வாழ்க மரம்... வளர்க பணம்!

by:இரா.ராஜசேகரன்
Synopsis

மரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொடங்கி, மேசை, நாற்காலி, பீரோ, கட்டில், ஜன்னல், கதவு என்று அனைத்து வீட்டு உபயோகத்துக்கும் மரங்கள் ஆற்றும் பெரும் பங்கு கணக்கில் அடங்காது. அப்படிப்பட்ட மரங்கள் வாழ்ந்தால் நாமும் வாழ்ந்து நம்முடைய பணமும் வளரும் என்று பசுமரத்தில் ஆணி அடித்தாற் போல் சொல்கிறது இந்த நூல். எளிய நடையில் ஆர்வமுடன் அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு சுவாரஸ்யத்தோடு அளித்துள்ளார் நூலாசிரியர் இரா.ராஜசேகரன். ஆல், அரசு, இலுப்பை போன்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இலுப்பை பூ, விதை, இலை அனைத்தும் மருந்துப் பொருட்களாகவும், ஜாம், ஜெல்லி, களிம்பு, ‘சிரப்’ தயாரிக்கவும் பயன்படுகிறது. விதையிலிருந்து சமையல் எண்ணெயும், பிண்ணாக்கிலிருந்து ஷாம்பூவும் (அரப்பு) கிடைக்கிறது. பழங்களாகவும் மருந்தாகவும் பயன்படுவதோடு, காகிதம், பென்சில், தீப்பெட்டி, தீக்குச்சி எனப் பல வகையான பொருட்களுக்கு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது கடம்பு. கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். பல அணுஉலைக் கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இது பயன்-படுகிறது. இப்படி பல்வேறு மரங்கள், ‘பணம் காய்க்கும், உயிர் காக்கும் மரங்க’ளாக விளங்குகிறது! பசுமை விகடனில் ‘வாழ்க மரம்... வளர்க பணம்!’ தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது. விவசாயிகள் மட்டுமல்ல அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நூல் இது.

Buy the eBook
List Price RS .105
Your price
RS .74
You save Rs. 31(29%)

You can read this item using Vikatan Mobile App: