Vikatan
eBooks
  • அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்
  • ஆன்மிக வரலாறு
  • தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்
  • இல்லறம்
  • இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்
  • சமூக, அரசியல் கட்டுரைகள்
  • சட்டம்
  • மருத்துவம் - ஆரோக்கியம்
  • சுட்டிகளுக்காக
  • பெண்களுக்காக
  • பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு
  • சரித்திரம்
  • வாழ்க்கை வரலாறு
  • நாடுகளின் வரலாறு
  • கதைகள், கவிதைகள்
  • விளையாட்டு
  • விவசாயம் - பிராணி வளர்ப்பு
  • ஆன்மிகம்
  • சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை
  • பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்
  • பொது
  • மொழிபெயர்ப்பு நூல்கள்
  • ஜோக்ஸ் - கார்ட்டூன்ஸ்
  • சமையல்
  • கல்வி விகடன்
  • கிராஃ பிக் நாவல்
  • விகடன் கிட்ஸ்
  • Pod
0

Cart is Empty

ஆன்மிகம்

Sort Books
  • Price: Low to High
  • Newest to Oldest
  • Oldest to Newest
  • Bestsellers
  • Items Eligible For Promo Codes
  • ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்

    by ஜே.வி.நாதன்

    இயற்கை சக்திகளான பஞ்சபூதங்களையும் தெய்வ வடிவில் வணங்கும் வழக்கம் இந்து சமயத்தின் ஆணி வேர். இந்து சமய வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுமே அறிவியல்பூர்வமானவை. நெற்றியில் திருநீறு பூசுவது முதல் தல விருட்சங்களை வலம் வருவது வரை இதில் அடக்கம். அபூர்வ மருத்துவ குணமுடைய மரம், செடி-கொடிகளை ‘தல விருட்சம்’ என்ற பெயரில் ஆலயங்களில் நட்டு வளர்த்தனர் முன்னோர். ஆலயங்களில் இருப்பதால், விருட்சங்களின் உண்மையான பலன்கள் புரியாவிட்டாலும், மக்கள் அவற்றை வழிபடுவதோடு, பாதுகாக்கவும் செய்வார்கள் என்பது நம் முன்னோர்களின் கணிப்பு! ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் - ஆகியவற்றுடன் தொடர்புகொண்ட விருட்சங்கள் உள்ள ஆலயங்களுக்கு, இந்த நூலின் ஆசிரியர் ஜே.வி.நாதன் நேரில் சென்று விரிவாக விவரங்கள் சேகரித்து இருக்கிறார். இதனை, ‘சக்தி விகடன்’ இதழில் ‘ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!’ என்ற தலைப்பில் அவர் தொடராக எழுதியபோதே, வாசகர்களிடத்தில் ஏக வரவேற்பு. அந்தத் தொகுப்பே அற்புத நூலாக இங்கே வடிவம் பெற்றுள்ளது. தல விருட்சங்கள் உள்ள ஆலயங்களின் தல புராணம், அங்கு உறைந்துள்ள தெய்வங்களின் அருட்சக்தி, விருட்சங்களின் அபூர்வ மருத்துவ குணங்கள், சங்க இலக்கியங்களில் இந்த விருட்சங்கள் இடம் பெற்றுள்ள பாடல்கள் என எதனையும் விட்டுவைக்காமல் விவரித்திருக்கும் இந்த நூல் ஓர் ஆராய்ச்சிக் கருவூலமாக பக்தர்களைப் பரவசப்படுத்தும். ஆன்மிக அன்பர்களும், மருத்துவ ஆர்வமுள்ளவர்களும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்த நூல்!

    RS. 88
    More...
  • கொல்லிமலை சித்தர்கள்

    by கே.ராஜாதிருவேங்கடம்

    மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படுத்தும் கொல்லிமலையை ‘சித்தர்களின் சொர்க்க பூமி!’ என்றால், அது மிகையல்ல. உலக வாழ்க்கையை, ஏழு வகையான கோட்பாடுகளின் அடிப்படையில் வாழ்ந்து, மனித வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தன் நிலையை மறவாது, அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மண்ணுலக உயிர்களுக்கு உதவிகள் பல புரிபவர்கள்தான் சித்தர்கள். கொல்லிமலையை இறுக தழுவியபடி காட்சி அளிக்கும் வனத்தில் வாழ்ந்த அகத்திய சித்தர், பாம்பாட்டிச் சித்தர், கடுவெளி சித்தர்... போன்ற பல்வேறு சித்தர்களின் வரலாறு, அவர்களின் ரசவாத சிறப்புகள், அற்புத நிகழ்வுகள், மக்கள், இயற்கை சக்திகளின் வழியில் வாழ்வதற்கான நெறிமுறைகள்... என சித்தர்களின் பல்வேறு சிறப்புகளும் இந்த நூலில் காட்சிகளாக விரிகின்றன. மேலும், கொல்லிமலைக்குச் செல்வோர் அங்கு காண வேண்டிய இடங்கள், கோயில்கள், படகுத் துறை, அதற்கான பயணக் குறிப்புகள், மலைவாழ் மக்களின் பழக்கவழக்கங்கள்... என கொல்லிமலையின் அற்புத அமைப்பையும் எளிமையான நடையில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் ராஜாதிருவேங்கடம். அற்பத்தனமான செயல்களுக்காக ஆத்ம அமைதியை விற்றுவிட்டு, அனுதினமும் ஆண்டவனை தேடுகிறது இன்றைய உலகம். ஆம்! புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொண்டு பொக்கிஷ வாழ்க்கையைத் தொலைத்தபடி நிற்கும் மக்களை, தெளிவான பாதையில் அழைத்துச் செல்கிறது இந்த நூல். சித்தர்கள், ஆராய்ச்சி அடிப்படையில் அனுபவபூர்வமாக உணர்ந்த விஷயங்களையே மருத்துவக் குறிப்புகளாக கொடுத்திருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு.

    RS. 74
    More...
  • நினைத்தால் நிம்மதி

    by தென்கச்சி கோ.சுவாமிநாதன்

    “ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் புரியும்படியாகச் சொல்லுங்கள். நீங்கள் எதையும் எளிதாகச் சொல்லி புரியவைப்பவர் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் உங்களிடம் கேட்டேன்!” “பெரிய ஆளப்பா நீ. சரி, சொல்கிறேன்... இதென்ன?” “வெண்ணெய்!” “சரி... இதோ இந்தப் பாலில் அது எங்கே இருக்கிறது?” “.......” “அதான்! இப்படித்தான் இறைவனும் பாலில் வெண்ணெயைப் போல நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறார். சரி! இந்த வெண்ணெயைப் பாலிலிருந்து எப்படி எடுப்பார்கள்?” “மத்தால் கடைந்து எடுப்பார்கள்.” “அந்த மத்துதான் ஆன்மிகம்!” என்றார். ஆன்மிகத்தின் மிகச் சிக்கலான பல்வேறு விஷயங்களை எளிதாகச் சொல்வதென்பது சிலருக்குத்தான் வரும். அந்தக் கலையில் கை தேர்ந்தவர் இந்த நூலின் ஆசிரியர் தென்கச்சி கோ.சுவாமிநாதன். சின்னச்சின்ன கதைகளின் மூலம், இந்த நூலில் ஆன்மிகத்தை எளிதாக்கித் தந்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். ‘சக்தி விகடன்’ இதழ்களில் (ஜனவரி 2007

    RS. 70
    More...
  • தேவி தரிசனம்

    by வி.ராம்ஜி

    நம் பாரம்பரியத்தில் பெண்களுக்குத் தனி மரியாதை கொடுக்கிறோம். அதற்குக் காரணம், ஒரு குடும்பத்தின் அருமை, பெருமை, இன்பம், உற்சாகம் எதுவாக இருந்தாலும் அதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. எனவேதான், பெண்களுக்குத் தனி அந்தஸ்தைக் கொடுக்கிறோம்; முன்னுரிமை அளிக்கிறோம். பெண்களை, சக்தியின் சொரூபமாகவே பார்க்கிறோம். வழிபாட்டிலும் அதைக் கடைப்பிடிக்கிறோம். சக்திக்கு நம் தேசம் முழுவதும் எண்ணற்ற தலங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை தேவி, காளி, துர்கா, கௌமாரி, முத்துமாரி என பல்வேறு பெயர்களில், பல ஊர்களில் அம்மனுக்கு ஆலயங்கள் உள்ளன. திருமண வரம் வேண்டும், குழந்தை வரம் வேண்டும், தீராத நோய் தீர வேண்டும், எண்ணிய செயல் ஈடேற வேண்டும்... என்று பல கவலைகளோடு வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன் ஆலயங்கள் ஏராளம். அவற்றில், மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, மிகவும் பழமை வாய்ந்த, சிறப்பு வாய்ந்த கோயில்கள் பல பிரசித்தமானவை. அப்படிப்பட்ட ஆலயங்களில் வீற்றிருக்கும் தேவியரின் சிறப்புகளையும், தலபுராணம், ஆலயத்தின் அமைப்பு, ஆலயம் இருக்கும் இடம், நேர்த்திக்கடன் செய்வது... போன்ற தெளிவான தகவல்களோடு, சக்தி விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். பூச்சொரிதல், காப்புக்கட்டுதல், தேரோட்டம், தீர்த்தவாரித் திருவிழா போன்ற வைபவங்கள் குறித்த தகவல்களும் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் படிப்பதற்கு மட்டுமல்ல, நேரில் சென்று தரிசிக்கவும் வழிகாட்டக்கூடிய அற்புதமான நூல்.

    RS. 67
    More...
  • சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை

    by முத்தாலங்குறிச்சி காமராசு

    உடலை இதமாக்கும் காற்று, மனதை லேசாக்கும் பேரமைதி, நீர்க்கோடுகளாக பாறைகளைத் தழுவி விழும் அருவிகள் என உற்சாகம் தரும் அழகு ஒரு புறம் நம்மை வரவேற்க... உலகின் ஆரோக்கியத்துக்கு எனப் பிறப்பெடுத்த மூலிகை வளங்கள், காய்கள், கனிகள், அரிய வகை விலங்குகள், வண்ண வண்ணப் பூச்சிகள் என பிரமிக்கவைக்கும் இயற்கைச் செல்வங்கள் ஒரு புறம் நம்மை உற்சாகப்படுத்த... தென்றல் தோன்றும் இடமான, உலகின் தலையாய மலையான பொதிகை மலை நம்மை அழைக்கிறது! ஆம்... வாழ்க்கையில் ஒரு முறையாவது பொதிகை மலைக்குச் சென்றுவர வேண்டும் என கனவு கண்டுகொண்டு இருப்பவர்களை வரவேற்கக் காத்திருக்கிறார், அந்த மலையில் தவம் புரியும் மாமுனிவர் அகத்தியச் சித்தர்! ஆதிகாலத்தில் தீக்கங்குகளாக இருந்த இந்த உலகம், முதன் முதலில் குளிர்ந்து, சாம்பல் பூத்து, மண் தோன்றி, கல்தோன்றி, தாவரங்களோடு செந்தமிழும் தோன்றிய இடம், சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! தென்றல் காற்றில் இசையைக் கற்ற, நீர்வீழ்ச்சிகளின் தாலாட்டில் நடனத்தைக் கற்ற, மரங்களின் அசைவில் பேசக் கற்ற பழங்குடிகள் வாழும் பொதிகை மலையைப் பற்றியும், அங்கு அகத்தியப் பெருமான் ஆட்சி செய்யும் அழகைப் பற்றியும் அழகான ஏறு நடையில், அற்புதமான யாத்திரை மொழியில் வர்ணித்து எழுதி இருக்கிறார், நூல் ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு. பழந்தமிழ்க்குடி மக்களான காணிகள் வாழும் சோலை வனம், பாணதீர்த்தம், யானை மிரட்டல், அட்டைக்கடி, குளிர் மேகத் தாலாட்டு, வழுக்குப் பாறை, சித்தர்களின் வாழ்க்கை ரகசியம், அகத்தியருக்குப் பூஜை செய்வது, அவரது அருள்பெற்று கண்ணீர் சொரிவது வரை அவ்வளவு காட்சிகளும் மனதைவிட்டு அகலாத பதிவுகள். மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து, பொதிகை மலைக்கு யாத்திரை செல்லத் தூண்டும் காட்சிகள்! இந்த நூலைப் படித்தால், பூலோக கைலாயத்துக்குச் சென்றுவந்த திருப்தியும், சந்தோஷமும் நிச்சயமாகக் கிடைக்கும்!

