தேவதைக் கதைகள்

by:கே.முரளிதரன்
Synopsis

‘ஒரு ஊரில்...' என்று பாட்டி சொன்ன கதை முதல் இன்று வரை கதை சொல்லல் இனிது, கதை கேட்டல் அதனினும் இனிது. கதை கேட்கும் ஆர்வம் ஆதி காலந்தொட்டே மக்களுக்கு இருந்தது. குறிப்பாக சிறுவர்களுக்கு கதை கேட்கும் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குழந்தைகளுக்கு கதை சொல்லி நிலாவைக் காட்டி அம்மாக்கள் சோறூட்டிட, பாட்டிகள் கதை சொல்லி உறங்கவைத்த பழக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது. இன்று தொலைக்காட்சிகளில் டோரா புஜ்ஜிகள் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கதைகளால் சிறுவர்களுக்கு சந்தோஷத்தையும் அதன் மூலம் அவர்கள் உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களையும் விதைக்க முடியும். கதைகள் மன அழுத்தத்தைக் குறைப்பவை, மகிழ்ச்சியை, புத்துணர்வைக் கொடுக்கக் கூடியவை. கதை கேட்டு வளர்ந்த சமூகம் மிகவும் விழிப்பு உணர்வு பெற்றதாக இருந்தது. சிறுவர்கள் மட்டுமல்ல கதைகளால் களிக்கும் பெரியோர்களும் உண்டு... கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வகைகளில் சொல்லப்பட்டு வந்தன. இன்றுவரை கதைகளில் ஆர்வமில்லாதவர்கள் இருக்கவே முடியாது. புராணக் கதைகள், ராஜாக்களின் கதைகள், நீதிக் கதைகள், சாகசக் கதைகள், புனைவுக் கதைகள்... என எல்லா விதமான கதைகளை எல்லோரும் கேட்டிருப்போம். அந்த வரிசையில் சுட்டி விகடனில் குட்டீஸ்களுக்காக வெளிவந்த தேவதைக் கதைகளும் அதனுடன் புதிய கதைகளும் சேர்ந்து இப்போது நூலாகியிருக்கிறது. குழந்தைகள் தேவதை போன்றவர்கள், அந்த தேவதைகளை உற்சாகப்படுத்தும், உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும், இந்த தேவதைக் கதைகள்!

Buy the eBook
List Price RS .105
Your price
RS .74
You save Rs. 31(29%)

You can read this item using Vikatan Mobile App: