Cart is Empty
மனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு பெற்று நிற்கும். ‘சக்தி விகடன்’ இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அப்படிப்பட்ட பதில்களை தொடர்ந்து அளித்து வருகிறார் நூலாசிரியர் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். தொடர்ந்து அவை நூல் வடிவம் பெற்று வருகின்றன. சடங்குகள், சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள், வீட்டு விசேஷங்கள், வழிபாட்டு முறைகள், வேதங்கள், புராணங்கள் போன்றவற்றில் ஏற்படும் ஐயங்களுக்கு, எளிய நடையில் ஆழமான கருத்துகளை விளக்குகிறது இந்த நூல். வலதுகாலை எடுத்துவைத்து வரச்சொல்வது ஏன்? தாவரங்கள் சைவமா, அசைவமா? முதுமையில்தான் காசிக்குப் போகவேண்டுமா? நான்காம் பிறையை ஏன் பார்க்கக் கூடாது? ராகுகாலத்தில் பிறந்தால் யோகமா? ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா? _ இப்படிப்பட்ட ஆன்மிகம் சம்பந்தமான கேள்விகளுக்கு, இந்த நூலில் பதில் கிடைக்கும். ஏற்கெனவே, ‘ஐயம் போக்கும் ஆன்மிகம்’ எனும் தலைப்பில் மூன்று பாகங்கள் விகடன் பிரசுரத்தில் வெளியாகி, வாசகர்களிடம