    RS. 112
    More...
  • சிறகை விரி, பற!

    by பாரதி பாஸ்கர்

    மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெறும் பாரதி பாஸ்கர், தன் வாழ்வியல் பகிர்வாக & பிறர் வாழ வேண்டிய பக்குவமாக ஆன்மிகத்தின் வழிநின்று சொல்லும் பாடங்களே இந்த நூல். நம் நெஞ்சத்துள் நன்னெறிக்கான பாதை போடும் பணியை பாரதி பாஸ்கரின் எழுத்துகள் செவ்வனே செய்திருக்கின்றன. வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கும் பாரதி பாஸ்கர், ‘சிறகை விரி, பற!’ எனும் இந்த நூலில் புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், சிறு வயதில் தான் உற்று, உணர்ந்த பக்தி அனுபவங்கள், படித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு அன்றாடம் நடக்கும் இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு மிக அற்புதமான விஷயங்களைத் தோரணமாகப் படைத்திருக்கிறார். குறிப்பாக அனுமன் ராமனிடம் ‘கண்டேன் சீதையை’ எனச் சொன்னது, ஔவையார் வாழ்த்தும்போது ‘வரப்புயர’ என வாழ்த்தியது, மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டது, கண்ணதாசன் கம்பன் விழாவுக்குத் தாமதமாக வந்தது, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தைக் கவிழ்த்த இன்றைய நிகழ்வு வரை பாரதி பாஸ்கரின் பார்வையும் பதிவும் அதியற்புதம்! எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகத்தானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வாழ்த்துரை வழங்காத ரஜினிகாந்த், இந்த நூலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இதயம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த நூலின் அற்புதத்தைச் சொல்ல ரஜினியின் பாராட்டே போதுமானது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் அணிந்துரை இந்த நூலுக்குக் கூடுதல் அழகு! விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகும் பாரதி பாஸ்கரின் இரண்டாவது நூல் இது. காற்றின் போக்கில் மிதக்கும் பறவையின் இறகாக எல்லோருடைய மனதையும் ஈர்க்கக்கூடிய பாரதி பாஸ்கரின் எழுத்து நடை, இன்னும் பல நூல்களை வாசக உலகுக்கு வழங்கட்டும்!

    RS. 56
    More...
  • கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்

    by வேளுக்குடி கிருஷ்ணன்

    ‘கண்ணனை நினைக்காத நாளில்லையே...’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப, கண்ணனைப் போற்றும் கதைகளை கண்ணனின் குணாதிசயமான சுறுசுறுப்போடும் துறுதுறுப்போடும் குதூகலத்தோடும் விளையாட்டு போல் எளியவரின் பக்தியாக உருக வைக்கும்படி அழகாகச் சொல்கிறது இந்த நூல். படிக்கப் படிக்க விறுவிறுப்பும் பக்திப் பரவசமும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. சகல புண்ணியங்களும் பெற வேண்டுமென்றால் பகவானின் திவ்விய நாமங்களைச் சொன்னாலே போதும் என்கின்றன புராணங்கள். கண்ணனின் திருநாமங்களுக்கு அத்தனை வலிமை உண்டு. அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, ‘பீஷ்மர் ஒரு ஞானசக்தி. அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்’ என்று சொல்லும் கண்ணன், அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன். பெருங்கருணை, ஜோதி வடிவமே பகவான், எமதருமனின் கனிவு, ஹரி... ஹரி.., திருமாலின் திருமேனி, வரம் தருவாய் வாசுதேவா.., கண்ணனின் விளையாட்டு, கட்டுண்டு கிடந்த கண்ணன், யமுனை ஆற்றிலே..! கண்ணன் இருக்க கவலை எதற்கு? மானம் காப்பான் தோழன்... என்று அவனுடைய ஒவ்வொரு திருநாமமும் கடலளவு தண்ணீரை அப்படியே உள்ளங்கைக்குள் அடக்கிவிடுகிற சாதுர்யத்துடன், வாழ்வின் உயரிய கருத்துகளை, மிகப் பெரிய குணத்தை நமக்கு உணர்த்துகிறது. அத்தகைய பரவசத்தோடு சக்தி விகடனில் வேளுக்குடி கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஓவியர் மாருதியின் வண்ண ஓவியங்கள் உயிரோட்டமாக நடமாடுகின்றன. கண்ணனின் நாமங்களைச் சொல்லும் இந்த நூல், வாசிப்போரின் மனசை தாமரையாகப் பூரிக்க வைக்கும்.

    RS. 81
    More...
  • மெய்ப்பொருள் காண்பது அறிவு

    by கே.நிறைமதி அழகன்

    மனிதன் அதிகம் யாசிப்பது நிம்மதி என்ற பெரும்பேற்றைத்தான். அதற்காக மனிதன் நோக்கிச் செல்லும் மார்க்கம் அவனுக்கு பெருவாழ்வை அளிக்கிறதா? மதங்களைக் கடந்த மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டுமா? அத்தகைய பெருவாழ்வு சாத்தியம் என்கிறது மெய்வழிச்சாலை. புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் வழியில் இருக்கும் அன்னவாசல் கிராமத்தில் இருந்து வடக்கே 5 கி.மீ-ல் இருக்கிறது இந்த மெய்வழிச்சாலை. இந்த மெய்வழிச்சாலை என்பது மதமா? ஆம், இது எம்மதமும் சம்மதம் எனும் ஒரு மார்க்கம். திரு. காதர் பாட்சா என்பவர் 1922-ல் ஆரம்பித்த மார்க்கம் இது. பல சமய நெறிகளைப் பின்பற்றி, உருவ வழிபாட்டை மறுக்கிறது மெய்வழிச்சாலை. ஐந்து வேளை இறைவனை கும்பிடுதல் அல்லது தொழுதல் இங்கு நடக்கிறது. தலையில் தலைப்பாகை கட்டிக்கொள்வது, பஞ்சகச்சம் அணிந்து கொள்வது, பெண்கள் தலையில் முக்காடு போட்டுக்கொள்வது போன்ற சமய சடங்குகள் நிறைந்துள்ளன. இந்த மதத்தை தோற்றுவித்த ஸ்தாபகரை ‘சாலை ஆண்டவர்’ என மெய்வழி அன்பர்கள் அழைக்கிறார்கள். இவருக்கு பல அதீத சக்திகள் நிறைந்திருந்ததாக நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பல்வேறு அதிசயங்களைச் செய்த சாலை ஆண்டவர் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் இவர் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியவர். ஜீவசமாதி அடைந்த இவரை பின்பற்றுபவர்கள் மெய்வழிச்சாலையை வழிநடத்துகிறார்கள். மெய்வழிச் சாலை சடங்குகளும், சம்பிரதாயங்களும் புதிராகவே உள்ளன என்று சொல்பவருக்கு இந்த நூலில் விளக்கம் சொல்கிறார் நூலாசிரியர் கே. நிறைமதி அழகன். மெய்வழிச் சாலையின் தகவல்களை அறிந்து கொள்ள... பக்கத்தைப் புரட்டுங்கள்.

    RS. 60
    More...
  • பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை

    by லதானந்த்

    ஆன்மிகப் பயணம் என்பது கோயில், மகான்களின் சமாதி ஆகியவற்றை தரிசிப்பதுடன் பயணமும் செய்வது. இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. கோயிலுக்குச் செல்வது வரை புது இடத்தில் பயணம் செய்வது; அதில் பெறும் அனுபவம். பிறகு கோயிலின் தல வரலாறு, தல விருட்சம் விக்கிரகங்களின் விசேஷங்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டு மன நிறைவுடன் ஆண்டவனை தரிசிப்பது. போய் வந்த பிறகு இதைப் பார்க்கவில்லையே என்று வருந்தாமல் பார்த்துவிட்டு வருவது. வட நாட்டில் விஷ்ணு கோயில்களைப் பற்றி & குறிப்பாக வைணவ திவ்ய தேசத் திருத்தலங்களைத் தரிசித்ததைப்பற்றிய பயணக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் லதானந்த். பயணம் செல்லும் அனுபவம், கோயில்களை தரிசிக்கும் அனுபவம் ஆகிய இரண்டு விஷயங்களையும் இதில் அடக்கியிருக்கிறார். கோயில் சிறப்புகளும், பயணங்களில் ஏற்படும் திடீர்த் திருப்ப அனுபவங்களும், அவற்றைத் தவிர்க்கும் விளக்கங்களும் இந்த நூலில் இருக்கின்றன. அந்தந்த ஊர்களின் வழக்கு, சிறப்பு, ஊர்ப் பெயர் வந்த காரணம், முக்கியமான பெரிய ஊர்கள் அருகில் இருந்தால் அவற்றிலிருந்து தரிசிக்கும் தலம் எவ்வளவு தொலைவில், எந்தத் திசையில் இருக்கிறது போன்ற அவசியமான பல தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் ஏற்படும் தொல்லைகள் குறித்த தகவல்கள் பயனுள்ளவை. குரங்கு, மற்ற மிருகங்களின் தொல்லை, மனிதத் தொல்லை, நில அமைப்பால் ஏற்படும் தொல்லை ஆகியவற்றையும் அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகளும் உள்ளன. சக்தி விகடனில் வெளிவந்த தொடர் இப்போது நூல் வடிவில் வந்திருக்கிறது. வட நாட்டுக் கோயில்களைத் தரிசிக்க விழைபவர்களுக்குப் பயனுள்ள வழிகாட்டி. இதிலுள்ள நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டால் அதிகத் தொல்லை இல்லாமல் வட நாட்டு யாத்திரை செய்யலாம்!

    RS. 63
    More...
  • முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

    by வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

    சுப்பிரமணியன், வேலவன், முருகன் & தமிழ் கொஞ்சும் நாமங்கள். முருகன் தமிழரின் கடவுள். தமிழர்க்குக் கொஞ்சம் தோழனான கடவுள். மற்றக் கடவுளர்களிடம் பக்தர்களுக்குக் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருக்கும். ஆனால், அழகன் முருகனிடம் தோழமை கலந்த மரியாதை இருக்கும். மந்திரப் புன்னகை தவழும் முருகனை பக்தர்கள் ஐம்புலன்களால் அனுபவித்து பரவசமடைகிறார்கள். அந்த தெய்வத்தின் மேல் பரவசம் கொண்ட, வேறு எந்தச் செல்வத்தையுமே பெரிதாக நினைக்காத பல அடியவர்கள், பக்தர்கள், முனிவர்கள், ஞானிகள் ஆகியோரின் வாழ்வில் நடந்தவற்றை இந்த நூலில் சுவைபட விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் ரா.கிருஷ்ணன். நக்கீரர், ஔவையார், முசுகுந்தர், நல்லியக்கோடார், சேந்தனார், அருணகிரிநாதர், குமரகுருபரர், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், பகழிக்கூத்தர், முத்துசாமி தீட்சிதர், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், நம் சம காலத்தவரான திருமுருக கிருபானந்தவாரியார் போன்ற ஏராளமான அடியார்களின் வாழ்க்கைச் சம்பவங்களை நூல் ஆசிரியர் விவரித்துள்ளார். இதில் இவர்கள் பத்தி செலுத்தியதை பிரதானப்படுத்துதோடு நின்று விடாமல் இவர்கள் பக்தியின் மகிமையையும் உயர்வையும் உலகத்தவர் புரிந்துகொள்ள முருகனே நேரில் வந்து இவர்களுக்குக் காட்சி கொடுத்ததையும், அடியவர்களுக்கு உதவுவதற்காக மற்றவர்களுக்கு செய்தி அறிவித்ததையும், கனவை, கனவுதானே என்று நாம் அலட்சியப்படுத்தாமல் இறைவனுடன் தொடர்புகொள்ள ஒரு பாலமாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக அடியவர்கள் கனவில் வந்து முருகன் அருள் செய்ததையும் அழகாக விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழில் பல அழகிய, அருமையான துதிப் பாடல்களைப் புனைய வைத்திருக்கிறான் செந்தில் குமரன். சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்த நூல் முருகனின் தெய்வ சக்தியை உணர்ந்து அவனுடன் உறவாட வைக்கும் என்பது திண்ணம்.

    RS. 105
    More...
  • 1
  • 2 
  • 3 
  • 4 
  • »
  • Last

© vikatan 2020. All Rights Reserved. Ananda Vikatan Digital Private Limited