Cart is Empty
எப்போதுமே ஜோக் புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடியும். புன்னகைத்துக் கொண்டே ஜாலியாக பக்கங்களைப் புரட்ட முடியும். அதுமட்டுமல்ல, மன அழுத்தம் ஏற்பட்டு சோர்ந்து உட்கார்ந்திருக்கும் வேளையில் ஜோக் புக் ஆறுதலான ஒரு மருந்து. ஆரம்பகாலம் முதல் ஆனந்த விகடனில் வெளியாகிவரும் ஜோக்குகளை விரும்பிப் படிக்கும் வாசகர் வட்டம் மிகப் பெரியது. இன்று வரையில் அது தொடர்ந்து வருகிறது. விகடனில் வெளியான ஜோக்குகளைத் தொகுத்து அவ்வப்போது கையடக்க நூல்களாக வெளியிட்டு வருகிறது விகடன் பிரசுரம். அந்த வகையில், 2009_ம் ஆண்டில் விகடனில் வெளியான ஜோக்குகளில் 300_ஐ இந்த நூலில் தொகுத்திருக்கிறோம். இதில் உள்ள ஜோக்குகளை படிப்பதோடு உங்கள் சுற்றத்தாரிடமும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவும், பரிசு அளித்து மகிழவும் இந்த நூல் உங்களுக்கு உதவும்!