Cart is Empty
by கே.பி. ராமகிருஷ்ணன்
ஏழை பங்காளன், நாடிவந்தவர்க்கு நன்மைகள் பல செய்தவர், தனது நற்சிந்தனைகளாலும், பழக்கவழக்கங்களாலும் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதைத் திரைப்படங்கள் மூலமும், நிஜ வாழ்விலும் வாழ்ந்து காட்டிய வள்ளல் என எம்.ஜி.ஆர். என்கிற வார்த்தைக்கான வடிவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர். காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமல்ல... இன்றைய தலைமுறையினர் மனதிலும் அவர் பற்றிய எண்ணங்கள் நிச்சயம் நிழலாடும். சாதாரண மக்களிடமே இப்படி ஒரு பதிவை ஏற்படுத்திச் சென்ற எம்.ஜி.ஆர்., தனது நிழலாக, மெய்க்காப்பாளராக வாழ்ந்த இந்த நூலின் ஆசிரியரான கே.பி.ராமகிருஷ்ணன் அவர்களின் மனதில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. எம்.ஜி.ஆருடன் 30 ஆண்டுகள் விசுவாசமாக, பாசப் பிணைப்புடன் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர் திரைத்துறை, அரசியல், சொந்த வாழ்க்கை என பலதரப்பட்ட சம்பவங்களை தன் நினைவுப் பதிவேட்டில் இருந்து இங்கே இறக்கி வைக்கிறார். எம்.ஜி.ஆர். குறித்து இந்த நூலில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் அனைத்துத் தரப்பினருக்கும் வழிகாட்டுபவை என்பதில் ஐயம் இல்லை. ‘வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்’ என்ற திரைப்பட பாடல் வரிகளை உதாரணமாக்கி, வாழ்ந்து காட்டி சகாப்தமானவரின் சரித்திரம் அனைவரையும் நல்வழிப்படுத்தும்.
RS. 81 More...by பாண்டிராஜ்
கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்ப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. வெற்றியாளர்கள் தங்களை திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. திரைப்படத்துறைக்குள் நுழைபவர்கள் அனைவரும் திரைவானில் ஜொலிப்பவர்கள் அல்ல. திறமையும், வாய்ப்புகளும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே அவர் நட்சத்திரமாக மின்னுவார். அந்த வகையில் இயக்குநர் பாண்டிராஜ் திரைவானில் ஒளிவீசும் நட்சத்திரமாக உள்ளார். அவரது வாழ்வனுபவமே இந்த ஃப்ளாஷ்பேக். நம் பார்வையில் இருந்து மறைந்து போன டூரிங் டாக்கீஸ், வானொலி, கொரங்கு பெடல் என பல்வேறு விஷயங்களை நம் நினைவுகளில் மேலெழும்பச் செய்கிறார் பாண்டிராஜ். முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை ஒரு சினிமா இயக்கும் சிரத்தையோடுதான் ஒவ்வொரு பதிவையும் பகிர்ந்திருக்கிறார் நூல் ஆசிரியர். ‘எழுத்து என்பது தியானம் போல. அது நம்மையே நமக்கு புதியதாய் காட்டும்’ என்பதே இந்த ‘ஃப்ளாஷ்பேக்’ மூலம் நான் உணர்ந்தது என நெகிழும் பாண்டிராஜ், இந்தப் புத்தகத்தில் நம்மை பல இடங்களில் பரவசப்படுத்துகிறார். படியுங்கள்... பரவசமடைவீர்கள்.
RS. 88 More...by ஷாஜி
உயர்திணை முதல் அஃறிணை வரை அனைத்து உயிர்களையும் தன்வசப்படுத்தும் இயல்புள்ளது இசை. பண்டிதன் முதல் பாமரன் வரை ரசிக்கும், ருசிக்கும், பரவசப்படும் மகத்துவம் கொண்டது இசை. கலைகளில் ஓவியம் சிறந்ததாய் இருக்கலாம். ஆனால் இசைதான் எல்லோரையும் ஈர்க்கிறது, கேட்பவர் மனதில் இன்பத்தை வார்க்கிறது. புகழ்பெற்ற இசைப் பாடகர்களைப் பற்றி, இசையமைப் பாளர்களைப் பற்றி, இசைக் கலைஞர்களைப் பற்றி, இசைக் கலாசாரங்களைப் பற்றி, இசை வகைமைகளைப் பற்றி, சுவை குன்றாத சிறுகதைப் போக்கில் பேசுகிறது இந்த நூல். பாப் மார்லி போன்ற மேற்கத்திய இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்களின் தனித் திறன்களையும் இந்தி, தமிழ், மலையாள திரைப்பட இசையமைப்பாளர்கள் பற்றியும், பின்னணிப் பாடகர்களின் தனித்துவமான குரல் வளம் பற்றியும் விரிவாக ஆய்வு நோக்கில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் ஷாஜி. பல இசை நிறுவனங்களில் இசைப் பதிவு மேலாளராகப் பணியாற்றியபோது, தனக்கு கிடைத்த அனுபவங்களையும் தான் சந்தித்த இசை ஆளுமைகளைப் பற்றியும் சமரசம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் ஷாஜி. 2005 முதல் 2015 வரை இசை தொடர்பாக ஷாஜி எழுதிய மொத்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது! இசை மட்டுமல்ல இசை தொடர்பான சம்பவங்களும் சுவாரஸ்யமானதே... இனி இசைப் பயணத்தைத் தொடருங்கள்!
RS. 231 More...by மதுரை தங்கம்
சினிமா உலகம் விசித்திரமானது. வெற்றி - தோல்வி தொடங்கி விதவிதமான திருப்பங்கள் வரை நாம் அனுமானிக்க முடியாத சகலமும் சினிமாவில் அரங்கேறும். 35 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய விசித்திரங்களை ஒரு பத்திரிகையாளராகப் பார்த்துப் பதிவு செய்தவர் மதுரை தங்கம். நடிகர் ரஜினிகாந்த்தை முதன் முதலில் பேட்டி எடுத்த பத்திரிகையாளர். அவருடைய திரைத் துறை அனுபவத் தொகுப்பே இந்த நூல். முதன்முதலில் மதுரை தங்கத்தைச் சந்தித்தபோது, கம்பீரம் குலையாத ஒரு பத்திரிகையாளர் எப்படி இருப்பார் என்பதற்கான உதாரணமாக இருந்தார். பேச்சினூடாக அவர் பகிர்ந்துகொண்ட அத்தனை சம்பவங்களுமே சுவாரஸ்யம் மிக்கவை. இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பை அவரை அணுகிய ஒவ்வொரு சந்திப்பிலும் உணர்ந்தவன் நான். இயக்குநர் கே.பாலசந்தர் தொடங்கி நாகேஷ், ரஜினி, கமல் என திரையுலகின் உயரிய தகையாளர்களைப்பற்றி மதுரை தங்கம் விவரிக்கும் விதம் அலாதியானது; யாரும் அறிந்திராத அபூர்வமானது. நமக்கு மிகத் தெரிந்தவர்களைப்பற்றிய புத்தகம்தான்; ஆனால், மொத்தமாக இதனை வாசித்து முடிக்கையில் சம்பந்தப்பட்டவர்களின் மீதான மரியாதை வெகுவாக உயர்கிறது. கே.பி. சாரின் பகிர்வு, ரஜினியின் பணிவு, கமலின் கூர்மை, இளையராஜாவின் எளிமை, வைரமுத்துவின் நட்பு, பாக்யராஜின் உறுதி என ஒவ்வொரு பிரபலத்தைப்பற்றிய செய்திகளும் இதுவரை கேள்விப்படாதவை. அந்த விதத்தில் சுவாரஸ்யச் செய்திகளின் சுரங்கம் இந்தப் புத்தகம்.
RS. 50 More...by செல்லா
ஒரு கலைஞனின் முதல் தகுதி ரசனை. மதிக்கத்தக்க ரசனையும், அதைச் செயல்படுத்தும் திறமையும் கொண்ட அனைவருமே படைப்பாளிகள்தான். என்ன ஒன்று, வாய்ப்புக் கிடைத்தவர்கள்... வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் என்கிற வேறுபாடு மட்டும்தான். செல்லா... இதில் இரண்டாவது வகைக்காரர். அதனாலேயே வென்றவர்களின் சாகசச் சூத்திரத்தை அவர்களின் வார்த்தைகளின் வழியே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தப் பின்புலமும் இல்லாமல், வாய்ப்புக்காகப் போராடி, கிடைத்த வாய்ப்பை சரிவரப் பற்றிக்கொண்டு, தான் நேசித்த துறையில் வெற்றியடைந்த சினிமா சாதனையாளர்களின் அனுபவத் தொகுப்புதான் இந்தப் புத்தகம். கதை முதல் போஸ்டர் வரை படிப்படியாக உருவாகி கடைக்கோடி ரசிகன் வரை சென்று சேரும் சினிமாவின் அத்தனைத் தடங்களையும் அடையாளப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு. இன்றைய சினிமா குறித்தும் வெற்றிக்கான போராட்டங்கள் குறித்தும் செல்லாவிடம் சில மணி நேரங்கள் பேசிய பிறகு நான் சொன்ன வார்த்தைகள் இவைதான்... ‘‘இப்போது நீங்கள் சொன்ன விஷயங்களை வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களோடு தொகுத்து எழுதினால், நிச்சயம் ஒரு நல்ல புத்தகம் கிடைக்கும்!’’ இதோ கைகளில் தவழ்கிறது அந்த நல்ல புத்தகம். வெற்றியாளர்களின் அனுபவ முத்துக்கள் நிறைந்த இந்தப் புத்தகம், வெற்றிக்காகப் போராடும் அனைவருக்கும் நம்பிக்கையான விடிவெள்ளி! சினிமாவின் அத்தனை துறை சாதனையாளர்களின் அனுபவங்களையும் அறிவுரைகளையும் ஒருசேரச் சொல்லும் இந்தப் புத்தகம், வெற்றிக்காகப் போராடும் அத்தனை பேரின் நரம்புகளிலும் நம்பிக்கைப் பூக்கவைக்கும்!
RS. 77 More...by கே.பாரதி
நூறு வருட சினிமா வரலாற்றை அனைவரும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம் இது. நூறு வருட தமிழ் சினிமாவில் பெண்களின் பங்களிப்புக் குறித்தும் அவர்களுக்கு சினிமாவில் கிடைத்த இடம் குறித்தும் இந்தத் தருணத்திலாவது பேச வேண்டும். பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை என்பது மிகமிகக் குறைவு. பொதுவாகத் தமிழ் சினிமா, பெண்களை வணிகத்துக்காகத் தான் அதிகமாகப் பயன்படுத்திக்கொண்டு வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். 1931 முதல் 2013 வரையான காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் நிலை குறித்து இந்த நூலில் விரிவாக விளக்குகிறார் நூல் ஆசிரியர் கே.பாரதி. தேசிய இயக்க சினிமா, திராவிட இயக்க சினிமா, மிகையுணர்வு சினிமா, ‘புதிய அலை’ படங்கள், மாற்றங்களும் பின்னடைவுகளும் என்று 5 வகைகளாகப் பிரித்து அலசி ஆராய்ந்திருக்கிறார். சினிமா கண்டுபிடித்த காலத்திலிருந்து திரைப்படங்களில் கையாளப்படும் பெண் கதாபாத்திரங்களின் தன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்துப் பேசும்போது ஒவ்வொரு கருத்துக்கும் தகுந்த ஆதாரங்களைத் தருகிறார். பேராசிரியராக இருப்பதால் எளிமையான மொழி நடை நூல் ஆசிரியருக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் பெண்ணியவாதிகள் மட்டும் அல்லாமல் அனைவரும் படிக்க வேண்டும். சினிமாவில் பெண்களுக்கான முக்கியத்துவத்தையும் அவர்களுக்கான மொழியையும் உருவாக்க வேண்டும். அதற்கான முதல் படிதான் இதுபோன்ற புத்தகங்கள்.
RS. 77 More...by எம்.சசிகுமார்
புரட்டினால் புழுதி வாசம்! ‘‘நிழல் உலகப் பதிவை சுப்ரமணியபுரமாக சசிகுமார் கண்முன்னே நிறுத்தி இருக்கும் விதம் இந்திய சினிமா உலகை மட்டும் அல்ல... உலகளாவிய சினிமா பிரம்மாக்களையே மிரள வைக்கும். இந்தப் படத்தை இந்தியில் செய்யும் பாக்கியம் எனக்கு வாய்த்தால் பெருமையாக இருக்கும்!’’இந்தி சினிமாவின் அசாத்திய அடையாளமான அனுராக் காஷ்யப் வியப்பும் திகைப்புமாகச் சொன்ன வார்த்தைகள் இவை.‘சுப்ரமணியபுரம்’ திரைக்கதையை வெளியிட அனுமதி கேட்டு இயக்குநர் சசிகுமாரை ஹிμகிஷீபோது,சற்று தயங்கினார்.‘படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் புத்தகம்?’என்பது அவருடைய தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் சினிமாவின் மேன்மை மிகுந்த அடையாளம் அல்லவா சுப்ரமணியபுரம்!ஓர் இயக்குநராக,ஒரு நடிகராக,ஒரு தயாரிப்பாளராக முதல் முயற்சியிலேயே காலத்துக்கும் பெயர் சொல்லக்கூடிய உலகளாவிய பதிவை நிகழ்த்தி இருக்கிறார் சசிகுமார். 1980களின் காலகட்டத்தில் மதுரையின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாக சசிகுமார் பதிவு செய்திருக்கும் விதம், சினிமாவை வாழ்வியல் வடிவமாக எடுக்கத் துடிக்கும் அத்தனை பேருக்குமான பயிற்சி.‘80களின் கதை என்றபோது எல்லோரும் சிரித்தார்கள்’எனத் தனக்கான முதல் அடி விழுந்த நிகழ்வு தொடங்கி படத்தை வெற்றிகரமாக முடித்தது வரை சகத்தோழனாக சசிகுமார் சொல்லச்சொல்ல அத்தனை பிரமிப்பு. இயக்குநர் பாலாவின் அணிந்துரை புத்தகத்தின் மயிலிறகு பக்கம்.இயக்குநர் அமீரின் ‘சுப்ரமணியபுரம்’ படம் குறித்த பார்வையும், சசிகுமார் மீதான அளவீடும் வழக்கம்போல் புயல்.திரைக்கதையாக மட்டுமே அல்லாது படம் குறித்த விரிவான பார்வையைப் பதிவு செய்ய ‘சசிகுமார்,மிஷ்கின்,கதிர் சந்திப்பு’இந்தப் புத்தகத்தின் ரத்தினப் பக்கங்களாகப் பதிவாகி இருக்கின்றன.‘சுப்ரமணியபுரம்’ எப்போது புரட்டினாலும் புழுதி வாசம் வீசும் காலக்கல்வெட்டு!
RS. 105 More...by பஞ்சு அருணாசலம்
தமிழ் திரையுலகில், கதை கேட்பது முதல் க்ளைமாக்ஸ் காட்சியை முடிப்பது வரை எல்லாமே சகுனம் பார்த்து செய்வார்கள். அதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், கோடிகளை முதலீடு செய்யும் துறை என்பதே முக்கிய காரணம். `சகுனம் பார்ப்பது, எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனையோ என் படங்கள் பாதியில் நின்றுபோயிருக்கின்றன. அதனால் நான் எப்போதும் திறமையை மட்டுமே நம்புவேன். இந்த விஷயங்களை எல்லாம் ராஜாவிடம் சொல்லி, அவரைத் தேற்றினேன்' என்று சொன்னவர் பஞ்சு அருணாசலம். இப்பேர்ப்பட்ட பஞ்சு அருணாசலத்தால்தான் நமக்கு இசைஞானி இளையராஜா கிடைத்துள்ளார். ஸ்டுடியோ உதவியாளராகவும், பின்னர் கவியரசர் கண்ணதாசனின் கற்பனைகளை, தத்துவங்களை எழுத்தாக்கும் பணியின் மூலமும் தன் திரை வாழ்வுப் பயணத்தைத் தொடங்கி கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வெற்றி கண்டவர் பஞ்சு அருணாசலம். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் தமிழ் திரையுலகில் கோலோச்சிய பஞ்சு அருணாசலம், தன் திரைப் பயணத்தில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் பற்றி ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். அந்தத் தொடர் நூலாகியிருக்கிறது. திரைத் துறையில் ஜாம்பவனாகத் திகழ்ந்தாலும் தன்முனைப்பு சிறிதும் இல்லாமல் தொண்டராகவே வாழ்ந்த பஞ்சு அருணாசலத்துக்கு ‘திரைத்தொண்டர்' என விகடன் சூட்டிய பெயர் எவ்வளவு பொருத்தமானது என்பதை இந்த நூலைப் படிப்பவர்கள் உணரலாம்.
RS. 130 More...