Cart is Empty
by ரேவதி சண்முகம்
இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு. 'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் கருதாமல், நாக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இங்கே ஏராளம்! திருநெல்வேலி என்றால் அல்வா, மதுரை என்றால் புட்டு, திருவையாறு என்றால் அசோகா, கொல்கத்தா என்றால் ரஸகுல்லா என்று ஊர்களையே உணவுப் பொருட்களோடு தொடர்புபடுத்தி நினைவுகூர்கிற ரசனைக்காரர்கள் நாம். பெண்களும் வேலைக்குச் செல்கிற அவசர உலகத்தில் சமையல் அறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. அதற்கு ரேவதி சண்முகம் சொல்கிற பதில்தான் அவரது சமையல் குறிப்புகள். மிகவும் எளிய முறையில், செலவு அதிகம் பிடிக்காத வகையில் ரேவதி சண்முகத்தின் குறிப்புகள் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. இவரது முந்தைய புத்தகமான 'முப்பது நாள் முப்பது சமைய'லுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது வாசகர்கள் எந்த அளவுக்கு வெரைட்டி பிரியர்களாக இருக்கிறார்
RS. 154 More...by ரேவதி சண்முகம்
நமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான பிரியாணி, முகலாயர்களின் வழி வந்தது என்றாலும், அது இப்போது நம் பாரம்பரியத்தோடு ஒன்றிவிட்டது. இந்தியர்கள் சுவைமிக்க எந்த உணவையும் கலாசார பாரம்பரியத்தோடு இணைத்தே பார்ப்பார்கள் என்பதற்கு, விழாக்காலங்களில் அதிகம் சமைக்கப்படும் பிரியாணியே சிறந்த உதாரணம். வட இந்தியர்கள், ஏன் வெளிநாட்டுப் பயணிகளேகூட தமிழகம் வரும்போது இட்லி _ சட்னி, சாம்பாரை சுவைக்காமல் செல்வதில்லை. மதுரை, சென்னை போன்ற நகரங்களில் இட்லிக்கு என்றே தனி கடைகள் இயங்குவதுகூட பேறு பெற்ற இட்லியின் வான் அளாவிய பெருமைதான். இங்கு, இட்லியைக் கண்டுபிடித்தது நம்மவர்களே என்று நினைவு கூறி பூரிப்பு கொள்வோம். ஆனாலும், தினம்தினம் காலை என்ன டிஃபன் செய்வது, மதியம் என்ன குழம்பு வைப்பது, அதற்கு சைட்&டிஷ் என்ன செய்யலாம் என்று நாள்தோறும் மண்டையைப் போட்டு கசக்கிப் பிழியும் பெண்கள் ஏராளம். அவர்களுக்காகவே ‘அவள் விகடன்’ ஒவ்வொரு இதழோடும் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகத்தின் சமையல் குறிப்புகளை தனி இணைப்பாக வழங்கி வந்தது. அப்படி தொடர்ந்து பத்து இதழ்களில் பிரியாணி, சப்பாத்தி, இட்லி என்று பத்து வகை உணவுகள், ஒவ்வொரு உணவும் 30 வெரைட்டிகளில் செய்வது குறித்து வெளிவந்த சமையல் குறிப்புகள், பெண்கள் மட்டுமல்ல மனைவிக்கு சமையலில் உதவத் துடிக்கும் ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பத்து வகை உணவின் செய்முறை விளக்கங்களும் நாவிற்கு சுவை தரும். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். உணவில் பக்குவத்தையும் பாங்கையும் விரும்புகிற உங்களுக்கு இந்நூல் ஒரு சமையல் வரம்தான். இனி ஒவ்வொரு நாளும் உங்கள் சமையலறை கமகமக்கப் போகிறது... நா சப்புக்கொட்டப் போகிறது..!
RS. 119 More...by பத்மா
சமையல் என்றதும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அதிலும் பலவித நுணுக்கங்களும், ஃபார்முலாக்களும் உள்ளன. அதன்படி செய்தால்தான் சுவையான உணவை நாம் சமைக்க முடியும். உலகின் எந்த இடத்துக்கு போனாலும் சமைப்பதற்கும் சமையல் வல்லுநர்களுக்கும் உள்ள வரவேற்பே தனி. மனிதனை ஈர்க்கக்கூடிய விஷயங்களில் நாவுக்கு சுவைகூட்டும் சமையல் மனதுக்கும் மகிழ்ச்சியூட்டும் தன்மை கொண்டது. இது நம்மில் பலர் அனுபவபூர்வமாக உணர்ந்த ஒன்றாகவே இருக்க முடியும். சமையலில் அசைவம் சைவம் மட்டுமே முதன்மைப் பிரிவுகளாக நம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அதில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. பெரிய பெரிய ஓட்டல்களுக்குப் போனால் உணவு வகைகள் நம்மை பிரமிக்கச் செய்துவிடும். அத்தனை வகைகள் அங்கே நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அத்தனை வகைகளையும் நாம் வீட்டில் சமைக்க முடியாவிட்டாலும் ஒரு சில வகைகளை நாமே வீட்டில் தயார் செய்ய முடியும். நம் குடும்ப உறுப்பினர்களை மகிழ்விக்க சில நேரங்களில் சுவையான உணவு வகைகள்கூட பேருதவியாக அமைவதுண்டு. நாமும் மகிழ்ந்து நம்மைச் சேர்ந்தவர்களையும் சுலபமாக மகிழ்விக்க சுலபமான வழி சுவையான சமையல் என்றுகூடச் சொல்லலாம். ஒருபுறம் ஆண்கள் புகழ்பெற்ற செஃப்களாக வலம் வர, மறுபுறம் ‘சமையலே தெரியாதே’ என்று கூறும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுவரை எப்படி இருந்தாலும் இனி உங்களுக்குக் கவலை இல்லை. வித விதமான வகைவகையான சமையல் முறைகளைத் தாங்கி ‘அவள் விகடன்’ இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த அருமையான சமையல் குறிப்புகள் உங்களுக்கு உதவவுள்ளன. அப்படி வந்த இணைப்பு நூலில் இருந்து அறுசுவை விருந்து படைக்கும் அற்புத முயற்சியாக, அழகான தொகுப்பாக சில குறிப்பிட்ட சமையல் வகைகளைத் தேர்ந்தெடுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இணைப்பு நூலாக வந்தபோது, ‘நங்கநல்லூர் பட்ஜெட் பத்மா’ என்ற பட்டப் பெயருடன் எழுதிவந்தவரின் சமையல் குறிப்புகளின் தொகுப்பே இந்த நூல். கிராமியச் சமையல், அவசரச் சமையல், கல்யாணச் சமையல், சிக்கனச் சமையல் என வகைப்படுத்தப்பட்ட அசத்தலான இந்த சமையல் நூல் இல்லத்தரசிகளுக்கு இனிய வரப்பிரசாதம்.
RS. 67 More...by சௌபர்னிகா
உடல் வளர்த்தேன்…உயிர் வளர்த்தேனே.. என்கிறார் திருமூலர். உயிர் தங்கியுள்ள உடல் பிரதானம் என்பதால் இவ்வாறு சொல்கிறார் அவர். உயிரைத் தாங்கும் உடலுக்கு வலு சேர்ப்பது எவ்வாறு? உணவே மருந்து… உணவே மருத்துவர். ஆம். நம் சமையலறை நமக்கு வழிகாட்டுகிறது. நம் உடலைப் போற்றிட.. உயிரை வளர்த்திட உதவுகிறது. எப்படி? நாம் அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே அவற்றை ஊட்டச்சத்தாக உண்பது எப்படி என்பதை இந்த நூல் நமக்கு விவரிக்கிறது. நாம் தினந்தோறும் உணவில் பயன்படுத்தும் கொத்தமல்லி, சமைத்த உணவுகளை அழகுபடுத்த, அலங்காரம் செய்ய மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் கொத்தமல்லி ஒரு மூலிகை. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளை கொத்தமல்லி தடுக்கிறது. மேலும் முக்கியமாக, கொத்தமல்லி ஆரோக்கியமான கொழுப்பு அளவுகளை (HDL) உயர்த்த உதவுகிறது, கொத்தமல்லியின் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றான ‘சிட்ரோன்னிலல்’ ஒரு சிறந்த கிருமி நாசினி, நுண்ணுயிர்க் கொல்லி, இது வாய் புண்களை வேகமாக ஆற்ற உதவுகிறது. இதைப்போன்று புதினா, கறிவேப்பிலை போன்றவைகளை சமையலில் எந்தெந்த விதத்தில் சேர்க்கலாம்? எப்படி சாப்பிடலாம்? என்பதை விளக்குகிறார் நூலாசிரியர். இதுமட்டுமல்ல, மாம்பழத்தை எப்படி சமையலில் உணவாக பயன்படுத்துவது? அதன் சத்துக்களை முழுமையாகப் பெறுவது எப்படி? என்பன போன்ற உணவு வகைகள் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை தரும் நன்மைகள் பல. வெந்தயம் குறிப்பாக, LDL என்ற கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதிலுள்ள ‘ஸ்டீராய்ட் சபோனின்’ ரத்தம் கொழுப்பை உறிஞ்சிக்கொள்வதை தடுக்கிறது. இதில் அதிகமாக உள்ள பொட்டாசியம் உடலில் சோடியம் செயல்திறனைக் குறைப்பதன் மூலம் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது என்பன போன்ற 60 ஆரோக்கியமான ரெசிபிக்களை அள்ளித் தந்திருக்கிறார் நூலாசிரியர். ஆயிரம் பிறைகண்டு ஆரோக்கியமாக வாழ... உங்கள் சமையலறைக்கு சக்தி கொடுக்க பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 95 More...by ஜெயஸ்ரீ சுரேஷ்
கோடை, மழை, குளிர், பனி என காலங்களுக்கு ஏற்ப உணவு முறைகள் மாறுகின்றன. என்றாலும் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பது என்பது எல்லாக் காலங்களிலும் அம்மாக்களுக்கு சவாலான விஷயமே! குழந்தைக்கு பால் கொடுப்பது முதற்கொண்டு காய்கறிகள், கீரைகள், பழங்கள், கிழங்குகள் என சத்தான உணவுகளை சுவையாக சமைத்தாலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவை கண்டுபிடிக்க ஒவ்வொரு தாயும் குழந்தைகளின் மூளைக்குள் புகுந்து யோசிக்க வேண்டியிருக்கிறது. அப்படி யோசித்து, தயாரித்து - பள்ளிக்குச் செல்லும் பிள்ளைக்குக் கொடுத்தனுப்பினால் அவர்கள் திரும்ப அப்படியே கொண்டு வரும்போது அதைப்பார்த்து கோபப்படுவதா, பிள்ளை சாப்பிடவில்லையே என வருத்தப்படுவதா அல்லது சுவையாகக் கொடுக்கவில்லையோ என குழம்பி நிற்கிற நிலைமைதான் ஒவ்வோர் அம்மாவுக்கும். அப்படிப்பட்ட அம்மாக்களின் கவலையைப் போக்கி, காலை உணவு, மதிய உணவு, மாலை நேரச் சிற்றுண்டி என மூன்று வேளையும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு என்ன பிடிக்கும்? குடிப்பதற்கு என்ன பிடிக்கும்? என யோசித்து, குழந்தைகள் விரும்பும் வகையில் உணவு வகைகளைத் தயாரிக்கும் முறைகளைக் கூறுகிறார் நூலாசிரியர். இந்த உணவு வகைகளை ஆறு வயது முதல் இருபது வயதினர் வரை அனைவரும் விரும்பி உண்ணலாம் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். எல்லா வகை சத்தான பொருட்களையும் இணைத்து, குழந்தைகள் சாப்பிட மறுக்கும் பீட்ரூட்டை தோசையுடனும், கீரையை பூரியுடனும், முட்டைக்கோஸை வடையுடனும் வெண்டைக்காயை மசாலாவுடனும் இணைத்து, வெஜிடபுள் ராப்ஸ், சாக்லேட் பான் கேக், பிஸ்கட் மில்க் ஷேக், புராக்கோலி பனீர் பரோட்டா, ஃப்ரூட் பேல் பூரி, உருளைக்கிழங்கு முறுக்கு, ரோஸ் குல்கந்த் லஸி என குழந்தைகளைக் கவரும் விதத்தில் சொல்லியிருப்பது நூலின் கூடுதல் சிறப்பாகும். சத்தான உணவை குழந்தைகள் சுவைத்து சாப்பிட்டால், தாய்மார்கள் அடையும் திருப்தியை விட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்?
RS. 98 More...by சீதா ராஜகோபாலன்
காலங்காலமாக நம் முன்னோர்கள் பாரம்பர்யமாக கடைப்பிடித்து வந்த கலாசாரங்களை இக்கால தலைமுறையினரின் வாழ்வியலில் காண்பது அரிதாகி வருகிறது. அக்கலாசாரங்களில் ஒன்றுதான் பண்டிகைகள். நம் வாழ்க்கை நெறிகளில் இன்றியமையாதது, தலையாயது இறைவனை வழிபடுவதாகும். இப்படி இறைவனை வணங்க விசேஷ நாட்களை நியமிப்பதே பண்டிகைகள் ஆகும். நாள் நட்சத்திரங்களின்படி விசேஷ நாட்களின் சிறப்பையும் இப்பண்டிகைகள் உணர்த்துகிறது. பண்டிகை காலங்களின் விசேஷமே எல்லா நலன்களும் அருளி, வாழ வழி செய்யும் இறைவனை வணங்கி, அந்நாளில் பல்வேறு சுவைகளில் சமைத்து உணவுகளை பரிமாறி பூஜித்து, உறவினர்களோடு இணைந்து கொண்டாடுவதே. ஆனால், இன்றைய வேகத்தடையில்லா கால ஓட்டத்தில் பண்டிகைக் காலங்களில் பலகாரங்களை வீடுகளில் செய்யும் முறைகள் மாறி, கடைகளில் வாங்கி கொண்டாடும் பழக்கம் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. இந்துக்கள் பாரம்பர்யமாகக் கொண்டாடி மகிழ்ந்த பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகளை இந்நூல் விளக்கிக் காட்டுகிறது. அந்நாட்களில் எவ்வகை பலகாரங்களை செய்து, எவ்விதத்தில் இறைவனுக்கு வழிபாடு செய்ய வேண்டுமென்பதை இந்நூலில் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயறுவகைகள் ஆகிய உணவு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சுவையாக பொறியல், கூட்டு, பச்சடி, மசியல் போன்ற பலவிதங்களில் சமைக்கும் முறையை அறிந்து கொள்ளலாம். பலருக்கும் பயன்படும் வகையில் பாரம்பர்யத்துடன் வெளிவரும் இந்தப் புத்தகம் எல்லோருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என்பதே இந்நூலின் சிறப்பாகும்.
RS. 88 More...by கே.ஸ்ரீதர்
ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் அற்புத கலை சமையற்கலை என்றால் அது மிகையாகாது. சுவைக்க தெரிந்த நாவுக்குத் தேவை ருசி. ருசிக்க, ரசிக்க வைக்கும் சமையலில் எத்தனை வகைகள்! சுவையான சமையல் எப்படி இருக்க வேண்டும்? உடம்பை கெடுக்காததாக இருக்க வேண்டும். இதுதானே நமது விருப்பம். நவநாகரீக உலகில் உணவுப்பிரியர்கள் வகைவகையான உணவுகளைத் தரும் ஓட்டல்களை நோக்கி படையெடுக்கும் காலம் இது. ஓட்டல் உணவுகள் உடல் நலத்துக்கு நன்மை செய்யுமா? ஆனால், வகைவகையான சமையல்களை வீட்டில் எப்படி சமைத்து சாப்பிடுவது? அதுவும் ருசியாக... இதோ உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். சமையற் கலையில் கைதேர்ந்த ஞானமுடையவர் இந்த நூலாசிரியர் தர். இந்த நூலில் 158 சமையல் வகைகளை அடுக்கி இருக்கிறார். ‘சைவ உணவு தொடங்கி அசைவ உணவு வரை, வட இந்திய உணவு முதல் தென்னிந்திய உணவு வரை வகை வகையாக பரிமாறியிருக்கிறார்' என்றுதான் சொல்ல வேண்டும். பன்னீர் பசந்து, நவரத்தின குருமா, மொகலாய சிக்கன், சிக்கன் பர்கர், பச்சை சட்னி மசாலா என நாவுக்கு சுவை தரும் வகைகள். ஓட்டல் வகைகள் போன்றிருக்கிறதே... இவைகளை வீட்டில் எப்படி சமைப்பது..? இந்த ஐயம் வேண்டாமே உங்களுக்கு. சமையல் நிபுணர் ஸ்ரீதர் இந்த நூலில் சூத்திரம் ஒன்றை சமையல் ஆர்வலர்களுக்கு கற்றுத் தருகிறார். அது என்ன? ஒரே வகை மசாலாவைப் பயன்படுத்தி ஒன்பது சமையல்களைச் செய்யலாம் என்கிறார். அதுவும் அருஞ்சுவையுடன்... நாவில் எச்சில் ஊறுகிறதா? பக்கத்தைப் புரட்டுங்கள். மொத்த வித்தையையும் கற்றுக் கொள்ளுங்கள். இனி உங்கள் சமையல் அறை உங்களுக்கு மகுடத்தைச் சூட்டுவது நிச்சயம்.
RS. 130 More...by கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்
அரிசி சாதம் சர்க்கரை நோய்க்கு அதிகம் வழிவகுக்கிறது என்று மருத்துவ உலகம் சொல்கிறது. ஆனால் எந்த அரிசி அந்த அபாயத்துக்குக் காரணமாகிறது? தமிழர்களின் பாரம்பர்ய அரிசி வகைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்தபோது அந்த அரிசி வகைகள் அனைத்தும் எந்த நோயையும் ஏற்படுத்தியதில்லை. இரண்டு தலைமுறைக்கு முன்னால் இருந்த நம் முன்னோடிகளுக்கு சர்க்கரை நோய் என்றால் என்னவென்றே தெரியாது... காரணம் அவர்கள் உண்டது உன்னதமான, ஆரோக்கியத்தை அள்ளித் தந்த தமிழர்களின் பாரம்பர்ய அரிசி வகைகளைத்தான். பல்லாயிரம் வகை பாரம்பர்ய அரிசி வகைகள் மறைந்துபோனாலும் இன்னும் சில அரிசி வகைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தவிர்த்துவிட்டு பாலிஷ் போடப்பட்ட பளபளப்பான அரிசியை உண்பதால்தான் சர்க்கரை நோய் போன்ற சகல நோய்களுக்கும் காரணம். நம் நலம் காக்கும் பாரம்பர்ய அரிசிகளையும் அவை தரும் பல நன்மைகளையும் விளக்குகிறது இந்த நூல். ‘புரதம், விட்டமின்கள், தாது உப்புகள் உள்ள தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம்போல மினுமினுக்கும்...’ இப்படி ஏராளமான ஆரோக்கியங்களை மட்டுமே தந்து உடலுக்கு வலிவும் பொலிவும் தரும் பாரம்பர்ய அரிசி வகைகளால், சுவையான பல உணவு வகைகளை செய்யலாம் என்பதை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். பாரம்பர்யத்தோடு நம் ஆரோக்கியத்தையும் காப்போம்!
RS. 88 More...by கே.ஸ்ரீதர்
சமீபகாலமாக ‘உணவே மருந்து’ என்னும் சொல் உலகெல்லாம் ஓங்கி ஒலித்து வருகிறது. நம் முன்னோர்களும் இதைத்தான் சொன்னார்கள். இதையே செய்தார்கள். உணவை மருந்தாக உட்கொண்டார்கள். உடலைப் பேணிக் காத்தார்கள். ஒரு நூற்றாண்டையும் கடந்து உயிர் வாழ்ந்தார்கள். இயற்கை உணவு நம்மை வாழவைக்கும். குறிப்பாக, கடலில் இருந்து கிடைக்கும் மீன் உணவு நமக்கு வலிமை சேர்க்கும். இன்று ‘அவசியம் மீன் சாப்பிடுங்கள்' என்று சொல்லாத மருத்துவர்களே இல்லை. இதய நோய் உள்ளவர்கள், கொழுப்பு அதிகரித்து உடல் பருமனாகிப் போனவர்கள் யாவருக்கும் மீன் உணவு ஒரு வரப்பிரசாதமாகும். மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, உடல் திடம், புத்திக் கூர்மை என்று மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மீன் உணவு. மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள ‘ஒமேகா-3’ என்ற ஒரு வகை திரவ சக்தி, வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்த நோயும் அண்டாமல் இருக்க, இந்த திரவ சக்தி பெரிதும் உதவுகிறது. அமெரிக்காவில் தாய்மார்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளைவிட, அறிவுக்கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. நெய்தல் நிலமான கடலில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு, கனவா போன்ற அசைவ உணவு வகைகளை சுவையாக பல விதங்களில் சமைப்பது எப்படி? அதாவது நாவிற்கு இனிய ருசியாக சமைப்பது எப்படி? என்ற ரகசியத்தை இந்த நூல் நமக்குச் சொல்லித் தருகிறது. புகழ்பெற்ற சமையற் கலை வல்லுநர் செஃப் தர் அவர்கள் பல்வேறு சுவை நுணுக்கங்களைக் கற்றறிந்தவர். எண்ணற்ற கடல் உணவு வகைகள் நமக்காக காத்திருக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு சுவை அறிய... பக்கத்தைப் புரட்டுங்கள்!
RS. 172 More...by ஜெயஸ்ரி சுரேஷ்
உணவே மருந்து என்னும் தத்துவம் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இச்சூழலில் நமது பாரம்பரிய உணவு முறைகளுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே வருகிறது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இயற்கை வழியில் உடலை பேணிக்காக்க உயிர்ச்சத்துள்ள சிறுதானியங்கள் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள். நம் முன்னோர்கள் நோயற்ற வாழ்வு வாழ்ந்ததற்கு இந்த சிறுதானிய சமையலே காரணமென்றால் அது மிகையாகாது. உடலுக்குக் கேடு விளைவிக்காத, ஊட்டச்சத்து மிகுந்த குதிரைவாலி, சாமை அரிசி, கேழ்வரகு, கொள்ளு போன்ற சிறுதானியங்கள் மனிதனை நூறு ஆண்டு வாழ வைக்கும் அற்புத சக்தி மிகுந்தவை. இன்றுள்ள சூழலில் நமக்குத் தேவை சிறுதானிய சமையல் வகைகளே. பீட்சா, பர்கர் போன்ற துரித சமையல் வகைகளுக்கு அடிமைப்பட்ட நம் நாக்கு சிறுதானியங்களை ஏற்குமா? இந்த சிறுதானியங்களைச் சமைக்க வேண்டிய முறையில் சமைத்தால் நம் நாவிற்கு சுவை கூடும். தாது சத்துக்கள், புரதச் சத்துக்கள் நிறைந்த சிறுதானிய சமையல் வகைகள் நம் உள்ளத்தில் எழுச்சியையும், உடம்பிற்கு ஆரோக்கியத்தையும் தரும் வல்லமை வாய்ந்தவை. இந்த அற்புத சமையலை எப்படி செய்யலாம்? எவ்வாறு உண்ணலாம்? என்று வகை வகையாக இந்நூலில் அடுக்கியிருக்கிறார் ஜெய சுரேஷ். உடல்நலம் காக்க விருப்பப்படுபவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த அரிய புத்தகம்.
RS. 91 More...