சொந்த வீடு

by:நீரை. மகேந்திரன்
Synopsis

வாடகை வீட்டில் இருப்பதில் பல அசௌகரியங்கள் உண்டு. எப்போது வீட்டுக்காரர் காலி செய்யச் சொல்லுவாரோ என்ற பயம் அடி மனதில் எப்போதும் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் காலி செய்யலாம் என்பதால் நம் இஷ்டத்துக்குச் சில பொருட்களைக்கூட வாங்க முடியது. ஆகவே, கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டுமானால் சொந்த வீடுதான் கட்ட வேண்டும். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். சொந்த வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதில் பல சிரமங்கள் இருப்பதால் அது கனவாகவே இருக்கும். அந்தக் கனவை நனவாக்கும் விதமாக இந்த நூலை எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் நீரை. மகேந்திரன். வீட்டு மனையை எப்படி வாங்க வேண்டும், மனையின் நாற்புற அளவுகளும் வெவ்வேறு அளவில் இருந்தால் எதனால் அதை வாங்கக் கூடாது, மனையை வாங்குவதற்கு முன் எப்படித் தேர்ந்து எடுப்பது, எப்படிப் பார்வையிடுவது, எந்தக் காலத்தில் போய்ப் பார்த்தால் பிற்காலத்தில் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம், மனையை வாங்குவதற்கு முன் எப்படி ஏமாறாமல் இருக்கலாம், எந்தெந்தப் பத்திரத்தைப் பார்வையிட வேண்டும் போன்ற சகல விஷயங்களையும் எழுதியிருக்கிறார். வீட்டு மனையை வாங்குவதில் தொடங்கி வீடு கட்டிக் குடியேறுவது வரை அத்தனை விஷயங்களையும் விளக்கி எழுதியிருக்கிறார். வீட்டைக் கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வரைபடம் தயாரித்தல், அதில் சிக்கல் இல்லாமல் முடிப்பது, கட்ட ஆரம்பிப்பதற்கு முன் பெற வேண்டிய மின் இணைப்பு, தண்ணீர் வசதி, கட்டும்போது கமர்ஷியல் அடிப்படை மின் இணைப்பு, கட்டி முடித்தவுடன் அதை வீட்டு உபயோகத்துக்கு மாற்றிக்கொள்வது, கட்டும்போது எந்தெந்தக் கட்டுமானத்துக்கு செங்கலோ, சிமென்டோ எப்படிப் பயன்படுத்துவது போன்ற நுணுக்கமான விஷயங்களை எழுதியிருக்கிறார். நாணயம் விகடனில் தொடராக வந்து பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் உங்கள் கைகளில் நூலாக இப்போது தவழ்கிறது. இந்த நூல் உங்கள் நிழலில் உங்களை வாழ வைக்கப்போவது உறுதி!

Buy the eBook
List Price RS .105
Your price
RS .74
You save Rs. 31(29%)

You can read this item using Vikatan Mobile App: