு அஞ்சத் தொடங்கின. இதுதான் சமயம் என்று உணர்ந்த அவர், தன் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக கல்வி என்னும் ஆயுதத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தினார். சட்டம் பயின்றார். பல பட்டங்கள் பெற்றார். ஆலய நுழைவு போராட்டத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து தம் மக்களின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்பினார். இந்திய அரசியல் சரித்திரத்தின் பங்கங்களைப் புரட்டும்போது அம்பேத்கரின் பெயர் இல்லாத அ
RS. 63 More...by டிராஃபிக் ராமசாமி
டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம், டிராஃபிக் ராமசாமி கைது, டிராஃபிக் ராமசாமி கோர்ட்டில் ஆஜர்... பத்திரிகைகளில் இதுபோன்ற செய்திகளை நிறைய படிக்கிறோம். பத்தோடு பதினொன்றாக அதைப் பார்த்துவிட்டு அனுதின இயக்கங்களில் கலக்கிறவர்கள் நாம். ஆனால், ‘இவர் ஏன் இப்படிப் போராடுகிறார்? இவருடைய வாழ்க்கை எப்படியானது? இவரால் எப்படி இத்தனைப் பிரச்னைகளோடு போராட முடிகிறது’ என்று எப்போதாவது நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? ஒரு நாள் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் வழியே டூவீலரில் நான். கடுமையான போக்குவரத்து நெருக்கடி. ஹாரன் சத்தங்களும் சலிப்புக் குரல்களும் சரிவிகிதக் கலவையாக இருந்த அந்த மேம்பாலத்தின் ஓரத்தில் எதையுமே சட்டை செய்யாமல் ஒரு பெரியவர் போஸ்டர் கிழித்துக்கொண்டு இருந்தார். தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்கிற எண்ணம் கூட அவரிடத்தில் இல்லை. அவர்... ராமசாமி! அவரைப் பற்றிய புத்தகத்துக்கான அவசியம் பிறந்த இடம் - கணம் அது! பிறப்பு தொடங்கி இன்றைய போராட்டங்கள் வரை சுய சரிதையாக இந்தப் புத்தகத்தில் ராமசாமி சொல்லி இருக்கும் செய்திகள் சமூக ஆர்வம்கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய பாடம். அரசியல், காவல்துறை, மீடியா எனக் கலந்துகட்டி தன் வரலாற்றைச் சொல்லி இருக்கும் விதம் அத்தனை அலாதியானது. ‘இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா?’ எனச் சிலிர்க்கத்தக்க ஒருவரின் வரலாற்றை சமூகப் போராளிக்கான சமர்ப்பணமாக வெளியிடுகிறது விகடன் பிரசுரம்!
RS. 63 More...