இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்

by:தி.முருகன்
Synopsis

நடக்கவே முடியாத 77 வயது வீல் சேர் மூதாட்டி... நடைபயிலவே ஆரம்பிக்காத 9 மாதக் கைக்குழந்தை... இவர்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கத் துணியும் ஹமாஸ் அமைப்பின் போர்வெறி ஆபத்தானது. ஹமாஸ் அமைப்பிடம் அது இருக்கிறது. 23 லட்சம் பேர் வசிக்கும் காஸாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை வீதம் பலியாகிக் கொண்டிருக்கிறது. பள்ளிகள், மருத்துவமனைகளையே குறிவைத்து குண்டுகள் வீசும் இரக்கமற்ற ராணுவம் உலகில் வேறு எந்த நாட்டிடமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இஸ்ரேலிடம் அது இருக்கிறது. இந்த இரண்டு தரப்பினருக்குமான போரில் பெரும்பாலும் பலியாவது அப்பாவிகளே! சென்ற நிமிடம் வரை மகிழ்ச்சியாகப் பேசிய மனைவி குண்டுவீச்சில் புதைந்துவிட, இடிபாடுகளின் மீது நின்று கதறும் கணவன்... குழந்தையின் பிறந்தநாள் கேக் வாங்கும் அந்த நொடியில் ரத்தம் கசியும் குழந்தையின் உடலை ஏந்தியபடி கண்ணீர் சிந்தும் தகப்பன்... இறந்து வெறும் புள்ளிவிவர எண்களாகப் பதிவாகியிருக்கும் ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு துயரக்கதை. போர்க்கருவிகளுக்கு உணர்வு கிடையாது, இதயமும் கிடையாது. எதிரே இருப்பது ஏதுமறியா குழந்தையா, படுக்கையில் கிடக்கும் நோயாளியா என்றெல்லாம் தெரியாது. எவரையும் கொல்லும். அவற்றைப் பயன்படுத்துவோரும் இதயங்களைக் கழற்றி வைத்துவிடுகிறார்கள். இதுவரை சுமார் 13,000 பேரைக் கொன்றிருக்கும் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி உலகெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், மனசாட்சியற்ற போர் தொடர்கிறது. இந்தப் போரின் தொடக்கப்புள்ளி என்ன? பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலுக்கும் என்ன பிரச்னை? அண்டை நாடுகள் என்ன செய்கின்றன? இந்த மோதல் எப்போது நிற்கும்? எல்லாவற்றையும் விவரிக்கும் ஒரு தொகுப்பு இது.

Buy the eBook
List Price RS .49
Your price
RS .49
You save Rs. 0(0%)

You can read this item using Vikatan Mobile App: