உணவோடு நலம் நாடு

by:மருத்துவர் வி.விக்ரம்குமார்
Synopsis

உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒருசேர உதவி புரிபவை அஞ்சறைப் பெட்டியின் எளிமையான பொருள்கள். உணவே மருந்து, மருந்தே உணவு என வாழ்ந்து, உணவுப் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்களை தரணிக்குச் சொன்னது நம் தமிழ்ச்சமூகம். `சீரகம் இல்லா வீடும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது’, `பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்’ போன்ற முதுமொழிகள் அஞ்சறைப் பெட்டிப் பொருள்களின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. சிறிய உபாதைகள் முதல் உயிரைப் பறிக்கும் புற்று நோய் வரை நம்மைக் காக்கும் மகத்துவம் கொண்டவை நம் பாரம்பர்ய உணவுப் பொருள்கள். உதாரணமாக, குடல்பகுதியில் இருக்கும் புழுக்களை அழித்து வெளியேற்றும் ஓமம், புற்றுநோய் வராமல் தடுக்கும் வால் மிளகு, வயிறு மற்றும் குடல் பகுதிகளில் பாதுகாப்பு அரணாக விளங்கும் வசம்பு... போன்ற எளிமையான உணவுப் பொருள்கள் நம் ஆரோக்கியத்தின் அரண்கள். உணவுக்குச் சுவையையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்கும் உணவுப் பொருள்களின் வரலாற்றையும் அவற்றின் பயன்களையும் விளக்கி, அவள் விகடனில் வெளிவந்த அஞ்சறைப் பெட்டி கட்டுரைகளில் சில ஏற்கெனவே ‘அஞ்சறைப் பெட்டி' எனும் தொகுப்பு நூலாக விகடன் பிரசுரம் வெளியிட்டது. அந்தக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு நூல் இது. சுவையுடன் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் உணவுப்பொருள்களை அறிய வாருங்கள்!

Buy the eBook
List Price RS .150
Your price
RS .150
You save Rs. 0(0%)

You can read this item using Vikatan Mobile App: