Cart is Empty
அசைவம் சாப்பிடுபவர்களில் மீனை விரும்பிச் சாப்பிடாதவர்கள் இல்லை. இறைச்சியைத் தொடாதவர்கள் கூட மீனைச் சாப்பிடுவார்கள். இந்த நூலில் மீன் சமையல் பக்குவத்தை விவரிக்கிறார் நூலாசிரியர் எம்.ஷம்ஷாத் பேகம். எந்த உணவுமே சுவையாகச் சமைப்பதில் பாதி நுட்பம் இருக்கிறது. மீதி பாதி அதற்காக சமையல் சாமான்களை தயாரிப்பதில் இருக்கிறது. மீனை செதில்கள் இல்லாமலும் முதலில் உரசிக்கொண்டும் முள் அகற்றியும் சமைப்பதற்கு முன் தயார் செய்துகொள்ள வேண்டும். மீன் வாடை போவதற்கு முன் முக்கியமாக மஞ்சள் தூள் பொடி போட்டு அலச வேண்டும்... அதிகமாக வேக வைத்தால் மீன் பொடிப்பொடியாகிவிடும்... போன்ற அத்தனை முன் ஏற்பாடுகளும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. இன்னின்ன சாமான்கள்தான் போட வேண்டும் என்று கண்டிப்பு இல்லாமல் தேவையான இடங்களில் வாசகர்கள் விருப்பப்படி மாற்று சாமான்களைப் போட்டுக்கொள்ள வழியும் சொல்லியிருக்கிறார். மீன் கண்ணுக்கு நல்லது என்பதால் மீனைச் சேர்க்காமல் அசைவ உணவு முழுமை பெறாது. டாக்டர்கள் கூட மீன் எண்ணெய் சாப்பிடச் சொல்கிறார்கள். ஆகவே மீனை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சமைத்துப் பாருங்கள்... சுவைப்பது சுலபம்
Get top stories and blog posts emailed to me each day