நானே கேள்வி... நானே பதில்!

by:விகடன் பிரசுரம்
Synopsis

அரசியல், சமூகம், சினிமா, போலீஸ், கோர்ட் நடவடிக்கை என நாட்டு நடப்புகளை அவ்வப்போது கவனித்து வருபவர்கள், அந்தச் சம்பவத்தின் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு, அதை நக்கல், நையாண்டி செய்து பேசத் தோன்றும். பத்திரிகைச் செய்திகளைப் படிப்பவர்கள், அறிவுபூர்வமான பல தகவல்களை அறிந்து கொண்டு, அதை மற்றவர்களுக்கும் சுவையாகச் சொல்லத் தோன்றும். இப்படி, நமது கருத்துகளையும், நமக்குத் தெரிந்த தகவல்களையும் மற்றவர்களுக்குச் சுவாரஸ்யமாகச் சொல்ல சிறந்த வழி கேள்வி_பதில் அமைப்புதான். நாம் தெரிந்துகொள்ளும் தகவல்களே சில நேரங்களில் நமக்குள் சில கேள்விகளை எழுப்புவதும் உண்டு. அதன் அடிப்படையில், ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களுக்குள் எழுந்த தகவல்களுக்கு, அவர்களே கேள்விகளை எழுப்பி, அதற்கு ‘சுருக்’கென்று பதிலும் எழுதத் தூண்டியபோது... பிரமிக்க வைத்தனர்! உதாரணமாக, சுவாரஸ்யமான, அறிவுபூர்வமான, சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்த பதில்கள் வாசகர்களின் ரசனையை வெளிப்படுத்தின. விமரிசனங்களுக்கு உரியவர்களின் மனம் புண்படாமல், நையாண்டி செய்து எழுதி அனுப்பிய பதில்கள் ரசிக்க வைத்தன! மொத்தத்தில், சிந்திக்க வைத்த அற்புதமான கேள்விகளும், பொருத்தமான பதில்களுமாக, வாசகர்களே படைத்து அளித்த பயனுள்ள தகவல்களின் பெட்டகம்தான், ‘நானே கேள்வி... நானே பதில்!’

Buy the eBook
List Price RS .65
Your price
RS .50
You save Rs. 15(23%)

You can read this item using Vikatan Mobile App: