விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி

by:நீ.செல்வம்
Synopsis

‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த நூல்! பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது, பூச்சிகள்தான். அதற்காக, எல்லா பூச்சிகளும் பயிர்களுக்குக் கெடுதல் செய்யும் வில்லன்கள் இல்லை. உங்கள் பயிர்களை அந்த வில்லன்களிடமிருந்து காப்பாற்றும் கதாநாயகர்களும் உங்கள் வயலிலேயேதான் இருக்கிறார்கள். யார் கதாநாயகன், யார் வில்லன்? என்பதை மட்டும் தெரிந்துகொண்டால், விவசாயத்தில் மற்றது எல்லாம் உங்களைப் பொறுத்தவரை சுண்டைக்காய்தான். ஆம், இன்றைய விவசாயத்தின் மாபெரும் சவால் பூச்சிகள்தான்! பச்சைப் புழு தொடங்கி, இலைச்சுருட்டுப் புழு, அசுவுணிப் பூச்சி, வண்டுகள், சிலந்திகள், புகையான், குளவிகள், ஒட்டுண்ணிகள் என்று பூச்சிகளைப்பற்றி எளிய நடையில் சொல்லியிருக்கிறார் நூல் ஆசிரியர் நீ.செல்வம். மேலும், பூச்சிகளின் செயல்பாடுகள், நன்மை-தீமைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாகத் தெளிவுபடுத்துகிறார். பூச்சிக்கொல்லிகளுக்காக நீங்கள் செலவழிக்கும் தொகையைக் குறைத்து, மகசூலைப் பெருக்கும் வழி வகைகளை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. பசுமை விகடனில் வெளிவந்த ‘பூச்சிகளும் நம் நண்பர்களே!’ தொடர், இப்போது ‘விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி!’ எனும் நூல் வடிவில் உங்கள் கைகளில்! பூச்சிகள் நிகழ்த்தும் புரட்சியை இந்த நூலில் படிக்கும் நீங்கள், உங்களின் விவசாய மண்ணில் நிச்சயம் இத்தகைய புரட்சியைப் படைப்பீர்கள்.

Buy the eBook
List Price RS .110
Your price
RS .77
You save Rs. 33(30%)

You can read this item using Vikatan Mobile App: