கழுகார் பதில்கள்

by:விகடன் பிரசுரம்
Synopsis

‘சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல’ - ஜூனியர் விகடன் இதழ் செயல்பட்டு வருவதை அதன் லட்சக்கணக்கான வாசகர்கள் அறிவார்கள். ‘தமிழ் மக்களின் நாடித் துடிப்பு’ என்று அதன் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம், வாசகர்களால் வழங்கப்பட்ட முத்திரை வரிகள்தானே! ஜூ.வி. இதழ்களில் வெளியாகும் ‘மிஸ்டர் கழுகு’ ஒரு மகுடம் என்றால், அதில் வைரமாக ஜொலிப்பது ‘கழுகார் பதில்கள்’! ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவரின் 2000 ஆண்டு இலக்கணத்துக்கு உதாரணமாக, நடுநிலை தவறாமல், வேண்டியவர் வேண்டாதவர் பாகுபாடு பார்க்காமல் துணிச்சலுடன் ‘கழுகார்’ சொல்லிவரும் பதில்கள், தமிழக அரசியல் வாசகர்களின் அறிவுச் சூழலை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதாக அமைந்துள்ளன. 2011 ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ‘கழுகார் பதில்கள்’ பகுதி மட்டும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவை அந்தந்த வாரத்து நாட்டு நடப்புகளுக்கான விமர்சனங்களாக இல்லாமல், எதிர்காலத்தையும் வழிநடத்தும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளன. கடந்த காலச் சீர்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக வரலாற்றுப் புத்தகத்தின் தன்மையையும், நிகழ்காலத்தை விமர்சிப்பதால் செய்திப் புத்தகமாகவும், அரசியல், சமூக, பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவதால் நல்லதோர் அரசியல் வரலாற்று ஆசிரியனாகவும் அமைந்துவிட்டது. இப்படி ஒரு முப்பரிமாணத்தை எட்டி உள்ள புத்தகம் இது! அணிந்துரை எழுதியுள்ள திரு. தமிழருவி மணியன் அவர்கள் ‘இந்தப் புத்தகம் வெளிவருவதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு’ என்று எழுதி உள்ளார். அந்த மகிழ்ச்சியை அனத்து வாசகர்களும் கட்டாயம் அடைவார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்.

Buy the eBook
List Price RS .90
Your price
RS .63
You save Rs. 27(30%)

You can read this item using Vikatan Mobile App: