வெற்றி வெளியே இல்லை

by:த.இராமலிங்கம்
Synopsis

விடியும் பொழுது, யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. ஒவ்வொரு பொழுதையும் தனக்கான விழுதாகப் பயன்படுத்தி வாழ்வில் வளம் சேர்ப்போரும் உண்டு. அதையே பழுதுபடுத்திவிட்டு படுத்து உறங்குவோரும் உண்டு. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனிதத்தின் மாண்பை உணர்ந்து உழைக்க வேண்டும் என்பதையே, ‘கனவு காணுங்கள்!’ என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். ‘நீ தூங்கும்போது காண்பதல்ல கனவு; உன்னை எது தூங்கவிடாமல் செய்கிறதோ, அதுதான் உன் கனவு!’ என்பதை, இன்றைய வளரும் தலைமுறையினரின் மனதில் பதிய வைக்கவரும் ஒழுக்கக் கையேடாக உருவெடுத்துள்ளது இந்த நூல். நாளும் பொழுதும் நால்வகை அனுபவங்களைப் பெற்றிடும் நமக்கு, நம்மால் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட ஒழுக்கச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு, அதற்கான சூழ்நிலைகள், தீர்வுகள் என, மனித சமூகம் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் எதிர்கொள்ளும் அனுபவங்களின் அரிய தொகுப்பு இந்த நூல். இருட்டை விரட்டும் வெளிச்சம், உழைக்காமல் வருமா உயர்வு?, உறவுகளின் உன்னதம், தேவை & பாராட்டு மழை!, திட்டமிட்டால் வெற்றி உறுதி!, ‘வள்ளுவன்’ என்றொரு நண்பன்!, நிற்க அதற்குத் தக!, பொழுது & போக்குவதற்கா... ஆக்குவதற்கா?, மௌனம் என்னும் பேச்சு!, விலங்குக்குள் மனிதம் என, அத்தியாயம் தோறும் ஒழுக்க நடைமுறைகளை வரிசைப்படுத்தி, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை சுவாரஸ்யமிக்க வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்களை கோத்து எடுத்துள்ளார் நூலாசிரியர் வழக்கறிஞர் த.இராமலிங்கம். தன் நிலையை அறிந்துகொள்ள முயற்சித்து, துவண்டுபோன ஒவ்வொருவரையும் புத்தம் புதிதாகத் துளிர்க்க வைத்து, நமக்குள் இருக்கும் வெற்றியைப் பற்றிக்கொள்ளும் திறனை நமக்கே வெளிச்சமிட்டுக் காட்டும் பொக்கிஷ ஏடுகள் இவை! படித்தால், மனிதத்தில் மாற்றம்! படித்ததை மனதில் பதியவைத்தால், வாழ்வில் ஏற்றம்!

Buy the eBook
List Price RS .115
Your price
RS .81
You save Rs. 34(29%)

You can read this item using Vikatan Mobile App: