இயற்கை வைத்தியம்

by:எம்.மரியபெல்சின்
Synopsis

இயற்கை இன்றி உயிர்கள் இல்லை... இயற்கையோடு ஒன்றி வாழும் சூழல்தான் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இயற்கையை நாம் பாதுகாத்தால் அது நம்மைப் பாதுகாக்கும். உழைப்பில்லாமல் முன்னேறத் துடிக்கும் மனிதனின் பேராசையினால் விவசாய நிலம் சுருங்கி உணவு உற்பத்தியும் குறைந்துவிட்டது. காற்று மாசுபடுவது மட்டுமின்றி செயற்கை உரத்தால் நிலமும் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. இயற்கையைக் காப்பது குறித்த விழிப்புஉணர்வு பரவி வந்தாலும், இன்னும் ஒருசாரார் இயற்கை பேணல் குறித்து அறியாமலே இருக்கின்றனர். இயற்கை தந்த அனைத்து செடி-கொடிகளும் மனிதனுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன என்பதை இந்த நூலைப் படித்த பிறகு உணர்ந்துகொள்ளலாம். ‘நம்மைச் சுற்றி இருக்கும் சிறிய செடிகள் முதல் பெரிய மரங்கள் வரை அனைத்துமே நமக்கு வலி நீக்கும் நிவாரணியாகவும், பிணி போக்கும் மருந்தாகவும், சுவை தரும் உணவாகவும் இருக்கின்றன' எனும் ஆச்சரியமூட்டும் தகவல்களைக் கொடுக்கிறது இந்த நூல். கண் எரிச்சலை நீக்கும் பொன்னாங்கண்ணி, வயிற்று வலியை நீக்கும் புதினா, பல், எலும்புகளை உறுதியாக்கும் கறிவேப்பிலை, கரு உண்டாக உதவும் வில்வம், காமாலையை விரட்டும் மூக்கிரட்டை, தோல் நோய்களைப் போக்கும் பூவரசு, சளியை விரட்டும் தூதுவளை... இப்படி எந்தெந்த மூலிகைகளில் என்னென்ன நோய் குணமாகும் என்பதை எளிமையாக விளக்கும் நூல் இது. இயற்கையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு அதைப் பேணிக் காத்தால், வளமாக நலமாக வாழலாம்.

Buy the eBook
List Price RS .180
Your price
RS .125
You save Rs. 55(30%)

You can read this item using Vikatan Mobile App: