Cart is Empty
சைனீஸ் ஃபிரைட் ரைஸ், முட்டை பிரியாணி, கோழி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி... பட்டியலைப் பார்க்கும்போதே ஏக்கம் பிறக்கிறதா? பன்னாட்டு அசைவ உணவுகளையும் பந்தி வைக்கும் இந்த நூல், அசைவ உணவு விரும்பிகள் அனைவருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய அவசிய வழிகாட்டி என்றால், அதில் எள் அளவும் மிகையில்லை. ஹோட்டல், விருந்தினர்களின் வீடுகள்... உள்ளிட்ட வெளி இடங்களில் சாப்பிடும்போது, இந்த உணவு சரியானதுதானா, சத்தானதுதானா என்கிற பலவிதமான குழப்பங்களும் மனதுக்குள் அலையடிக்கத் தவறுவதில்லை. குறிப்பாக, அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது, ‘இது நல்லதா, கெட்டதா?’ எனப் புரியாமல் நாம் திண்டாடிப்போகிறோம். இதற்கெல்லாம் தக்க பதில் தரும் விதத்தில் வீட்டிலேயே செய்து பார்க்கத்தக்க சுவை மிகுந்த அசைவ உணவுகளை விதவிதமாகப் பட்டியல் போடுகிறது இந்த நூல். சீனாவின் நண்டு சூப், இறால் சூப், மிளகுத் தண்ணீர், ஆட்டுக்கால் சூப், பிலிப்பைன்ஸ் கறி உருண்டை சூப், சிக்கன் சூப், ஃபிரான்ஸின் சிக்கன் சூப் போன்ற சூப் வகைகளும், தொடக்க உணவுகளான தாய்லாந்தின் மீன் கேக், டென்மார்க்கின் கறி கட்லட், சீனாவின் டெவில் சிக்கன், ஸ்வீட் அண்ட் சவர் கோழி கெபாப், இந்தோனேஷியாவின் இறால்&வேர்க்கடலை பஜ்ஜி... என இந்தப் புத்தகத்தில் நிரம்பி இருக்கும் உணவுத் தயாரிப்புகளைப் படிக்கும்போதே நாவில் எச்சில் சுரக்கும். அதோடு, பலவிதப் பிரியாணி வகைகளையும் பட்டியல் போட்டு மிக எளிதாக எல்லோரும் செய்து பார்க்கும் அளவுக்கு விளக்கி இருக்கிறார் சாந்தா ஜெயராஜ். அசைவ உணவு விரும்பிகளுக்கான அசத்தல் பரிசு, இந்த நூல்!