பொதுத் தமிழ்க் களஞ்சியம்

by:டாக்டர் சங்கர சரவணன்
Synopsis

மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வினாத்தாள்கள் தயாரித்து வருகின்றன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளைக்கூட தமிழில் எழுதலாம் என்பது நடைமுறையில் இருக்கிறது. TNPSC - குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுக்காக ஏற்கெனவே ‘பொது அறிவுக் களஞ்சியம்’ என்கிற நூலை வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். போட்டித்தேர்வு எழுதுவோரிடம் இருந்தும், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது, TNPSC - குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்காக, பொதுத் தமிழ்ப் பாடத்தை மட்டுமே மையமாக வைத்து வெளிவந்திருக்கும் நூல்தான் இந்தப் ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’. தமிழ்ப் பாடங்களை எவ்வளவுதான் கரைத்துக் குடித்திருந்தாலும், ‘தேர்வு’ என்றவுடன் லேசான பயம் பற்றுவது இயல்பு. ஆனால், இந்த நூலைப் படித்தவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வுக் களத்தில் குதிக்கலாம். பத்தாம் வகுப்புத் தரத்திலிருந்து பட்டப்படிப்புத் தரம் வரை அமைந்த போட்டித் தேர்வு பொக்கிஷமான இந்த நூலில், பொதுத் தமிழ்ப் பாடத் திட்டம் பல்வேறு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டு, விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாதிரி வினா&விடை அளித்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழ்ப் பாடம் குறித்த அடிப்படை தொடங்கி, இலக்கணம் தொடர்பான ஒவ்வொரு வார்த்தைக்கும் உரிய விளக்கங்களோடு, இதுவரை வெளிவராத நுணுக்கமான தகவல்களையும், அழகிய தமிழில் பழகிய வார்த்தைகளைக் கொண்டு தொகுத்து எழுதியிருக்கிறார் டாக்டர் சங்கர சரவணன். ஆன்றோர்களும் சான்றோர்களும் பாராட்டும்படியாக அமைந்திருக்கும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் அத்தியாயம், தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள ஆர்வமாக உள்ள அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமன்றி, தமிழின் சுவைக்காகவும், தகவல்கள் அறியும் ஆர்வத்துக்காகவும் இந்த நூலைப் படிக்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறலாம். மொத்தத்தில் ஆசிரியர்கள், பள்ளி&கல்லூரி மாணவர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவருக்கும் பயனுள்ள ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’ இது!

Buy the eBook
List Price RS .450
Your price
RS .315
You save Rs. 135(30%)

You can read this item using Vikatan Mobile App: