Cart is Empty
இனியெல்லாம் இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... என்று இந்தப் பூமிப் பந்திலிருக்கும் ஜீவராசிகள் ஒவ்வொன்றும் அனுபவிக்கும் இன்னல்களே இதற்கு சாட்சி. மனித இனம், இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டதன் விளைவுதான் இது என்று பலரும் எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால், அது அனைவரின் காதுகளிலும் ஏறிவிடுகிறதா...? 'ஊருக்கு ஒண்ணு வந்தா... அது எனக்கும் வந்துட்டுப் போகட்டும்...' என்ற அலட்சிய மனப்பான்மை கிட்டத்தட்ட அனைவரையுமே தொற்றிக் கொண்டுவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை. இத்தகைய போக்குக்கு எதிராக, பலரும் வில்லெடுத்து போர் தொடுத்த வண்ணம் உள்ளனர். 'இனி இயற்கைதான் இந்த பூமிக்கே சோறு போடும்... அதை நாம் மதிக்க வேண்டும்... வாழ்க்கையை அதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்...' என்று முழங்கி வருகின்றனர். இயற்கைக்கு ஆதரவான வேலைகளை வேளாண்மையில் இருந்துதான் முதலில் தொடங்க வேண்டும். காரணம், இயற
Get top stories and blog posts emailed to me each day