குட்டீஸ் கிச்சன்

by:ஜெயஸ்ரீ சுரேஷ்
Synopsis

கோடை, மழை, குளிர், பனி என காலங்களுக்கு ஏற்ப உணவு முறைகள் மாறுகின்றன. என்றாலும் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பது என்பது எல்லாக் காலங்களிலும் அம்மாக்களுக்கு சவாலான விஷயமே! குழந்தைக்கு பால் கொடுப்பது முதற்கொண்டு காய்கறிகள், கீரைகள், பழங்கள், கிழங்குகள் என சத்தான உணவுகளை சுவையாக சமைத்தாலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவை கண்டுபிடிக்க ஒவ்வொரு தாயும் குழந்தைகளின் மூளைக்குள் புகுந்து யோசிக்க வேண்டியிருக்கிறது. அப்படி யோசித்து, தயாரித்து - பள்ளிக்குச் செல்லும் பிள்ளைக்குக் கொடுத்தனுப்பினால் அவர்கள் திரும்ப அப்படியே கொண்டு வரும்போது அதைப்பார்த்து கோபப்படுவதா, பிள்ளை சாப்பிடவில்லையே என வருத்தப்படுவதா அல்லது சுவையாகக் கொடுக்கவில்லையோ என குழம்பி நிற்கிற நிலைமைதான் ஒவ்வோர் அம்மாவுக்கும். அப்படிப்பட்ட அம்மாக்களின் கவலையைப் போக்கி, காலை உணவு, மதிய உணவு, மாலை நேரச் சிற்றுண்டி என மூன்று வேளையும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு என்ன பிடிக்கும்? குடிப்பதற்கு என்ன பிடிக்கும்? என யோசித்து, குழந்தைகள் விரும்பும் வகையில் உணவு வகைகளைத் தயாரிக்கும் முறைகளைக் கூறுகிறார் நூலாசிரியர். இந்த உணவு வகைகளை ஆறு வயது முதல் இருபது வயதினர் வரை அனைவரும் விரும்பி உண்ணலாம் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். எல்லா வகை சத்தான பொருட்களையும் இணைத்து, குழந்தைகள் சாப்பிட மறுக்கும் பீட்ரூட்டை தோசையுடனும், கீரையை பூரியுடனும், முட்டைக்கோஸை வடையுடனும் வெண்டைக்காயை மசாலாவுடனும் இணைத்து, வெஜிடபுள் ராப்ஸ், சாக்லேட் பான் கேக், பிஸ்கட் மில்க் ஷேக், புராக்கோலி பனீர் பரோட்டா, ஃப்ரூட் பேல் பூரி, உருளைக்கிழங்கு முறுக்கு, ரோஸ் குல்கந்த் லஸி என குழந்தைகளைக் கவரும் விதத்தில் சொல்லியிருப்பது நூலின் கூடுதல் சிறப்பாகும். சத்தான உணவை குழந்தைகள் சுவைத்து சாப்பிட்டால், தாய்மார்கள் அடையும் திருப்தியை விட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்?

Buy the eBook
List Price RS .140
Your price
RS .98
You save Rs. 42(30%)

You can read this item using Vikatan Mobile App: